வெள்ளி, 22 ஜூன், 2012

நபி(ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் தோழர்(ரலி) மீதும் சுமத்தப்பட்ட அவதூறுகளும் அதற்கு நமது பதில்களும்

//பேரீத்த மர மகசூல் விஷயமாக நபி (ஸல்) அவர்கள் ஒன்றை கூறி அது தோல்வியில் முடிந்த போது, நான் சொல்வதை ஏன் கேட்டீர்கள், நீங்களே சிந்தித்து செய்திருக்க வேண்டியதானே என்று கேட்டார்களே, இது அவர்கள் மறைவானவற்றை அறியாததால் தானே?// சகோதரர் நாஷித் அஹமது


அஸ்தஃபருல்லா! என்னுடைய உயிருக்கு தோல்வியா?


 இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் பதித்துள்ள ஹதிஸ் பற்றி பிஜே கூறினது பொய்யா? ஆமாம் அது பலகினமான ஹதிஸ்.


 அல்லாவின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும், நானும் பேரிச்ச மரங்களின் உச்சியிலிருந்த சிலரை கடந்து சென்றோம். அப்போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள், அதற்கு அங்கிருந்த பெண் மரங்களுடன் ஆண்மரங்களை ஒட்டு சேர்க்கை செய்து செய்து மகசூல் செய்கின்றனர் என்றார்கள், அல்லாவின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இதனால் பயன் ஏதவது உண்டாகுமன நான் கருதவில்லை,என்றார்கள். அல்லாவின் தூதர் முஹம்மது நபி(ஸல்) கூறியதை தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் ஒட்டு சேர்க்கை செய்வதை விட்டு விட்டார்கள், அல்லாவின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவிக்கப்பட்ட போது அதனால் அவர்களுக்கு பயன் இருந்தால் அது செய்யட்டும் நான் என் யூகத்தை கூறினேன், என் யூகத்தைக் கொண்டு என்னை குற்றம் பிடிக்காதீர்கள், ஆனால் அல்லாவைப் பற்றி ஏதாவது அறிவித்தால் அதை எடுத்து கொள்ளுங்கள். நிச்சியமாக கண்ணியமிக்க மற்றும் மகத்துவம்மிக்க அல்லாஹ்வை பற்றி பொய் சொல்ல மாட்டேன் என்றார்கள், என தல்ஹா பின் உபைதில்லா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (இமாம் முஸ்லிம்(ரஹ்) பாகம் 4, ஹதிஸ் 1602)


 இதில் இக்ரிமா பின் அம்மார் என்பவர் இடம் பெருகிறார், இவர் அதிகமாக நபிமொழிகளில் குளருபடி செய்ய கூடியவர், அதிகமாக தவறு செய்ய கூடியவர், என இம்மாம் அஹமது அஹமது(ரஹ்), இமாம் எஹ்யா பின் ஸயித் கத்த(ரஹ்), இமாம் ஸலிஹ் இப்னு முகம்மது ஹசனி(ரஹ்), இமாம் அல்லாமா இப்னு ஹிரா(ரஹ்),இமாம் அல்லாமா இப்னு அம்மார்(ரஹ்), அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) கூறுகிறார்கள்,


இக்ரிமா பின் அம்மார் இவர்களின் ஹதிஸை பலர் ஏற்றலும், ஆனால் இவர் மீது பலரால் விமர்ச்சிக்கப்பட்டுள்ளார், இவருடைய ஹதிஸ் ஏற்க தக்கது அல்ல.


 இமாம் பைஹகி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், இவர் அறிவு வயதான காலத்தில் மிகவும் மோசமாகிவிட்டது,மிகவும் அறிவில் மிகவும் பலகினமானவர், இவர் அறிவிக்கும் ஹதிஸை யாரும் ஏற்க கூடாது என கூறியுள்ளார்கள்


இமாம் இப்னு ஹஜ்ம் அல் அன்ட்தலுசி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் இக்ரிம பின் அம்மார் பலகினமானவர்கள்,


 இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், மக்கள் இவர் கூறும் எந்த வார்த்தையும் ஏற்கமாட்டார்கள் அத்தவரி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் இவர் அறிவிக்கும் ஹதிஸில் பல தவறுகளும், குளருபடியும் உள்ளது.


