புதன், 21 அக்டோபர், 2009

நபி(ஸல்) அவர்களின் வழியில்(கற்று தந்த முறைப்படி) அஸ்ஸலாமு அலைக்கும் என்று அழகாக சொல்லுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹீ அனைத்தும் முஸ்லிம்சகோதரர்களுக்கும்,
அளவற்ற அருளானலும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்,
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காகஅருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லிஅவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்(33:56)அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலாஇப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக்அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலிஇப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்
இன்று சிலர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லாமல் ஸலாம் என்று சொல்லிவருகிறார்கள். அது மார்க்கத்திற்கு முற்றிலும் முரனானது. நபி(ஸல்)அவ்வாறு கற்று தரவில்லை.நபி(ஸல்) அவர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்லிகொண்டு அந்த நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த முறைப்படி பின்பற்றாமல் தனதுசுயகருத்தை கருத்தில் கொண்டு பின்பற்றுகிறார்கள்.
ஸலாம் என்று குரானில் வரும் வார்த்தைக்கு நபி(ஸல்) அவர்கள் மட்டுமே எப்படி சொல்ல வேண்டும், மற்றும் ஸலாமிற்கு பதில் எவ்வாறு கூற வேண்டும் என்று கற்று தரமுடியும், நேரடியாக குரானை மட்டும் பின்பற்றலாம் என்று சொல்பவர்கள் ஈமான் கொள்ளுங்கள், தொழுது வாருங்கள், நோன்புவைத்து வாருங்கள்,ஜகாத் கொடுத்து வாருங்கள் ஹஜ் செய்யுங்கள், என்று நபி(ஸல்) அவர்களின் முறையில்லாமல் எப்படி செய்யமுடியும், அது போல் குரானில் ஸலாம் என்ற வார்த்தைக்கு விளக்கம் எப்படி கூற வேண்டும் என்றும்,ஸலாமிற்கு பதில் எவ்வாறு கூற வேன்டும் என்று நபி(ஸல்) அவர்கள் மட்டுமே கற்று தர முடியும்.,
வேதக்காரர்கள் மற்றும் மாற்றுமதத்தவருக்கு ஸலாம் முதலில் கூறாதீர்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்(உங்களுடன் பகைமை பாராட்டும்)யுதர்களும்,கிருத்துவர்களும், நீங்கள் முதலில் ஸலாம் கூறாதீர்கள்(எதிரிகளான) அவர்களை நீங்கள் சந்திக்க நேரிட்டால் பாதையின் ஓரத்தில்விட்டுவிட்டு செல்லுங்கள் என அபூஹீரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்( முஸ்லிம்(ரஹ்),திர்மதி(ரஹ்),அபூதாவுத்(ரஹ்),முஸ்னத் அஹ்மத்(ரஹ்))

வேதக்காரர்கள் மற்றும் மாற்றுமதத்தவர்கள் ஸலாம் கூறினால் பதில் கூறும்முறை:
வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் வ அலைக்கும்' அவ்வாறேஉங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(புஹாரி(ரஹ்))
யூதர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் அவர்களில் சிலர் 'அஸ்ஸாமுஅலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். எனவே,(அவர்களுக்கு பதிலாக) 'வ அலைக்க' (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்றுசொல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்(புஹாரி(ரஹ்))
யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து 'அஸ்ஸாமுஅலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர். 'வஅலைக்கு முஸ்ஸாமு வல்லஅனா'' (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும்உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,'ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ்விரும்புகிறான்'' என்றார்கள். உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள்சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?' என்று கேட்டேன் அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் ('அஸ்ஸாமு' எனும் சொல்லைத் தவிர்த்து) 'வஅலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என பதிலளித்து விட்டேன்''என்று கூறினார்கள் ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(புஹாரி(ரஹ்))
இங்கு முதலில் ஸலாம் சொன்னால் என்று பயன்படுத்திவிட்டு அது எவ்வாறுகூறினார்கள் என அடுத்த செய்திகளில் காணமுடிகிறாது. உங்கள் கூற்றுபடிபார்த்தால் ஸலாம் என்று சொன்னால் அதே வார்த்தையான ஸலாம் என்று தான் பயன்படுத்திருக்கே வேண்டும் அதற்கு பதிலும் நபி(ஸல்) அவர்களும் ஸலாம் என்றுசொல்லி இருக்க வேண்டும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் வா அலைக்கும் மட்டும்தான் சொன்னார்கள். ஆனால் ஸலாம் என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான்அர்த்தம் தவிற. ஸலாம் என்றால் ஸலாம் என்ற அர்த்தம் கிடையாது. அஸ்ஸாமுஅலைக்கும் என்று சிலர் யூதர்கள் ஸலாம் சொல்கிறார்கள் அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் பதில் வா அலைக்கும் என்று சொல்ல சொன்னார்கள்..வேதக் கொடுக்கப்பட்டவர்களுக்கு(தவ்ராத்,இன்சில்,ஜபூர்) அதாவது அல்லாவைஏற்று நபி(ஸல்) அவர்களை ஏற்க மறந்தவர்கள். நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்குவா அலைக்கும் என்று தான் பதில் அளிக்க சொன்னார்கள்..
மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:
உங்களுக்கு ஸலாம் (வாழ்த்து) கூறப்பட்டால் அதைவிட அழகானதை அல்லது அதையேபதிலாக்குங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கணெக்கெடுப்பவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 4:86)இவ்வசனத்திற்கு மறுப்பவர்களின் விளக்கம்:உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால்.." என்ற சொற்பதம் சொல்லப்படும்வார்த்தையைத்தான் கவனிக்க சொல்கின்றதே தவிர சொல்லும் ஆட்களையல்ல. எனவே
நமக்கு யார் ஸலாம் சொன்னாலும் அவர்களுக்கு அதைவிட சிறந்த வார்த்தையைஅல்லது அதையே பதிலாக சொல்லலாம்.
இவ்வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களின் விளக்கம்:சல்மான் அல் பாரிசி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் யாரஸுலல்லா எனறு ஸலாம்(முகமன்)கூறினார், அதற்கு வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹம்மத்துல்லாஹ் என்று பதில்கூறினார்கள். பின்னர் மற்றொருவர் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் யாரஸுலல்லாவரஹம்மத்துல்லா என்று முகமன் கூறினார், நபி(ஸல்) அவர்கள் வ அலைக்கும்வஸ்ஸலாம் வரஹம்மத்துல்லாஹி வபரகாத்துஹீ என்று பதில் கூறினார்கள்(இருவரின் முகமனை கேட்டுவிட்ட) மற்றொருவர் வந்தார், அவர் அஸ்ஸலாமு அலைக்கயாரஸீலல்லா வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹீ என்று முகமன் கூறினார். அதற்குவ அலைக்க என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அப்போது அந்த மனிதர்அல்லாவின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணிமாகட்டும்.இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உங்களிடம் வந்து ஸலாம் கூறும் போது நீங்கள்எனக்கூறினதை விட அதிகமான அதிகமான வார்த்தைகளை கொண்டு அவர்களுக்கும் பதில்கூறினீர்கள் என்ன காரணம் என்று வினவினார், அதற்கு நபி(ஸல்) அவர்கள்அதிகமாக கூறுவதற்கு எதையும் விட்டு வைக்க வில்லையே( எல்லாவார்த்தைகளையும் நீங்கள் கூறிவிட்டீர்கள்) உங்கலூக்கு ஸலாம்(முகமன்)கூறப்பட்டால் அதைவிடச் சிறந்த முறையில் பதில் ஸலாம் (முகமன்) அல்லதுஅதையே யே திருப்பி கூறுங்கள்(4:86) என்று அல்லா குறிப்பிட்டுள்ளான் எனவேநீங்கள் கூறியதயே நாம் உங்களுக்கு பதிலாக கூறிவிட்டோம் என்று சொன்னார்கள்( குரான் தஃப்சீர் தபரி(ரஹ்), குரான் தஃப்சீர் இப்னு கதீர்(ரஹ்), மற்றும்
தப்ரானி(ரஹ்))
நமது அருமை நாயகம் முகம்மது நபி(ஸல்) அவர்களின் விளக்கம் மட்டுமே இங்குஎடுத்து செயல் படுத்துவது கட்டாய கடமையாகும் முடியும்.அல்லாவின் வசனத்திற்கு அவர்கள் மட்டுமே விளக்கம் அளிக்க கூடியமே தவிற சுயசிந்தனையாளர்களால் சொல்லபடக்கூடிய கருத்துகள் எடுத்து செயல் படுத்தமுடியாது...
அதனால் ஸலாம் என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்பது தான் நபி(ஸல்) அவர்கள் அழகாக கற்று கொடுத்து இருக்கிறார்கள். அதனால் சகோதரர்கள்அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்..அது தான் நபி(ஸல்)
அவர்களின் வழியாகும்..மேலும் மிகவும் கவனிக்க வேண்டியவை
ஸலாம் என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி:அல்லா குரானில்:ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை(அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்குநன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக்கூறப்படுகிறது)(அல்-குர்-ஆன்24:27)நபி(ஸல்) அவர்களின் சத்திய வார்த்தைகள்:ஒருவர் ஒரு வீட்டில் நுழையும் முன் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என அனுமதிகோரட்டும்.அருமை மகனே! நீ உனது குடும்பத்தினரிடம் சென்றால் ஸலாம் கூறு?அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் பரக்கத்தாக அமையும் என அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள் (திர்மிதீ(ரஹ்))அல்லா ஸலாம் சொல்லி அனுமதி கேளுங்கள்.. அல்லாவின் வசனத்திற்கு நபி(ஸல்)அவர்களும், சகபாக்கள்(ரலி) அவர்களும் தான் விளக்கம் அளிக்க முடியும் தவிரவேற யாரும் அதற்கு விளக்கம் கொடுத்தால் அது ஏற்று கொள்ள முடியாது.மேலும்நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒருமனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதிகேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி(ஸல்) அவர்கள் தம் பணியாளரிடம், நீசென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது)'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல் என்றுகூறினார்கள். இதைச் செவிமடுத்த அம்மனிதர், 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான்உள்ளே வரலாமா என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்க,அவர் உள்ளே வந்தார்" என ரிப்யீ இப்னு ஹிராஷ் (ரலி) அறிவிக்கிறார். (நூல்:அபூதாவூத்(ரஹ்))
முக்கியமாக கவனிக்க வேண்டியவை:''நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து. 'ஸலாம்' கூறாமல், அவர்கள் இருந்தஅறையில் நுழைந்துவிட்டேன். நீ திரும்பச் சென்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்"நான் உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு, பின்னர் உள்ளே வா என்று நபி(ஸல்)அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என கில்தா இப்னு ஹன்பல் (ரலி)அறிவிக்கிறார். (நூல்கள்: அஹ்மது(ரஹ்), அபூதாூது(ரஹ்) மற்றும் திர்மிதீ(ரஹ்))
ஸலாம் கூறாமல் என்று சொன்ன சகாபி(ரலி) அவர்கள் மறுபடியும் ஸலாம் என்றவார்த்தையை சொல்லி செல்லவில்லை.. அந்த சகாபி(ரலி) அவர்கள் பயன் படுத்தியவார்த்தை அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான். எனவே ஆனால் ஸலாம் என்றால்அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான் அர்த்தம் தவிற. ஸலாம் என்றால் ஸலாம் என்றஅர்த்தம் கிடையாது.
