புதன், 27 ஜூன், 2012

நபி(ஸல்) அவர்கள் பின்பற்ற சொன்ன நான்கு கலிபாக்கள்(ரலி) மற்றும் விமர்ச்சனங்களுக்கு விளக்கமும்

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்..




நபி(ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் தோழர்(ரலி) மீதும் சுமத்தப்பட்ட அவதூறுகளும்

http://ahlussunnathwaljamath.blogspot.com/2012/06/blog-post_22.html

அதற்கு நமது பதில்களும் கட்டுரைக்கு விமர்ச்சனங்களுக்கு விளக்கமும்

//முஹாஜிர்கள்அன்ஸார்கள் என அல்லாஹ் கூறுவது சஹாபாக்களைத் தான் என்றாலும் அவர்களைப் பின்பற்று மாறு இதில் நமக்கு எந்தக் கட்டளையும் இல்லை. அவர்களை யார் பின்பற்றுகிறார்களோ என்று வருங்கால வினைச் சொல்லாக இறைவன் கூறாமல் பின்பற்றினார்களோ என்று இறந்த கால வினைச் சொல்லாகக் கூறுகிறான். பின்பற்றுகிறார்களோ என்று கூறினால் இப்போதும் அவர்களைப் பின்பற்றலாம் என்ற பொருள் வரும். பின்பற்றினார் களோ என்று கூறினால் இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னர் பின்பற்றி நடந்தவர்களைத்தான் அது குறிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.// ராஜ் முஹம்மது

நான் ''பின்பற்றுகின்றார்களோ'' என்று தான் பதித்துள்ளேன்,

9:100  وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِي مُ
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

 ( http://tamililquran.com/qurandisp.php?start=9 )

 http://chittarkottai.com/wp/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-2/


இதில் تَّبَعُوهُم  என்று கூறப்ப்பட்டுள்ளது,   تَّبَعُوهُم  என்பது நிகழ்கால் தொடர்வினைச் சொல்லாகும்.

பின்பற்றுகிறார்களோ அல்லது பின்பற்றினார்களோ என்ற நீங்கள் பதித்த இரண்டு வார்த்தையையும் நான் பதிக்கவில்லையே.. நான் ''பின்பற்றுகின்றார்களோ'' என்று தான் பதித்துள்ளேன்,

''பின்பற்றுகின்றார்களோ'' என்பது இறந்தகாலமும் அல்ல, நிகழ்காலமும் அல்ல, ''நிகழ்கால தொடர்வினையை குறிக்கும்,
அதாவது ''நிகழ்கால தொடர்வினையை குறிக்கும்'' என்பதை அறிந்து கொண்டால் குழப்பம் எதுவும் வராது.

விமர்ச்சனமும் அதற்கு விளக்கமும்


//அபூபக்கர் (ரலி) அவர்களின் தர்மம் பற்றி கூறும் ஹதீஸ் திர்மிதி 3608 ,அபூதாவூத் 1429 ,தாரமீ  1601 ,ஹாகிம் 1442 , பைஹகீ 7313 போன்ற எண்களில் பதிவாகியிருக்கும் இந்த ஹதீஸ்-ல் ஹிஷாம் பின் ச அத் என்ற பலவீனமானவர்  அறிவிப்பாளர்  இடம் பெற்றுள்ளார் //ராஜ் முஹம்மது




حدثنا هارون بن عبد الله البزاز البغدادي حدثنا الفضل بن دكين حدثنا هشام بن سعد عن زيد بن أسلم عن أبيه قال سمعت عمر بن الخطاب يقول أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نتصدق فوافق ذلك عندي مالا فقلت اليوم أسبق أبا بكر إن سبقته يوما قال فجئت بنصف مالي فقال رسول الله صلى الله عليه وسلم ما أبقيت لأهلك قلت مثله وأتى أبو بكر بكل ما عنده فقال يا أبا بكر ما أبقيت لأهلك قال أبقيت لهم الله ورسوله قلت والله لا أسبقه إلى شيء           
 أبدا قال هذا حديث حسن صحيح

ஆனால் இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் ஹசன் ஸஹிஹ் தரத்திலும், இமாம் அபூதாவுத்(ரஹ்) அவர்கள் ஹசன் தரத்திலும், இமாம் மிஷ்காத்(ரஹ்) அவர்களும் பதித்துள்ளர்கள்

உண்மை தான் ஹிஷாம் பின் சஅத் அவர்கள் பலரால் விமர்ச்சிக்கப்பட்டுள்ளார்கள்,

நீங்கள் ஹிஷாம் பின் ச அத் வழியாக எடுத்து கொள்ள வேண்டாம்,  இதுவா உங்கள் பிரச்சனை

ஹிஷாம் பின் சஅத் அவர் இடம் பெறாமல்  மற்றொரு வழியில் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவித்த ஹதிஸை அந்த ஹதிஸை எடுத்து கொள்ளலாமே!(கித்தாப் அல்ஹாவி அல் கபீர் 391), (மஜ்முஹ் பத்வா இப்னு தைமியா பக்கம் 117)

மேலும்

அபூபக்கர்(ரலி) அவர்கள் சிறப்புகள்.

இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.(திருக்குர்ஆன்3:172)

மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.(திருக்குர்ஆன் 3:173)

இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.(திருக்குர்ஆன் 3:174)

"தமக்கு(ப் போரில்) படுகாயங்கள் எற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்பை அவர்கள் ஏற்றார்கள். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் காத்துக் கொண்ட இத்தகையோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு" என்னும் (திருக்குர்ஆன் 3:172 -வது) வசனத்தை (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) ஓதிவிட்டு என்னிடம், 'என் சகோதரி மகனே! உன் தந்தை ஸுபைர்(ரலி) அவர்களும் (என் தந்தையும் உன் பாட்டனாருமான அபூ பக்கர்(ரலி) அவர்களும் (அந்த அழைப்பை ஏற்ற) அவர்களில் உள்ளவர்கள் தாம். உஹுத் நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டபோது இணைவைப்பவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்து விடுவார்களோ என்று நபி(ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். (அப்போது) 'அவர்களுக்குப் பின்னால் (அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்?' என்று கேட்டார்கள். (உஹுதில் பங்கெடுத்த) நபித்தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க) முன்வந்தனர்" என்று கூறினார்கள்.அவர்களில் அபூ பக்கர்(ரலி) அவர்களும், ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களும் இருந்தனர். என உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் .(இமாம் புகாரி(ரஹ்)) (இமாம் இப்னு கஸீர்(ரஹ்) திருகுர்ஆன் விளக்க உரை)

(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

இதில் தோழர் எனபது அபூபக்கர்(ரலி) அவர்களை தான் குறிக்கும் என பல இமாம்களும், பல திருகுர்ஆன் விளக்கவுரைகாளர்களும் கூறியுள்ளார்கள்

நபி(ஸல்) அவர்கள் பின்பற்ற சொன்ன நான்கு கலிபாக்கள்(ரலி) :






முதலவதாக அபூபக்கர் பின் குகஃபா(ரலி) அவர்கள்


எனது வழிமுறையை எடுத்து நடந்து நேர்வழி சென்ற கலீபாக்களின் வழி முறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதில் முதலவதாக நபி(ஸல்) அவர்களைப் பார்த்த கலிபாக்கள், சகபாக்கள்(ரலி) அவர்கள் தான் வருவார்கள்,  அப்போ அவர்களின் சுன்னாவை பின்பற்றுவது ஒன்றும் தவறு ஒன்று இல்லை தானே, ஏனென்றால் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்வந்து உங்களை காண இயல் வில்லை எனில்.. என்று கூறும் போது அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ என்னைக் காணவில்லை என்றால் அபூ பக்ரிடம் செல்' என்று பதிலளித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்), இமாம் முஸ்லிம்(ரஹ்)).

 இதிலிருந்து முதல் கலிபாக்கவாக இருந்த அபூபக்கர்(ரலி) அவர்களின் வழிமுறையை பின்பற்றலாம் என உறுதியாகிறது. மேலும் நபி(ஸல்) கலிப்பாக்களைப் பற்றி கூறினாலும் அதில் அல்லாவை பொறுந்தி கொண்டவர்கள் தான் அதில் முதன்மையாளர்கள் ஆவார்கள்

இரண்டவதாக உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில், (பல்வேறு) பிரச்சினைகளில் சரியான தீர்ப்பு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாயத்தினரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருக்கும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். மற்றோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள்: உங்களுக்கு முன்பிருந்த பனூ இஸ்ராயீல்களில் இறைத்தூதர்களாக இல்லாமலேயே (வானவர்களால்) அறிவிப்புச் செய்யப்பட்டவர்கள் இருந்துள்ளனர். அத்தகையவர்களில் எவரேனும் என் சமுதாயத்தில் இருந்தால் அது உமராகத் தான் இருக்கும். இப்னு அப்பாஸ்(ரலி), (திருக்குர்ஆனின் 22:52-வது வசனத்தில்) 'வலா முஹத்தஸின்' (முன் கூட்டியேஅறிவிக்கப்பட்டவரானாலும்) என்று (சேர்த்து) வாசித்துள்ளார்கள் (இமாம் புகாரி(ரஹ்).