 மேலும் இமாம் அபு ஹாதிம்(ரஹ்), இமாம் ஹபிழ் அல் அலாய்(ரஹ்), இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்), இமாம் ஜலலுதீன் அஸ் சூத்தீ(ரஹ்), இமாம் சப்ட் அல் ஹஜ்மி(ரஹ்), இமாம் அபு ஜிர அல் இராக்கி(ரஹ்), இமாம் அல் கஃரஜி(ரஹ்) போன்றவர்கள் இவர் அறிவித்த ஹதிஸ் ஏற்க தக்கது அல்ல,


மேலும் இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் இவர் அறிவிக்கும் ஹதிஸ் முத்தரிப் தரத்தில் தான் பதிவு செய்து உள்ளார்கள் என இமாம் பைஹகி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


 மேலும் இதில் மற்றொரு வழியாக சிம்மாக் இப்னு அர்ப் இடம் பெறுகிறார் அவர் மிகவும் பலவினமானர் என பதின் மூன்று இமாம்கள் குறை கூறியுள்ளர்கள். தேவைப் பட்டால் பட்டியல் இடுகிறேன்.

மேலும் அம்மாத் பின் ஸலிமா இடம் பெறுகிறர், இவர் ஹதிஸை அதிகமாக தவறு செய்யக் கூடியவர். நினைவாற்றல் குறைந்தவர்.மறதியாளர் என விமர்ச்சிக்கப்பட்டுள்ளார்.


 முஜனித் பின் ஸயித் இடம் பெற்றுள்ளார், இவர் மிகவும் பலவினமானவர் என பத்து இமாம்கள் இவரை விமர்சனம் செய்து உள்ளர்கள், இவர் ஹதிஸ் ஏற்கலாகது. என விமர்ச்சிக்கப்பட்டவர்,


இவ்வளவு விமர்ச்சிக்கப்பட்ட நபர்கள் இருந்த இந்த ஹதிஸை போய் ஆதரமாக காட்டி நபி(ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டாம் என ததஜ தலைவர் கூறுவது சரிதானா?

 இதை எல்லாம் அவர் எது சொன்னாலும் சரி என கண்ணை மூடிக்கோன்டு பின்பற்று கிறீர்களே இது உங்களுக்கு நியமாக தெரிகிறதா?


சரி பிஜே அடிக்கடி ஒரு பஞ் வசனம் ஒன்று சொல்லும், ஒரு உதரணத்திற்கு பிஜே விசயத்தில் வருவோம், குரானுக்கு மாற்றமாக பலமான ஹதிஸ் இருந்தல் ஏற்க மாட்டோம் என வீர வசனம் சொன்னது எல்லாம் உங்களுக்கு தெரியும்,

 இது பிஜேவுக்கு பலமான ஹதிஸ் என வைத்து கொள்வோம்(பலவினமானது தான் ஆனால் ஒரு வேளை பிஜேவுக்கு மட்டும்),


அல்லா தனது வேதமாகிய திருகுர்ஆனில் தனது ஹபிப் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கூறுகிறான். அவர்(நபி(ஸல்)) தம் இச்சைபடி எதையும் பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட்தேயன்றி வேறில்லை.மிக்க வல்லமுடையவர் ஜிப்ரில்(அலை) அவர்களிக்கு கற்று கொடுத்தார்கள்(53:3,4,5)


 மேலும் (நபியுடைய) இதயம் கண்டதை பற்றி பொய்யுரைக்கவில்லை ஆயினும் அவர் கண்டவற்றின் மீது நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?(53:11,12).