நபி(ஸல்) (குரானே) காட்டி தந்த வழி:
''நபி(ஸல்) அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால்,வாசலுக்கு நேராக நின்று அனுமதி பெறாமல், வாசலுக்கு வலப்புறமோ,இடப்புறமோ ஒதுங்கி நின்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்வார்கள்""என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் (ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்(ரஹ்))ஸலாம் என்று ஹதிஸ் களில் வரும் வார்த்தை, ஆனால் அதனால் ஸலாம் என்றுவருவதால் ஸலாம் என்று சொல்வது கூடாது என மேலே கூறப்பட்டுள்ளது. ஸலாம்என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான் அர்த்தம் என்று நபி(ஸல்)அறிவித்துள்ளார்கள்.ஸலாம் என்று மட்டும் வந்துள்ள ஹதிஸ்களும் உள்ளன்அதையும் கீழே இடம்பெற்றுள்ளது.. அதை நபி(ஸல்) அவர்களின் விளக்கம் முன்புஇடம் பெற்றுள்ளது..''இரவில்நபி(ஸல்) தம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, தூங்குபவர்கள்எழுந்துவிடாத முறையிலும் விழித்திருப்பவர்களுக்காக(மட்டும்)கேட்கும்படியாகவும் 'ஸலாம்" கூறுவார்கள்" என மிக்தாத் (ரலி)அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்(ரஹ்))
''ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும்போது, யா அல்லாஹ்! நல்ல முறையில்நுழைவதையும் நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம் வேண்டுகிறேன்.இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகிறோம். உன் திருப்பெயர் கொண்டேவெளியேறுகிறோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கைவைக்கிறோம் என்று கூறிவிட்டுப் பிறகு தன் வீட்டில் உள்ளவர்களுக்கு'ஸலாம்" கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூமாலிக்கில் அஷ்அரி (ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவுத்(ரஹ்))
மேல் பதியவாகியுள்ள ஹதிஸ்களில் ஸலாம் என்று இடம் பெற்றுள்ளது.. அதனால்அது ஸலாம் என்றால் ஸலாம் கிடையாது. மாறாக அஸ்ஸலாமு அலைக்கும் என மற்றொருவழிகளில் முழுமையான ஹதிஸ்களில் தெளிவாக வந்துள்ளது. அது ஸலாம் என்றால்
அஸ்ஸலாமு அலைக்கும் தான்.. அது தான் நபி(ஸல்)மொழியும்.
செய்திகளில் சிறந்தது, அல்லாஹ்வின் வேதமாகும் வழிகளில் சிறந்தது இந்தமுஹம்மதின் வழியாகும்.என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்கள் (இமாம் முஸ்லிம்(ரஹ்), இமாம் இப்னுமாஜா(ரஹ்))
நாம் செய்யக் கூடிய அனைத்து அமல்களும் உயிரைவிட மேலான கண்மனி நாயகம்(ஸல்)அவர்கள் சொல்லி காண்பித்து விட்டார்கள். இதற்கு இதற்கு இவ்வளவுநன்மைகளில் அளவை அறிந்தவர்களும் அவர்கள் தான் அல்லா அனைத்து இபாதத்எப்படி செய்ய வெண்டும் அதற்குரிய நன்மையின் அளவையும் சொல்லி கொடுத்துவிட்டான்.
அஸ்ஸலாமு அலைக்கு சொல்பவர் மற்றும் பதில் சொல்பவர்களின் நன்மையின் அளவு:
''நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின்அருள், சாந்தி உங்களுக்கு உண்டாகட்டும்!) என்று சொன்னார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். அவர் அமர்ந்தார், நபி(ஸல்) அவர்கள்,பத்து (நன்மைகள்) என்றனர். பின்பு மற்றொருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மதுல்லாஹி என்றார் அதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.அவரும் உட்கார்ந்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இருபது(நன்மைகள்) என்றார்கள். மேலும் ஒருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு (அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் பாக்கியமும்உங்கள் மீது உண்டாகட்டும்!) என்றார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில்சொன்னார்கள். அவரும் அமர்ந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் முப்பது(நன்மைகள்) என்றார்கள்"" என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி)அறிவிக்கிறார்கள். ( திர்மிதீ(ரஹ்), நஸயி(ரஹ்) மற்றும் அபூதாவுத்(ரஹ்))
அவர்(நபி(ஸல்)) தம் இச்சைபடி எதையும் பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம்அறிவிக்கப்பட்ட்தேயன்றி வேறில்லை.மிக்க வல்லமுடையவர் ஜிப்ரில்(அலை)அவர்களிக்கு கற்று கொடுத்தார்கள்(53:3,4,5)மேலும் (நபியுடைய) இதயம் கண்டதை பற்றி பொய்யுரைக்கவில்லை ஆயினும் அவர்கண்டவற்றின் மீது நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?(53:11,12).