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். திருகுர் ஆன் 3:159

இதில் அல்லா சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். என்று கூறியது அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்களை பற்றி கூறினது என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் இதை இமாம் ஹாகிம்(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.

எனவே இதில் அல்லாவின் தூதர்(ஸல்)அவர்கள்பொறுப்படுத்தப்பட்டவர்கள் அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்கள் ஆவார்கள்,

அல்லா இதைப்பற்றி கூறுகிறான் சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். இதில் பொறுப்பேற்படுத்தவர்கள் அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்கள் ஆவார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மூலமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
((திருகுர்ஆன் 33:36))

நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் நீங்கள் பின்பற்றி நடங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அபூபக்கரையும் உமரையும் சுட்டிக் காட்டினார்கள் என ஹுதைபா இப்னுல் எமான் (ரலி) அறிவிக்கிறார்கள்.(இமாம் அபூதாவூத்(ரஹ்), இதை இமாம் திர்மிதி(ரஹ்) ஹதீஸ் இடம் பெற்றுள்ளது) இது ஹசன் தரத்தில் இமாம் இப்னு மஜா(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

நபி(ஸல்) அறிவித்தப்படி அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்களும் அந்த கலிபாக்கள் இடத்தில் இடம் பெறுகிறார்கள், எனவே அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்களையும் பின்பற்ற வேண்டும் நபி(ஸல்) அவர்களின் கட்டளை.


மூன்றவதாக உஸ்மான் பின் அஃப்பான்(ரலி) அவர்கள்


நபி (ஸல்) அவர்கள் (வருங்காலத்தில் ஏற்படப்போகும்) ஒரு குழப்பத்தைப் பற்றி கூறிவிட்டு, அது விரைவில் சம்பவிக்கும் என்றும் கூறினார்கள். அப்போது தலையில் முக்காடிட்ட ஒரு மனிதர் சென்றார். அந்தக் குழப்பம் சம்பவிக்கும் நாளில் இவர்தான் நேர்வழியில் இருப்பார். (இவருக்கு எதிரானவர்களே வழிகேட்டில் இருப்பார்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உடனே பாய்ந்து சென்று (முக்காடிட்டுச் சென்று கொண்டிருந்து) உஸ்மானைப் பிடித்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து ‘இவரையா சொன்னீர்கள்’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘இவர் தான்’ என்று கூறினார்கள் என கஃபு இப்னு உஜ்ரா (ரலி) கூறினார்கள்.(இமாம் திர்மதி(ரஹ்) இமாம் இப்னு மஜா(ரஹ்) ) இமாம் இப்னு மஜா(ரஹ்) இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதிஸ் ஸஹிஹ்வானது.

உஸ்மான்(ரலி) அவர்களை யாரெல்லாம் எதிர்கின்றார்களோ அவர் வழிகேட்டில் இருப்பார்கள்,

இதில் தற்போது முதன்மையானவர்கள் ராபிழாக்கள், அப்பறம் என்ன சொல்லவே வேண்டியதில்லை நமக்கிடையில் வாழும் ததஜ ஆவார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம்


நபி(ஸல்) அறிவித்தப்படி உஸ்மான்(ரலி) அவர்களும் அந்த கலிபாக்கள் இடத்தில் இடம் பெறுகிறார்கள், நேர்வழிப்பெற்ற கலிபாக்களைப் பின்பற்றுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதில் நபி(ஸல்) அவர்கள் உஸ்மான்(ரலி) நேர்வழியில் இருப்பார்கள் என்று கூறினார்கள், நேர்வழியில் உள்ள உஸ்மான்(ரலி) அவர்களைப் பின்பற்றுவது கட்டாய கடமையாகும் என நபி(ஸல்) அவர்களின் கட்டளையாகும். எனவே உஸ்மான்(ரலி) அவர்களையும் பின்பற்ற வேண்டும் நபி(ஸல்) அவர்களின் கட்டளை.

நான்கவதாக அலி பின் அபீதாலிப்(ரலி) அவர்கள்


நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேராளியும் உள்ளது. ஆகேவ, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்'' என்று கூறி, அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வமும் ஊட்டினார்கள்.பிறகு, "(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின்)உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும்
கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால்நினைவூட்டுகிறேன்.. என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களுடைய உரிமைகளையும்கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் பெயரால் நினைவூட்டுகிறேன்.'' என்று (மூன்று முறை) கூறினார்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இமாம் முஸ்லிம்(ரஹ்)

சரி.. நபி(ஸல்).குடும்பத்தை பின்பற்றுங்கள் என்றால் அது யாரை குறிக்கும்?