இதில் அல்லா உலக விசயத்தை மட்டும் கூறவில்லை, ''எதையும்'' என்ற வார்த்தையை அல்லா பயன் படுத்துகிறான். அது உலக விசயமாக இருக்கட்டும், அல்லது மார்க்க விசயமாக இருக்கட்டும். எந்த வார்த்தையும் அடங்கும்.

 அல்லாவின் வார்த்தைக்கு மறாக இருக்கும் இந்த ஹதிஸ் எடுத்து கொள்ளலாமா?

கண்மூடித்தனமாக பிஜேவைபின்பற்றினால் நரகம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


 நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் (சகபாக்கள்(ரலி)) அவர்களும் நமக்கு முன்மாதிரி


இன்னும்(இஸ்லாத்தை ஏற்பதில்) முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ் பொருந்திகொண்டான்; அவ்வாறே அவர்களும் அல்லாவை பொருந்தி கொண்டார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.(9:100),

 இதில் நல்ல முறையில், நலவுடன் அவர்களை பின்பற்றுகிறார்களோ! என்று அல்லா சொல்வதை உன் கண்கள் இருந்தும் நீங்கள் குருடானாய் இருக்கிறீர்களா? ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றி விட்டு, ஒரு சிறப்பான பிரசங்கம் நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டு கண்கள் நீரைச் சொரிந்தன; உள்ளங்கள் உருகின; அப்பொது யாரசூலுல்லாஹ்! இது விடை பெறுபவரின் பிரசங்கம் போன்றல்லவா இருக்கிறது. எனவே , எங்களுக்கு இறுதி உபதேசம் செய்யுங்கள் என்று நபித் தோழர்கள் சொன்னார்கள். அப்போது கருப்பு இனத்தைத் சார்ந்த ஒருவர் உங்களுக்குத் தலைவராக வந்தாலும் அவருக்கு நீங்கள் வழிப்படுங்கள். உங்களில் எனக்குப் பின்னால் யார் வாழ்கிறார்களோ அவர்கள் சமுதாயத்தில் அதிகமான கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்கள். அப்போது என்னுடைய வழிமுறையையும், எனது வழிமுறையை எடுத்து நடந்து நேர்வழி சென்ற கலீபாக்களின் வழி முறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அந்த வழிமுறைகைளை நீங்கள் உங்கள் கடவாய்ப் பற்களால் கவ்விக் பிடித்துக் கொள்ளுங்கள். மார்க்கத்தில் புதிதாக எதையும் உண்டு பண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக மார்க்கத்தில் புதிதாக உண்டு பண்ணப்படுபவை யாவும் வழி கேடுகளேயாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இர்பாள் பின் சாரியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவுத்(ரஹ்),அஹமத்(ரஹ்) சகபாக்கள்(ரலி)

அவர்களை பின்பற்றினால் சுவர்க்கம் தான் அல்குர்ஆனில்(9:100) அல்லா தெளிவாக குறிப்பிட்டுவிட்டான், இதன் ஒரு அத்தாட்சி ஒன்று போததா? ‎ (நபியே!) நீர் சொல்வீராக!



 "இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்." (12:108)


 நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம் என்ற வாசகத்தில் தெளிவான ஞானம் என்பதற்கு அரபியில் இடம்பெற்ற வார்த்தை "பஸீரத்" என்பதாகும். பின்பற்றியவர்கள் என்பதில் மறுமை நாள் வரை நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர்களும் அடங்குவர் என்றிருந்தாலும் இதில் முதல் பட்டியலில் இடம்பெறுபவர்கள் கண்ணியம் மிக்க ஸஹாபாக்கள் என்பதில் ஐயம் இல்லை.


 ஆகவே, நீங்கள்(நபி(ஸல்),ஸகபாக்கள்(ரலி)) ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்(அல் குர் ஆன் 2:137.

 மேலும் எனினும், (அல்லாஹ்வின்) தூதரும், அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்; அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்(அல் குர்ஆன் (9:88)),

  இதில் முதன்யானவர் அபூபக்கர்(ரலி) அவர்கள்.