அல்லா அறிவிக்காமல் நபி(ஸல்) அவர்கள் எதையும் சுயமாக அறிவிக்கவில்லைஇறைவன் புறத்திலிருந்து வந்தாலும் அது நபி(ஸல்) அவர்களின் காட்டி தந்த
முறையாக(சொல்,செயல், அங்கீகாரம்) தான் இருக்க வேண்டும், அவர் தான்உலகத்தாரின் நமது வழிகாட்டி. அவர் தான் நமது உயிர்.மேலும்இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காகஅருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லிஅவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்(33:56)
நபி தோழாகள் நபி (ஸல்) அவர்களிடம் எப்படி ஸலவாத் கூறவேணடும் எனகேட்டபோது, பின் வரும் ஸலவாத்தை ஓதிக்காட்டினார்கள்.அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலாஇப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக்அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலிஇப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்என்னை கஅப் இப்னுஉஜ்ரா(ரலி) சந்தித்து, 'நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா?' என்று கேட்டார்கள்.நான், 'ஆம், அதை எனக்கு வழங்குங்கள்" என்று பதில் சொன்னேன். உடனேஅவர்கள், 'நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'தங்களின் மீதும் தங்கள்குடும்பத்தார் மீதும் சலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக்கற்றுக் கொடுங்கள்) ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படிஎன்று அல்லாஹ் எங்களக்கு (தஷஹ்ஹுதில்) கற்றுக் கொடுத்திருக்கிறான்"என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் நீகருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார்மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும்ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின்குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல்முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப்பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா!இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப்பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும்உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம்மிக்கவனும் ஆவாய்' என்று சொல்லுங்கள்" என பதிலளித்தார்கள் என அப்துர்
ரஹ்மான்இப்னுஅபீ லைலா(ரஹ்) அறிவிக்கிறார்கள்(புகாரி(ரஹ்))
அல்லா ஸலாவத்து கூறுங்கள் என்று சொல்லும் போது நபி(ஸல்) அவர்கள் தான்விளக்கம் அளிக்க முடியும்று..இதனால் ஸலாவாத் சொல்லி என்றால் ஸலாவாத்துஎன்றாகாது.. அதற்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி கற்று கொடுத்து உள்ளார்களோஅது போல் தான் கூறமுடியும். அது போல் தான் ஸலாமும்.. நாம் நபி(ஸல்)அவர்களின் உம்மத்.. அவர்கள் எப்படி கற்று தந்தார்களோ அது போல் செய்வதுதான் நபி(ஸல்) அவர்களின் வழியை பின் பற்ற கூடியதாகும்.சகோதரரே அல்லா ஒரு செய்தியை அறிவிக்கினறான் என்றால் அதற்கு வழிக்காட்டிநபி(ஸல்) அவர்கள் தான் சொல்லி தர வேண்டும்.. அல்லா ஒரு செய்திஅறிவிக்கின்றான் என்றால் நேரடியாக அது எடுத்து செயல் படுத்த முடியாது.முகம்மது(ஸல்) அவர்களின் வழி அதை பற்றி விளக்கம் கொடுத்திற்கும் பொழுதுஅதை தான் எடுத்து செயல் பட வேண்டும்.. உதரணமாக ஈமான் கொள்ளுங்கள்,தொழுகுங்கள், நோன்பு வையுங்கள்,ஜகாத் கொடுத்து வாருங்கள், ஹஜ்செய்யுங்கள் என்று அல்லா சொல்கின்றான்.. நபி(ஸல்) அவர்களின் வழி இல்லாமல்எப்படி செய்வீர்கள், அது போல் தான் ஸலாம் அல்லா ஸலாம் கூறினான் என்றால்அதற்கு நபி(ஸல்) அவர்கள் தான் சொல்ல முடியும் எப்படி சொன்னார்கள் என்று..அதற்கு பதிலும் எப்படி சொல்ல வேண்டும் அவர்களால் மட்டுமே விளக்கம்அளிக்கமே முடியுமே தவிர உங்களுடைய சுயவிளங்கங்கள் எல்லாம் தயவு செய்துஅறிவிக்காதிர்கள்.. ஒரு குரான் விசயத்தை நேரடியாக எடுத்து கொள்ளமால் நபி(ஸல்) அவர்கள் எப்படி கற்று கொடுத்தார்களோ அது போல் தான் எடுத்து கொள்ளவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிம்க்கும், முஃமினுக்கு கட்டாய கடமையாகும்.மேலும்
தொழுது முடிந்ததும் ஸலாம் கூறுங்கள்:
நபி(ஸல்) அவர்கள் தங்களது தொழுகையில் ஸலாம் கொடுத்து முடிந்ததும்அஸ்தஃக்பிருல்லா எனக் மும்முறை கூறுபவர்களாக இருந்தனர் என தவ்பான்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(முஸ்லிம் ஹதிஸின் சுருக்கம்)நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுவோம். அப்போது நபி(ஸல்) அவர்கள்ஸலாம் கொடுக்கும்போது நாங்களும் ஸலாம் கொடுப்போம் என இத்பான்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்ஸஜ்தா ஸஹ்வில் ஸலாம்நபி(ஸல்) அவர்கள் நடு இருப்பு (உட்காரமல்) மறதியாக எழுந்து விட்டார்கள்.
அதைக் கண்ட நபித் தோழர்களும் எழுந்துவிட்டனர். தொழுகையை முடித்துக் கொண்டு(இருப்பில் இருந்தாவாறு) ஸலாம் கூறுவார்கள் என எதிர் பார்த்தோம், ஆனால்நபி(ஸல்) அவர்கள் இருந்தாவறே ஸலாம் கூறுமுன் அல்லாஹ் அக்பர் எனக்கூறி,இரு ஸஜ்தாகளை செய்தப்பின் ஸலாம் கூறினார்கள் என அபூஹீரைரா(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.(நஸயி(ரஹ்)) அப்துல்லாபின் புஹைனா(ரலி) அவர்களின் வழியாகமுஸ்லிம்(ரஹ்), புகாரி(ரஹ்), நஸயி(ரஹ்), இப்னுமஜா(ரஹ்) ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.
நிச்சியமாக நபி(ஸல்) அவர்கள் ளுஹரை ஐந்து ரக்கத் தொழவைத்துவிட்டார்கள்,இருந்தவர்கள் நீங்கள் ஐந்து ரக்கத் தொழுதுவிட்டனர்எனக் கூறினார்கள், அதனைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் இருந்தாவாரே ஸலாமுக்குபிறகு இரு ஸஜ்தாக்களை செய்தனர். என அப்துல்லாபின் மஸ்வூத்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்,(திர்மதி(ரஹ்))
மேலும் கவனிக்க வேண்டியவைமேல் உள்ள நபி மொழி வெளிப்படையாக ஸலாம் என்று வந்துள்ளது , அதனால்நீங்கள் ஸலாம் என்று சொல்லி வலப்பக்கமும், இடப்பக்கமும்திரும்புவீர்களா, சிந்தியுங்கள் அருமை சகோதரர்களே!
தொழுகையில் இருப்பில் ஸலாம் எவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கற்றுகொடுத்தார்கள்:
நபி(ஸல்) அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மத்துல்லா எனக் கூறி வலப்புறமும்,இடது புறமும் ஸலாம் கொடுப்பவர்களாகஇருந்தார்கள் என அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி)அறிவிக்கிறார்கள்.நபி(ஸல்) அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எனக் கூறி வலப்பக்கம் ஸலாம் கூறுகின்ற பொழுது அவர்களின் வலப்பக்கம் வெண்மையாககாணப்படும் அளவிற்கு திரும்புவார்கள். இடப்பக்கம் கூறி ஸலாம் கூறுகின்றபோது இடது கண்ணத்தின் வெண்மை காணப்படும் அளவிற்கு திரும்புவார்கள் எனஇப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இது போன்றே அப்துல்லா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.(அபுதாவுது(ரஹ்), நஸயி(ரஹ்))
நபி(ஸல்) அவர்கள் அவரது தொடையின் மீது வைத்து கொண்டு அவரது சகோதரருக்குஅவரது வலது பக்கத்திலும்,இடது பக்கத்திலும் அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மத்துல்லா எனக்கூறி ஸலாம் கூறுவது அவருக்கு போதாதா எனக் கூறினார்கள்என ஜாபிர் பின் ஸமுரா(ரலி) அறிவிக்கிறார்கள் ( அபுதாவுத்(ரஹ்),நஸயி(ரஹ்))
நபி(ஸல்) அவர்கள் தங்களது தொழுகையில் ஸலாம் கொடுத்து முடிந்ததும்
அஸ்தஃக்பிருல்லா எனக் மும்முறை கூறுபவர்களாக இருந்தனர் என தவ்பான்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(முஸ்லிம்(ரஹ்) ஹதிஸின் சுருக்கம்)
மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தியுடன் வந்து'ஸலாம்' என்றார்கள். (அவரும்) "ஸலாம்" என்றார் (அதன் பின்னர் அவர்கள்உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில்தாமதிக்கவில்லை. 11:69 - 51:25
நபி(ஸல்) அவர்களின் விளக்கம்:
அல்லா எவ்வாறு ஸலாம் கூறினான்.வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் எப்படிஸலாத்தை எடுத்துரைத்தார்கள்:
ஒரு முறை வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் வீட்டிற்குவருகை தந்த போது, நபி(ஸல்) அவர்களுடைய அன்பு மனைவி கதீஜா(ரலி) அவர்கள்அங்கு இருந்தார்கள்.ஜிப்ரீல்(அலை) அவர்கள், "அல்லாஹ் கதீஜா(ரலி)அவர்களுக்கு ஸலாம் அனுப்பியுள்ளான்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், "ஓ! கதீஜாவே, அல்லாஹ் உமக்கு ஸலாம்(கூறி)அனுப்பியுள்ளான்". அதற்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் கூறினார்கள்:"அல்லாஹ்வே 'அஸ் ஸலாம்' ஆவான். மேலும் உங்கள் மீதும் (ஜிப்ரீல்(அலை))ஸலாம்(சாந்தி) உண்டாகட்டும்); மேலும் அல்லாஹ்வின் தூதரே, தங்கள் மீதும்ஸலாம் (சாந்தி) உண்டாகட்டும்". (ஹதீஸ்: புகாரி(ரஹ்))அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களி மண்ணிலிருந்து)படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு,நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள்உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான்உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான்.அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும்– உங்களின் மீது சாந்தி பொழியட்டும்” என்று கூறினார்கள். அதற்குவானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்” என்றுபதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)’என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாககூறினார்கள். எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும்
ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின்காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்)குறைந்து கொண்டே வருகின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனஅபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்(புஹாரி(ரஹ்),முஸ்லிம்(ரஹ்))மேல் உள்ள நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் அல்லாவும் அஸ்ஸலாமு அலைக்கும்என்று தான் கூறியுள்ளான் என நபி(ஸல்) அவர்கள் விளக்கம்அளித்துவிட்டார்கள்.. இதை விட தெளிவான ஒரு ஆதாரம் வேண்டுமா சொல்லுங்கள்சகோதரர்களே!!
மேலும் பதில் எவ்வாறு பதில் கூற வேண்டும் எனவும் ஹதிஸ்களில்காணமுடிகிறது.. அல்லாவுக்கு ஆயிசா(ரலி) அவர்கள் எப்படி பதில்அளித்தார்கள் என்பதையும் உற்று கவனியுங்கள்.(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஆயிஷா! இதோ (வானவர்)ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்' என்றார்கள். நான், 'வ அலைஹிஸ் ஸலாம்வ ரஹ்மத்துல்லாஹி' (அவரின் மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும்பொழியட்டும்) என்று (பதில் சலாம்) சொல்லிவிட்டு, 'நாங்கள்பார்க்காதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்)அவர்களிடம் சொன்னேன். ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.மற்றோர் அறிவிப்பில், 'வ பரகாத்துஹு' (இறைவன் வழங்கும் சுபிட்சமும்)என்று (கூடுதலாக) ஆயிஷா(ரலி) கூறினார் எனக் காணப்படுகிறது.இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.(புகாரி(ரஹ்))
இதில் ஸலாம் உரைக்கிரார்கள் என்று இடம் பெற்றுள்ளது. அது எப்படிகூறினார்கள் என ஆதம் (அலை)அவர்களின் வழியாக நாம் பார்த்தோம். இப்பொழுதுஜிப்ரில்(அலை) அவர்களுக்கு ஆயிசா(ரலி) அவர்கள் பதிலுக்கு ஸலாம் என்றுகூறவில்லை. 'வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி' என்றே பதிலுரைத்தார்கள்.அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியார் மினல் முஃமினீன வல் முஸ்லிமீன்! வஇன்னா இன்ஷா அல்லாஹூ பிக்கும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலக்கும் அல்ஆஃபியா(முஸ்லிம்(ரஹ்))

மலையும், மரங்களும் ஸலாம் எவ்வாறு கூறுகின்றது:
நான் ஒரு மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தேன். மலையும் மரங்களும்அல்லாஹ்வின் தூதரே(ஸல்) அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூரின.அறிவிப்பவர்:அனஸ்(ரலி) நூல்:முஸ்லிம்(ரஹ்)

மேலும் ஸலாத்திற்கான விளக்கங்கள்..
சகாபாக்கள்(ரலி) எவ்வாறுஅல்லாவுக்கும் வானவர்களுக்கும் ஸலாம் எவ்வாறு கூறினார்கள்:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது'அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலாமீகாயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலானின்' (அடியார்களுக்கு முன்அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல் மீது சாந்திஉண்டாகட்டும். இன்னார் இன்னார் மீது சாந்தி உண்டாகட்டும்) என்றகூறிவந்தோம். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித்திரும்பி, 'நிச்சயமாக அல்லாஹ்வே 'ஸலாம்' (சாந்தியளிப்பவன்) ஆகஇருக்கிறான். எனவே, உங்களில் ஒருவர் தொழுகையின் இருப்பில்இருக்கும்போது 'அத்தஹிய்யாத்து லில்லாஹி, வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்துஅஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமுஅலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன' (சொல், செயல், பொருள் சார்ந்தஎல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன.நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும்ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும்சாந்தி உண்டாகட்டும்) என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினாலே வானம்மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறினார்கள் எனஅமையும். 'அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றுநான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின்அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி கூறுகிறேன்) என்றும்கூறட்டும். பிறகு, தாம் நாடிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ளலாம்'என்றார்கள்.அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்கள் (புகாரி(ரஹ்))
அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்களின் அல்லாவின் தூதருக்கு கூறும் ஸலாம்முறை:
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) ‘அஸ்ஸலாமு அலைக்க யாரஸுலுல்லாஹ்! அஸ்ஸலாமுஅலைக்க யாஅபா பக்ர் அஸ்ஸலாமு அலைக்க யாஅபீ என்று கூறிவிட்டு உடனேதிரும்பி விடுவார்கள். (மாலிக் முஆத்தா(ரஹ்))
நபி(ஸல்) அவர்களின் கடித்தத்தில் ஸலாம் எவ்வாறு இருந்தது:
அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.நான் ஷாம் நாட்டில் வியாபாரம் செய்வதற்காகச் சென்றிருந்த குறைஷியர்சிலருடன் இருந்தபோது (அந்நாட்டு மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்துவரும்படி ஆளனுப்பினார். எனவே, அவரிடம் நாங்கள் சென்றோம். பிறகு, அவர்இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவரச் சொன்னார். அப்போதுஅது வாசிக்கப்பட்டது. அதில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன்அல்லாஹ்வின் பெயரால்...) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமானமுஹம்மத் ரோம பைஸாந்திய மன்னர் ஹெராக்ளியஸிற்கு எழுதிக் கொண்டது.அஸ்ஸலாமு அலா மனித் தபஅல் ஹுதா. (நேர்வழியைப் பின்தொடர்ந்தோருக்குச்சாந்தி உண்டாகட்டும்.) பின்னர்...இதன்மூலம் மாற்றுமதத்வருக்கும் கடித்தத்தில் அஸ்ஸலாம் அலைக்கும்கூறுலாம்,ஆனால் வேதகொடுக்கப்பட்டவர் ஸலாம் கூறினால் பதில் வா அலைக்கும் என்றேகூறுங்கள்..
கப்ருக்குள் இருப்பவர்களை நோக்கி ஸலாம் கூறூம் முறை பற்றி நபி(ஸல்)அவர்களின் கற்றிகொடுத்தவிதம்:
முஸ்லிம், மூமின்களான கப்றுவாசிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ்நாங்களும் உங்களை வந்தடைகிறோம். எங்களையும், உங்களையும் அல்லாஹ்மன்னித்தருள்வானாக! எங்களுடையவும், உங்களுடையவும் நம் எல்லோரின்பிழைகளைப் பொறுத்தருள அவனைப் பிரார்த்திக்கிறோம். இறைவா! இவர்களுடையகூலிகளை நீ இல்லாமலாக்கி விடாதே! இவர்களுக்குப் பிறகு நீ எங்களைபித்னாவில் ஆழ்த்தி விடாதே! எங்களையும், இவர்களையும் நீமன்னித்தருள்வாயாக!
இறுதியாக அல்லாவும், நபி(ஸல்) அவர்களும் மிஃராஜ் இரவில் பேசி கொள்ளும்போது அல்லாவும், நபி(ஸல்) அவர்களும் ஸலாத்தை எவ்வாறு கூறினார்கள்:
இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில்,குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின்இருப்பில் ஓதப்படும்) தஷஹ்ஹு(த் எனும் அத்தஹிய்யாத்)தை எனக்கு அவர்கள்கற்றுத்தந்தார்கள். (அது பின்வருமாறு:) அத்தஹிய்யாத்து லில்லாஹி
வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யுவரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ்ஸாலிஹீன்; அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹுவ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு (அனைத்துக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும்அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின்அருளும் சுபிட்சமும் நிலவட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின்நல்லடியார்களின் மீதும் சாந்தி நிலவட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும்,முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும்இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்).நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே (உயிரோடு) இருந்தவரை இவ்வாறு ('அஸ்ஸலாமுஅலைக்க அய்யுஹந் நபிய்யு' - நபியே உங்களின் மீது சாந்தி நிலவட்டும் என்றுமுன்னிலைப்படுத்தி) சொல்லிவந்தோம். அவர்கள் (உயிர்)கைப்பற்றப்பட்டபோது நாங்கள் 'அஸ்ஸலாமு அலந் நபிய்யி' (நபி(ஸல்)அவர்களின் மீது சாந்தி நிலவட்டும்) என்று (படர்க்கையாகக்) கூறலானோம்.

அல்லா மட்டும் அனைத்தும் அறிந்தவன்

செவ்வாய், 20 அக்டோபர், 2009

அல்லாவின் வேதமான திருகுரானை உளுவின்றி தொடலாமா?தொடக்கூடாதா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹீ அனைத்தும் முஸ்லிம்சகோதரர்களுக்கும்,
அல்லாவின் வேதமான திருகுரானை உளுவின்றி தொடலாமா?தொடக்கூடாதா? என்று இன்றைய மார்க்க அறிஞர்களுகளுக்கிடைய கருத்து வேறுபாடு இருந்து கொண்டு இருக்கிறது.. ஒரு சாரர் சம்பந்தமாக இதில் வரும் அறிவிப்பாளர்களை வைத்துஇது பலகினமானது என தள்ளுபடி செய்கின்றனர்.. ஆனால் இதில் வரும்அறிவிப்பாளர்கள் சரியானவர்கள் தான் என மற்ற வழிகளில் நிருபிக்கப்பட்டுள்ளது.

மறுக்கும் சாரர்களின் வைக்கும் ஆதாரம்:1.