"வாருங்கள். எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் அழைப்போம்...''(3:61) எனும் இந்த வசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ(ரலி), ஃபாத்திமா (ரலி), ஹசன்(ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரை அழைத்து, "இறைவா!இவர்கள்தான் என் குடும்பத்தார்'' என்று கூறினார்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இமாம் முஸ்லிம்(ரஹ்)

நபி(ஸல்) அறிவித்தப்படி அலீ(ரலி),அவர்களும் அந்த கலிபாக்கள் இடத்தில் இடம் பெறுகிறார்கள், இதிலிருந்து அலி(ரலி) அவர்களையும் பின்பற்றுவது நபி(ஸல்) அவர்களின் கட்டளையும்.

விமர்ச்சனமும் அதற்கு விளக்கமும்

//நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை. அபீஸீனிய அடிமையாக இருந்தாலும் கட்டுப்படுங்கள் எனக் கூறினால் கியாமத் நாள் வரை ஆட்சி செய்யும் கலீபாக்கள் அனைவருக்கும் மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் கட்டுப்பட்டு நடங்கள் என்பது தான் இதன் பொருள்.// ராஜ் முஹம்மது


சகோதரரே ராஜ்முஹம்மது, இந்த கருத்து உங்களால் இது இட்டுகட்டப்பட்டது

حدثنا إسماعيل بن بِشْرِ بن مَنْصُورٍ وإسحاق بن إبراهيم السَّوَّاقُ قالا ثنا عبد الرحمن بن مَهْدِيٍّ عن مُعَاوِيَةَ بن صَالِحٍ عن ضَمْرَةَ بن حَبِيبٍ عن عبد الرحمن بن عَمْرٍو السُّلَمِيِّ أَنَّهُ سمع الْعِرْبَاضَ بن سَارِيَةَ يقول وَعَظَنَا رسول اللَّهِ (ص) مَوْعِظَةً ذَرَفَتْ منها الْعُيُونُ وَوَجِلَتْ منها الْقُلُوبُ فَقُلْنَا يا رَسُولَ اللَّهِ إِنَّ هذه لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا قال قد تَرَكْتُكُمْ على الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عنها بَعْدِي إلا هَالِكٌ من يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ من سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عليها بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا قِيدَ انْقَادَ

கண்கள் கண்ணீர் வடித்து, உள்ளங்கள் நடுங்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இந்த உரை (உலகத்திலிருந்து) விடை பெற்றுச் செல்லும் உரை தான். எனவே எங்களிடம் என்ன உறுதிமொழி கேட்கிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற வழியில் விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலைப் போன்றது. நாசமாகி விடுபவனைத் தவிர வேறு எவரும் அந்தப் பாதையிலிருந்து சருக மாட்டான். உங்களில் யார் (உனக்குப் பின்) வாழ்கிறாரோ அவர் ஏராளமான கருத்து வேறுபாடுகளைக் காண்பார்.
என் சுன்னத்திலிருந்தும்,நேர்வழி நின்ற கலீபாக்களின் சுன்னத்திலிருந்தும் எதை அறிகிறீர்களோ அதைப் பற்றிக் கொள்ளுங்கள். அதனைக் கடவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள்!  (உங்கள் தலைவர்) நீக்ரோ அடிமை என்றாலும் (அவருக்கு) கட்டுப்பட்டு நடப்பதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக மூமின் கடிவாளம் இடப்பட்ட ஒட்டகம் போன்றவனாவான். எங்கு இழுக்கப்பட்டாலும் அவன் இழுபடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) அறிவிக்கிறார்கள்.(இமாம் இப்னுமஜா(ரஹ்)

முதலில் நேர்வழியில் நின்ற கலிபாக்களின் சுன்னதிலிருந்து எதை அறிகிறீர்களோ அதை பற்றி கொள்ளுங்கள், அதை தொடர்ந்து தான் நீக்ரொ அடிமை என்றாலும் என்று தான் வந்துள்ளது. இரண்டும் வேற வேற என்பதைத் தவிர ஒன்றே அல்ல, என்பதை சாதரணமாக படித்தவறுக்கு தெரியும்.

//நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்பதைத் தொடர்ந்து``அபீஸீனிய அடிமை என்றாலும் கட்டுப்பட்டு நடங்கள் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்..............நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை//ராஜ் முஹம்மது

அப்படி உங்கள் கருத்துபடி பார்த்தால் முதலில் நபி(ஸல்) அவர்கள் தான் வருகிறார்கள், அதனை தொடர்ந்து தான் மற்றவைகள் இடம் பெற்றுள்ளன, அப்படி நீங்கள் பொருள் கொள்வீர்களானாயில் உங்களை விட வழிகேட்டில் யாரும் இருக்க முடியாது.

 ஏனென்றால் இதற்கு முன் ஹதிஸை நீங்கள் படித்தீர்கள் என்றால் உங்களுக்கு சரியான விளக்கம் புரியும் அதாவது நீக்ரோ அடிமையாயினும் செவிமடுத்துக் கட்டுப்பட்டு நடப்பதையும் அவசியமாக்கிக் கொள்ளுங்கள்! என கூறி அதற்கு பிறகு என் சுன்னத்தையும், நேர்வழி நின்ற கலீபாக்களின் சுன்னத்தையும் பற்றிக் கொள்ளுங்கள்! அதனைக் கடவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள்! என கூறப்பட்டுள்ளது.

அந்த ஹதிஸ் விவரம் கீழே வருமாறு

கண்களில் கண்ணீரை வரவழைத்து உள்ளங்களை நடுங்கச் செய்யும் அரிய உரை ஒன்றை நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்தினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! (உலகிலிருந்து) விடை பெற்றுச் செல்பவரின் உரை போன்று நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள், எனவே எங்களிடம் (பலமான) உறுதிமொழியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘இறையச்சத்தையும், (உங்கள் தலைவர்) நீக்ரோ அடிமையாயினும் செவிமடுத்துக் கட்டுப்பட்டு நடப்பதையும் அவசியமாக்கிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின்னால் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள்! அப்போது என் சுன்னத்தையும், நேர்வழி நின்ற கலீபாக்களின் சுன்னத்தையும் பற்றிக் கொள்ளுங்கள்! அதனைக் கடவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள்! (மார்க்கத்தில்) பதிதாக தோற்றுவிக்கப்பட்ட காரியங்களைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு ‘பித்அத்தும்’ வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) அறிவிக்கிறார்கள்..(இமாம் இப்னுமஜா(ரஹ்)

வெள்ளி, 22 ஜூன், 2012

நபி(ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் தோழர்(ரலி) மீதும் சுமத்தப்பட்ட அவதூறுகளும் அதற்கு நமது பதில்களும்

//பேரீத்த மர மகசூல் விஷயமாக நபி (ஸல்) அவர்கள் ஒன்றை கூறி அது தோல்வியில் முடிந்த போது, நான் சொல்வதை ஏன் கேட்டீர்கள், நீங்களே சிந்தித்து செய்திருக்க வேண்டியதானே என்று கேட்டார்களே, இது அவர்கள் மறைவானவற்றை அறியாததால் தானே?// சகோதரர் நாஷித் அஹமது


அஸ்தஃபருல்லா! என்னுடைய உயிருக்கு தோல்வியா?


 இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் பதித்துள்ள ஹதிஸ் பற்றி பிஜே கூறினது பொய்யா? ஆமாம் அது பலகினமான ஹதிஸ்.


 அல்லாவின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும், நானும் பேரிச்ச மரங்களின் உச்சியிலிருந்த சிலரை கடந்து சென்றோம். அப்போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள், அதற்கு அங்கிருந்த பெண் மரங்களுடன் ஆண்மரங்களை ஒட்டு சேர்க்கை செய்து செய்து மகசூல் செய்கின்றனர் என்றார்கள், அல்லாவின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இதனால் பயன் ஏதவது உண்டாகுமன நான் கருதவில்லை,என்றார்கள். அல்லாவின் தூதர் முஹம்மது நபி(ஸல்) கூறியதை தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் ஒட்டு சேர்க்கை செய்வதை விட்டு விட்டார்கள், அல்லாவின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவிக்கப்பட்ட போது அதனால் அவர்களுக்கு பயன் இருந்தால் அது செய்யட்டும் நான் என் யூகத்தை கூறினேன், என் யூகத்தைக் கொண்டு என்னை குற்றம் பிடிக்காதீர்கள், ஆனால் அல்லாவைப் பற்றி ஏதாவது அறிவித்தால் அதை எடுத்து கொள்ளுங்கள். நிச்சியமாக கண்ணியமிக்க மற்றும் மகத்துவம்மிக்க அல்லாஹ்வை பற்றி பொய் சொல்ல மாட்டேன் என்றார்கள், என தல்ஹா பின் உபைதில்லா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (இமாம் முஸ்லிம்(ரஹ்) பாகம் 4, ஹதிஸ் 1602)


 இதில் இக்ரிமா பின் அம்மார் என்பவர் இடம் பெருகிறார், இவர் அதிகமாக நபிமொழிகளில் குளருபடி செய்ய கூடியவர், அதிகமாக தவறு செய்ய கூடியவர், என இம்மாம் அஹமது அஹமது(ரஹ்), இமாம் எஹ்யா பின் ஸயித் கத்த(ரஹ்), இமாம் ஸலிஹ் இப்னு முகம்மது ஹசனி(ரஹ்), இமாம் அல்லாமா இப்னு ஹிரா(ரஹ்),இமாம் அல்லாமா இப்னு அம்மார்(ரஹ்), அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) கூறுகிறார்கள்,


இக்ரிமா பின் அம்மார் இவர்களின் ஹதிஸை பலர் ஏற்றலும், ஆனால் இவர் மீது பலரால் விமர்ச்சிக்கப்பட்டுள்ளார், இவருடைய ஹதிஸ் ஏற்க தக்கது அல்ல.


 இமாம் பைஹகி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், இவர் அறிவு வயதான காலத்தில் மிகவும் மோசமாகிவிட்டது,மிகவும் அறிவில் மிகவும் பலகினமானவர், இவர் அறிவிக்கும் ஹதிஸை யாரும் ஏற்க கூடாது என கூறியுள்ளார்கள்


இமாம் இப்னு ஹஜ்ம் அல் அன்ட்தலுசி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் இக்ரிம பின் அம்மார் பலகினமானவர்கள்,


 இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், மக்கள் இவர் கூறும் எந்த வார்த்தையும் ஏற்கமாட்டார்கள் அத்தவரி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் இவர் அறிவிக்கும் ஹதிஸில் பல தவறுகளும், குளருபடியும் உள்ளது.


 மேலும் இமாம் அபு ஹாதிம்(ரஹ்), இமாம் ஹபிழ் அல் அலாய்(ரஹ்), இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்), இமாம் ஜலலுதீன் அஸ் சூத்தீ(ரஹ்), இமாம் சப்ட் அல் ஹஜ்மி(ரஹ்), இமாம் அபு ஜிர அல் இராக்கி(ரஹ்), இமாம் அல் கஃரஜி(ரஹ்) போன்றவர்கள் இவர் அறிவித்த ஹதிஸ் ஏற்க தக்கது அல்ல,


மேலும் இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் இவர் அறிவிக்கும் ஹதிஸ் முத்தரிப் தரத்தில் தான் பதிவு செய்து உள்ளார்கள் என இமாம் பைஹகி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


 மேலும் இதில் மற்றொரு வழியாக சிம்மாக் இப்னு அர்ப் இடம் பெறுகிறார் அவர் மிகவும் பலவினமானர் என பதின் மூன்று இமாம்கள் குறை கூறியுள்ளர்கள். தேவைப் பட்டால் பட்டியல் இடுகிறேன்.

மேலும் அம்மாத் பின் ஸலிமா இடம் பெறுகிறர், இவர் ஹதிஸை அதிகமாக தவறு செய்யக் கூடியவர். நினைவாற்றல் குறைந்தவர்.மறதியாளர் என விமர்ச்சிக்கப்பட்டுள்ளார்.


 முஜனித் பின் ஸயித் இடம் பெற்றுள்ளார், இவர் மிகவும் பலவினமானவர் என பத்து இமாம்கள் இவரை விமர்சனம் செய்து உள்ளர்கள், இவர் ஹதிஸ் ஏற்கலாகது. என விமர்ச்சிக்கப்பட்டவர்,


இவ்வளவு விமர்ச்சிக்கப்பட்ட நபர்கள் இருந்த இந்த ஹதிஸை போய் ஆதரமாக காட்டி நபி(ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டாம் என ததஜ தலைவர் கூறுவது சரிதானா?

 இதை எல்லாம் அவர் எது சொன்னாலும் சரி என கண்ணை மூடிக்கோன்டு பின்பற்று கிறீர்களே இது உங்களுக்கு நியமாக தெரிகிறதா?


சரி பிஜே அடிக்கடி ஒரு பஞ் வசனம் ஒன்று சொல்லும், ஒரு உதரணத்திற்கு பிஜே விசயத்தில் வருவோம், குரானுக்கு மாற்றமாக பலமான ஹதிஸ் இருந்தல் ஏற்க மாட்டோம் என வீர வசனம் சொன்னது எல்லாம் உங்களுக்கு தெரியும்,

 இது பிஜேவுக்கு பலமான ஹதிஸ் என வைத்து கொள்வோம்(பலவினமானது தான் ஆனால் ஒரு வேளை பிஜேவுக்கு மட்டும்),


அல்லா தனது வேதமாகிய திருகுர்ஆனில் தனது ஹபிப் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கூறுகிறான். அவர்(நபி(ஸல்)) தம் இச்சைபடி எதையும் பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட்தேயன்றி வேறில்லை.மிக்க வல்லமுடையவர் ஜிப்ரில்(அலை) அவர்களிக்கு கற்று கொடுத்தார்கள்(53:3,4,5)


 மேலும் (நபியுடைய) இதயம் கண்டதை பற்றி பொய்யுரைக்கவில்லை ஆயினும் அவர் கண்டவற்றின் மீது நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?(53:11,12).

இதில் அல்லா உலக விசயத்தை மட்டும் கூறவில்லை, ''எதையும்'' என்ற வார்த்தையை அல்லா பயன் படுத்துகிறான். அது உலக விசயமாக இருக்கட்டும், அல்லது மார்க்க விசயமாக இருக்கட்டும். எந்த வார்த்தையும் அடங்கும்.

 அல்லாவின் வார்த்தைக்கு மறாக இருக்கும் இந்த ஹதிஸ் எடுத்து கொள்ளலாமா?

கண்மூடித்தனமாக பிஜேவைபின்பற்றினால் நரகம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


 நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் (சகபாக்கள்(ரலி)) அவர்களும் நமக்கு முன்மாதிரி


இன்னும்(இஸ்லாத்தை ஏற்பதில்) முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ் பொருந்திகொண்டான்; அவ்வாறே அவர்களும் அல்லாவை பொருந்தி கொண்டார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.(9:100),

 இதில் நல்ல முறையில், நலவுடன் அவர்களை பின்பற்றுகிறார்களோ! என்று அல்லா சொல்வதை உன் கண்கள் இருந்தும் நீங்கள் குருடானாய் இருக்கிறீர்களா? ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றி விட்டு, ஒரு சிறப்பான பிரசங்கம் நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டு கண்கள் நீரைச் சொரிந்தன; உள்ளங்கள் உருகின; அப்பொது யாரசூலுல்லாஹ்! இது விடை பெறுபவரின் பிரசங்கம் போன்றல்லவா இருக்கிறது. எனவே , எங்களுக்கு இறுதி உபதேசம் செய்யுங்கள் என்று நபித் தோழர்கள் சொன்னார்கள். அப்போது கருப்பு இனத்தைத் சார்ந்த ஒருவர் உங்களுக்குத் தலைவராக வந்தாலும் அவருக்கு நீங்கள் வழிப்படுங்கள். உங்களில் எனக்குப் பின்னால் யார் வாழ்கிறார்களோ அவர்கள் சமுதாயத்தில் அதிகமான கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்கள். அப்போது என்னுடைய வழிமுறையையும், எனது வழிமுறையை எடுத்து நடந்து நேர்வழி சென்ற கலீபாக்களின் வழி முறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அந்த வழிமுறைகைளை நீங்கள் உங்கள் கடவாய்ப் பற்களால் கவ்விக் பிடித்துக் கொள்ளுங்கள். மார்க்கத்தில் புதிதாக எதையும் உண்டு பண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக மார்க்கத்தில் புதிதாக உண்டு பண்ணப்படுபவை யாவும் வழி கேடுகளேயாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இர்பாள் பின் சாரியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவுத்(ரஹ்),அஹமத்(ரஹ்) சகபாக்கள்(ரலி)

அவர்களை பின்பற்றினால் சுவர்க்கம் தான் அல்குர்ஆனில்(9:100) அல்லா தெளிவாக குறிப்பிட்டுவிட்டான், இதன் ஒரு அத்தாட்சி ஒன்று போததா? ‎ (நபியே!) நீர் சொல்வீராக!



 "இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்." (12:108)


 நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம் என்ற வாசகத்தில் தெளிவான ஞானம் என்பதற்கு அரபியில் இடம்பெற்ற வார்த்தை "பஸீரத்" என்பதாகும். பின்பற்றியவர்கள் என்பதில் மறுமை நாள் வரை நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர்களும் அடங்குவர் என்றிருந்தாலும் இதில் முதல் பட்டியலில் இடம்பெறுபவர்கள் கண்ணியம் மிக்க ஸஹாபாக்கள் என்பதில் ஐயம் இல்லை.