  உமர்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அதற்கு ஏற்றார்போல் என்னிடம் பொருளாதாரமும் இருந்தது. ''ஏதேனும் ஒரு நாளில் அபூபக்கரை நான் முந்த வேண்டுமாயின், இந்த நாளில் முந்திவிட வேண்டியதுதான்'' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். எனவே என் பொருளாதரத்தில் நான் பாதியைக் கொண்டு வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், உமரே! உமது குடும்பத்திற்காக என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். 'இதுபோன்ற ஒரு பங்கை வைத்து விட்டு வந்துள்ளேன்' என்று நான் பதிலளித்தேன்.


அபூபக்கர்[ரலி] அவர்கள் தன்னிடமுள்ள பொருளாதாரம் அனைத்தையும் கொண்டு வந்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அபூபக்ரே! உம்முடைய குடும்பத்திற்காக எதை விட்டு வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவர்களுக்காக விட்டு வந்திருக்கிறேன்' என்று பதிலளித்தார்கள். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக!எதிலும் அபூபக்ரை முந்த முடியாது என நான் எண்ணிக்கொண்டேன்.இமாம்திர்மிதி(ரஹ்),இமாம் அபூதாவூத்(ரஹ்)


ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்தார். அவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசினார். நபி(ஸல்) அவர்கள் மறுபடியும் தம்மிடம் வருமாறு அவளுக்குக் கட்டளையிட்டார்கள். அவள், 'இறைத்தூதர் அவர்களே! சொல்லுங்கள். நான் வந்து உங்களைக் காணவில்லையென்றால்...? என்று -தான் வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற கருத்தில் - கேட்டாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ என்னைக் காணவில்லை என்றால் அபூ பக்ரிடம் செல்' என்று பதிலளித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்),


இதில் எனக்கு பிறகு (ஈமானின் வழிகாட்டி) அபூபக்கர் சித்திக்(ரலி) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னது எல்லாம் உங்கள் கண்கள் திறந்து படியுங்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நட்சத்திரங்கள் வானத்திற்கு பாதுகாவலாகும், நட்சத்திரங்கள் சென்றால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும், நான் எனது தோழர்களுக்கு பாதுகாவலன் ஆவேன், நான் சென்றுவிட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும், எனது தோழர்கள் எனது உம்மத்தினருக்கு பாதுகாவலர்கள் ஆவார்கள், எனது தோழர்கள் சென்றுவிட்டால் எனது உம்மத்தினருக்கு வாக்களிப்பட்டது வந்துவிடும்,(ஸஹிஹ் முஸ்லிம்) 

விளக்கம்: (இரவில்)நட்சத்திரங்கள் வானத்திற்கு எவ்வாறு பாதுக்காப்பாக உள்ளதோ! அவ்வாறு நபித்தோழர்கள் இந்த பூமியுள்ளோருக்கு நேர்வழிக்காட்டக்கூடியவர்களாக உள்ளார்கள், இந் நட்சத்திரங்கள் சென்றுவிட்டால் இருள் ஏற்படும், அது போல் நபித்தோழர்களை நீங்கள் புறக்கணித்தால் காரிருள் உங்கள் சூழ்ந்து கொள்ளும், பிறகு மார்க்கத்தை விட்டு வெளியேறக்கூடியவரளாக நீங்கள் மாறிவிடுங்கள்,

அறிந்து கொள்ளுங்கள் நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்களைப்பற்றி எவ்வாறு கூறியுள்ளார்கள்

சகபாக்கள்(ரலி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளும் அதற்கு நமது பதில்களும்
http://ahlussunnathwaljamath.blogspot.com/2011/01/blog-post_22.html

அதை தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் பின்பற்ற சொன்ன நான்கு கலிபாக்கள்(ரலி) மற்றும் விமர்ச்சனங்களுக்கு விளக்கமும் 

http://www.ahlussunnathwaljamath.blogspot.com/2012/06/blog-post_27.html

மற்ற விமர்சனங்களுக்கு இன்சா அல்லா விரைவில் பதிலளிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக