ஞாயிறு, 1 ஜூலை, 2012

ஷஅபான் பதினைந்தாம் நாள் நோன்பு வைக்க ஆதாரம் உண்டா? அப்படி வைக்கவில்லை எனில்


அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்,

ஷபே பராஅத் பற்றி கட்டுரை தொகுத்து கொண்டு இருக்கிறேன் இன்சா அல்லா நீண்ட கட்டுரையாக வெளியிடுவேன், ஆதாரபூர்வமாக ஹதிஸ்களுடன். அதுவரைக்கும் விமர்ச்சிபவர்கள் சற்று பொறுமையை காத்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.


ஷஅபான் பதினைந்தாம் நாள் நோன்பு:

நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் பதினைந்தாம் நாள் நோன்பு வைக்குமாறு சொன்ன ஹதிஸும் இடம் பெற்றுள்ளது, இதன் படி அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாத்தினார்கள் நோன்பு வைத்து கொண்டு இருக்கிறார்கள், தவறு என்று சொல்ப்பவருக்கு எந்த ஒரு அதிகாரம் கிடையாது,

நபி (ஸல்) அவர்கள் "என்னிடம்' அல்லது "நான் செவியுற்று கொண்டிருக்க மற்றொருமனிதரிடம்' "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் நடுப்பகுதியில்(பதினைந்தில்) நோன்பு நோற்றீரா?'' என்றுகேட்டார்கள். நான், "இல்லை' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நீர் (ரமளான்) நோன்பைமுடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!'' என்று கூறினார்கள் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இமாம் முஸ்லிம்(ரஹ்)

சில ஹதிஸ்களில் இறுதிபகுதியும் இடம் பெற்றுள்ளது என்பதை மறுக்க வில்லை, நடுப்பகுதி என்றும் உள்ளது, அதை எடுத்து செயல்படகூடாது என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை, ஏனென்றால் அதுவும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக தான் இடம் பெற்றுள்ளது.
விமர்சனமும் விளக்கமும்:


سرر என்பது ஆரம்ப பகுதியா?நடுப்பகுதியா?இறுதிப்பகுதியா? எது சரி??

2607. 
'Imran b. Husain (Allah be pleased with them) reported Allah's Messenger (may peace he upon him) having said to him or to someone else: Did you fast in the middle of Sha'ban? He said: No. Thereupon he (the Holy Prophet) said: If you did not observe fast, then you should observe fast for two days. 
2608. 
Imran b. Husain (Allah be pleased with them) reported that Allah's Apostle (way peace heupon him) said. to a person: Did you observe any fast in the middle of this month (Sha'ban)? He said: No. Thereupon the Messenger of Allah (may peace be upon him) said: Fast for two days instead of (one fast) when you have completed (fasts of) Ramadan. 
2609. 
'Imran b. Husain (Allah be pleased with them) reported that the Apostle of Allah (may peace be upon him) said to a person: Did you observe fast in the middle of this month. i. e. Sha'ban? He said: No. Thereupon he said to him: When it is the end of Ramadan, then observe fast for one day or two (Shu'ba had some doubt about it) but he said: I think that he has said: two days. 
2610. 
This hadith is narrated by 'Abdullah b. Hani b. Akhi Mutarrif with the same chain of transmitters.

باب صوم سرر شعبان 
حدثنا هداب بن خالد حدثنا حماد بن سلمة عن ثابت عن مطرف ولم أفهم مطرفا من هداب عن عمران بن حصين رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال له أو لآخر أصمت من سرر شعبان قال لا قال فإذا أفطرت فصم يومين 

سرر என்ன அர்த்தம்?

இதில் அறிஞர்களிடைய கருத்து வேறுபாடு உள்ளது,  ஆனால் பெரும்பான்மையானோர் இதற்கு நடுப்பகுதி தான் என்று மொழியாக்கம் செய்து உள்ளார்கள், ஏனென்றால் முஸ்லிம் இரண்டும் வேற வேற இடத்தில் பதிவு செய்து உள்ளார்கள், ஆனால் நீங்கள் இணையதளத்தில் எந்த ஒரு இணையதளத்திலும் சென்றாலும் சரி நீங்கள் முஸ்லிம் எண் 2607-யை  سرر எனற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் இதற்கு سرر மிடில் என மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது, 

இமாம் நவவி(ரஹ்) அவர்கள்   سرر எனற் வார்த்தை நடுப்பகுதி என்று கூறியுள்ளார்கள்

மேலும் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் கூறுகிறார்கள்

அபூ உபைத்(ரஹ்) سرر என்ற சொல்லுக்கு மறைதல் என்று பொருள் அதாவது சந்திரன் மறைக்கிற நாள் 28ம் நாள், 29ம் நாள், 30 ம் நாள் குறிக்கும்,

அவ்ஸாயி(ரஹ்) மற்றும் அப்துல் பின் ஹஜிஸ்(ரஹ்) அவர்கள்  سرر என்ற சொல்லுக்கு மாதத்தின் ஆரம்ப பகுதி எனப் பொருள் கொண்டார்கள் என இமாம் அபூதாவுத்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்காத்தாபி(ரஹ்) அவர்கள் மற்றும் பலர் سرر என்ற சொல்லுக்கு மாதத்தின் நடுப்பகுதியை தான் குறிக்கும்.

இந்த மூன்றையும் குறிப்பிட்டு இதில் பெரும்பான்மையோனோர் நடுப்பகுதியை தான் ஆதாரவு அளித்துள்ளார்கள் என இமாம் அபூதாவுத்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், மேலும் سرر என்பதற்கு பன்மையில் தொப்புள்(உடலின் மையப்பகுதி) என்று அழைக்கப்படும்,  எனவே நடுப்படுதி தான் மிகவும் பலாமானது எனப் பெரும்பான்மையோனோரால் ஊக்கு விக்கப்படுகிறது, மேலும் பெரும்பான்ம்மையோனோர் இறுதி பகுதியை ஆதரிக்க வில்லை ஏனென்றால் ஷஅபான் இறுதிப் பகுதியில் நோன்பை வைக்க தடைச் செய்யப்பட்டுள்ளது இதை இமாம் நவவி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், எனவே இமாம் நவவி(ரஹ்) அவர்கள் நடுப்பகுதிக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள், இதனை கருத்தில் கொண்டு தான் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் நடுப்பகுதியில் என வரும் ஹதிஸ்களில் தொகுத்துள்ளார்கள், (இமாம் முஸ்லிம்(ரஹ்) கருத்து அதுவாகும்), 

இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் பதித்துள்ள இந்த ஹதிஸ் நடுப்பகுதியை தான் குறிக்கும் ஏனென்றால் இறுதி பகுதி நோன்பு வைக்க கூடாது என்று இடம் பெற்றுள்ளது, எனவே அதற்கு மாற்றமாக இருப்பதினால் அது நடுப்பகுதிதான் குறிக்கும்.,  ஆனால் பெரும்பான்மையானோர் இதற்கு நடுப்பகுதி தான் என்று மொழியாக்கம் செய்து உள்ளார்கள், ஏனென்றால் முஸ்லிம் இரண்டும் வேற வேற இடத்தில் பதிவு செய்து உள்ளார்கள், ஆனால் நீங்கள் இணையதளத்தில் எந்த ஒரு இணையதளத்திலும் சென்றாலும் சரி நீங்கள் முஸ்லிம் எண் 2607-யை  سرر எனற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் இதற்கு மிடில் என மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது, 

ரமலானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்), இமாம் புஹாரி(ரஹ்), 

இந்த ஹதிஸிக்கு நீங்கள் பதிதிருக்கும் கீழ் ஹதிஸ் மாற்றமாக உள்ளது என பெரும்பான்மையான இமாம்களின் கருத்து.

//இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டது ஷஅபான் மாதத்தின் கடைசியைத்தான் என்கிற மற்றொரு அறிவிப்பே சரியானதாகும். விடுபட்ட நோன்புகளை களா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் சொன்னதற்குக் காரணம், அவை அவராகத் தன் மீது கடமையாக்கிக் கொண்ட இரு நேர்ச்சையான நோன்புகள் என்பதே! (ஃபத்ஹுல்பாரீ, உம்தத்துல் காரீ)// 

நபி(ஸல்) அவர்கள் இறுதியில் நோன்பு வைக்க தடை செய்யும் போது, மற்றொரு இடத்தில் இறுதியில் நோன்பு வைக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்களா? இல்லை,  இறுதியில் என்பது தவறாக அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும்,அது நடுப்பகுதியை தான் குறிக்கும் என பெரும்பான்மையான இமாம்களின் கருத்தாகும்,

அது தான் ஏற்கனவே நான் கூறினேன்

//சில ஹதிஸ்களில் இறுதிபகுதியும் இடம் பெற்றுள்ளது என்பதை மறுக்க வில்லை, நடுப்பகுதி என்றும் உள்ளது, அதை எடுத்து செயல்படகூடாது என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை, ஏனென்றால் அதுவும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக தான் இடம் பெற்றுள்ளது.// முன்பு நான் பதித்தது.

ஹதிஸ் எண் 2150-யையும்(நடுப்பகுதி),ஹதிஸ் எண் 2154-யையும்(இறுதிப்பகுதி)  படித்து பார்க்கவும், உங்கள் பிடித்திருந்தால்  எடுத்து கொள்ளுங்கள், இல்லை என்றால் விலகி இருங்கள், எனக்கு எல்லாம் தெரியும், நான் சொல்வது தான் சரி, மற்றவர்கள் செயல்படுவது எல்லாம் தவறு என் அறிவுக்கு அது மாற்றமாக உள்ளது என்று சொல்பவீர்கள் என்றால் அதற்கு நான் பொருப்பல்ல, அஸ்ஸலாமு அலைக்கும்.... உண்மையை உண்மையாய் கூறுங்கள், அதனால் தான் நான் இரண்டு ஹதிஸையும் சுட்டிகாட்டினேன், அஸ்தஃபருல்லா உங்கள் அறிவுக்கு ஒத்து வரவில்லை என்று ஒரு நபி மொழியை இட்டுகட்டியுள்ளது என கூறுகிறீர்களே இது நியாயமா?


எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்(அல்குர்ஆன் 17:36)


ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு-ஆதாரபூர்வமான் ஹதிஸ்


وعن معاذ بن جبل ، عن النبي - صلى الله عليه وسلم - قال : 

" يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان ، فيغفر لجميع خلقه ، إلا لمشرك ، أو مشاحن " . 

رواه الطبراني في الكبير والأوسط ورجالهما ثقات

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கும் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக்கும் மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
இதை இமாம் தப்ரானி(ரஹ்) அவர்கள் ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள், 

மேலும் இதை இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்களும் உறுதி செய்துள்ளார்கள் இதில் இடம் பெரும் அறிவிப்பாளார்கள் நம்பகமானவர்கள் என்று கூறுகிறார்கள். இதை ஸஹிஹ்வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்,

மேலும் இமாம் இப்னு ஹஜர் ஹைதமி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் தனது கித்தாபில் இந்த ஹதிஸை பதிவு செய்து விட்டு இதில் இடம் பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் ஆவார்கள், சிலர் விமர்ச்சனம் செய்து உள்ளார்கள், அது தவறு.  எனவே இது ஹசன் தரத்தில் கூட கூற முடியாது இது ஸஹிஹ் வான ஹதிஸ் ஆகும்.

மேலும் இமாம் முந்தரி(ரஹ்) அவர்கள் வழியாக தஹ்ரிப் தஹ்ரிப் லும், இமாம் சூயூத்தி(ரஹ்) அவர்களும் இதில் இடம் பெறும் அறிவிப்பாளார்கள் மிகவும் நம்பகமானவர்கள் ஆவார்கள் என கூறியுள்ளார்கள்.


அல்லா அனைத்தும் அறிந்தவன்