 ஆகவே, நீங்கள்(நபி(ஸல்),ஸகபாக்கள்(ரலி)) ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்(அல் குர் ஆன் 2:137.

 மேலும் எனினும், (அல்லாஹ்வின்) தூதரும், அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்; அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்(அல் குர்ஆன் (9:88)),

  இதில் முதன்யானவர் அபூபக்கர்(ரலி) அவர்கள்.

  உமர்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அதற்கு ஏற்றார்போல் என்னிடம் பொருளாதாரமும் இருந்தது. ''ஏதேனும் ஒரு நாளில் அபூபக்கரை நான் முந்த வேண்டுமாயின், இந்த நாளில் முந்திவிட வேண்டியதுதான்'' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். எனவே என் பொருளாதரத்தில் நான் பாதியைக் கொண்டு வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், உமரே! உமது குடும்பத்திற்காக என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். 'இதுபோன்ற ஒரு பங்கை வைத்து விட்டு வந்துள்ளேன்' என்று நான் பதிலளித்தேன்.


அபூபக்கர்[ரலி] அவர்கள் தன்னிடமுள்ள பொருளாதாரம் அனைத்தையும் கொண்டு வந்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அபூபக்ரே! உம்முடைய குடும்பத்திற்காக எதை விட்டு வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவர்களுக்காக விட்டு வந்திருக்கிறேன்' என்று பதிலளித்தார்கள். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக!எதிலும் அபூபக்ரை முந்த முடியாது என நான் எண்ணிக்கொண்டேன்.இமாம்திர்மிதி(ரஹ்),இமாம் அபூதாவூத்(ரஹ்)


ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்தார். அவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசினார். நபி(ஸல்) அவர்கள் மறுபடியும் தம்மிடம் வருமாறு அவளுக்குக் கட்டளையிட்டார்கள். அவள், 'இறைத்தூதர் அவர்களே! சொல்லுங்கள். நான் வந்து உங்களைக் காணவில்லையென்றால்...? என்று -தான் வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற கருத்தில் - கேட்டாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ என்னைக் காணவில்லை என்றால் அபூ பக்ரிடம் செல்' என்று பதிலளித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்),


இதில் எனக்கு பிறகு (ஈமானின் வழிகாட்டி) அபூபக்கர் சித்திக்(ரலி) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னது எல்லாம் உங்கள் கண்கள் திறந்து படியுங்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நட்சத்திரங்கள் வானத்திற்கு பாதுகாவலாகும், நட்சத்திரங்கள் சென்றால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும், நான் எனது தோழர்களுக்கு பாதுகாவலன் ஆவேன், நான் சென்றுவிட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும், எனது தோழர்கள் எனது உம்மத்தினருக்கு பாதுகாவலர்கள் ஆவார்கள், எனது தோழர்கள் சென்றுவிட்டால் எனது உம்மத்தினருக்கு வாக்களிப்பட்டது வந்துவிடும்,(ஸஹிஹ் முஸ்லிம்) 

விளக்கம்: (இரவில்)நட்சத்திரங்கள் வானத்திற்கு எவ்வாறு பாதுக்காப்பாக உள்ளதோ! அவ்வாறு நபித்தோழர்கள் இந்த பூமியுள்ளோருக்கு நேர்வழிக்காட்டக்கூடியவர்களாக உள்ளார்கள், இந் நட்சத்திரங்கள் சென்றுவிட்டால் இருள் ஏற்படும், அது போல் நபித்தோழர்களை நீங்கள் புறக்கணித்தால் காரிருள் உங்கள் சூழ்ந்து கொள்ளும், பிறகு மார்க்கத்தை விட்டு வெளியேறக்கூடியவரளாக நீங்கள் மாறிவிடுங்கள்,

அறிந்து கொள்ளுங்கள் நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்களைப்பற்றி எவ்வாறு கூறியுள்ளார்கள்

சகபாக்கள்(ரலி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளும் அதற்கு நமது பதில்களும்
http://ahlussunnathwaljamath.blogspot.com/2011/01/blog-post_22.html

அதை தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் பின்பற்ற சொன்ன நான்கு கலிபாக்கள்(ரலி) மற்றும் விமர்ச்சனங்களுக்கு விளக்கமும் 

http://www.ahlussunnathwaljamath.blogspot.com/2012/06/blog-post_27.html

மற்ற விமர்சனங்களுக்கு இன்சா அல்லா விரைவில் பதிலளிக்கப்படும்.