சுத்தமானவர்களை தவிர, மற்ற எவரும் அதை தொடமாட்டார்கள்.(56:79)அதை என்பது லவ்ஹூல் மஹ்பூல் என்றும், சுத்தமானவர்கள் என்பவர்கள்அமரர்கள். ஆகவே இது மனிதர்களுக்கு உரியதல்ல, அமரர்களுக்கு சம்பந்தபட்டது,எனவே குரானை ஒளூவின்றி தொடலாம் என வாதடுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு எழுதிய கடிதமொன்றில் 'குர்ஆனைப்தூய்மையானவர்களைத் தவிர மற்றெவரும் தொடமாட்டார்' என்றுஎழுதியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூபக்ருபின் முஹம்மதுபின் அம்ரு பின்ஹஜ்மு (ரலி). மேற்காணும் ஆயத்தில் இதனைத் தொடமாட்டார்கள் எனும் வாசகம்இருக்கிறது. இதனை என்று சொல்லப்பட்டிருப்பது "பாதுகாக்கப்பட்ட ஏட்டை"என்பதுதான் பொருள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் திருக்குர்ஆன்விரிவுரையாளர்களும் கூறுகிறார்கள். அடுத்து நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் 'குர்ஆனைப்பரிசுத்தமானவரின்றி மற்றெவரும் தொடமாட்டார்' என்று எழுதியிருப்பதால்நபி (ஸல்) அவர்களே பாதுகாக்கப்பட்ட ஏட்டை என்று பொருட்கொள்ளாது குர்ஆனைஎன்று தானே பொருள் கொண்டிருக்கிறார்கள் எனலாம். அப்படி என்றால் அவர்கள்தொடவேண்டாம் என்று கூறாது "தொடமாட்டார்" என்றுதானேசொல்லியிருக்கிறார்கள். அவ்வாறிருக்க தொடமாட்டார் என்னும் வார்த்தைக்குதொட வேண்டாம் என்று பொருட்கொள்வது எங்கனம் பொருந்தும்? அவ்வாறே ஒரு வாதத்திற்காக அதை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் அந்தவாசகம் குர்ஆனைப் தூய்மையானவர்தான் தொடவேண்டும் என்பதைப் பொதுவாகக்காட்டுகிறதே தவிர ஒளுவில்லாதவர் அதைத் தொடக்கூடாது என்று குறிப்பிட்டுக்காட்டுவதாக அது அமைந்திருக்கவில்லை. ஏனெனில் தூய்மையானவர்(சுத்தம்) என்ற வார்த்தை பல கருத்துக்களைக்கொண்ட பொதுச் சொல்லாக அமைந்திருக்கிறது. அதற்கு [1] ஒளு செய்துசுத்தமானவர் [2] கையை மட்டும் களுவி சுத்தமானவர் [3] குளித்துசுத்தமானவர் [4] ஷிர்க் [இணைவைத்தல்] என்னும் அசுத்தத்தை அகற்றி முஸ்லிம்என்ற வகையில் சுத்தமானவர் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் கொள்ளஇடமிருப்பதால் ஒளு செய்து தூய்மையானவர் என்று மட்டும் பொருள்கொள்வதற்கு தக்க ஆதாரம் குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ இருந்தாக வேண்டும்.அவ்வாறிருப்பதாக தெரியவில்லை. அல்லாஹ்வும், ரசூலும் பொதுவாகசொல்லியிருக்கும் ஒரு வார்த்தைக்கு அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோஅதற்கு குறிப்பிட்டு விளக்கம் தராதிருக்கும்பொழுது , தக்க ஆதாரமின்றிஅதற்கு இதுதான் விளக்கம் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு யாருக்குஅதிகாரம் இருக்கிறது? என்று சொல்லி இதை உளுவை பற்றி குறிக்கவில்லை என்றுஹதிஸை நிராகரிக்கறார்கள் ஒரு பகுதியினர்..சுத்தம் என்பதற்கான பல ஹதிஸ்கள் வருவதால் அனைத்தும் உளு, குளிப்பு, எனஇருவகையில் ஹதிஸ்களில் வந்தாலும் இரண்டுமே சுத்ததை பற்றி தான்குறிப்பிடுகின்றது. எது வைத்தாலும் இரண்டுமேஒரு முஸ்லிம் இருந்தால் மட்டுமே குரானை தொட முடியும் என்பதை விளங்கவேண்டும் என்பதை தெளிவாக விளங்களாம்.

தெளிவான விளக்கம்:

சகாபாக்கள்(ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறை படித்தால் குரானை தொடுதல்பற்றியான சுத்தம் என்பதற்கான விளக்கம் கிடைக்கும்:
நான் ஸஅது பின் அவக்காஸ்(ரலி) அவர்கள் முன், குரானை படித்து கொண்டுஇருந்தேன், அப்போது நான் சொரிந்து கொண்டேன். அது சமயம் என்னை பார்த்துஸஅது(ரலி) அவர்கள் ,உனது ஆண்குறியை தொட்டிருக்கலாம், அவ்வாறு தானே? என்றுகேட்க அதற்கு நான் (முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)) ஆம்என்றேன். நீ எழுந்து உளு செய் என்றனர். நான் எழுந்து உளு செய்து விட்டு,அதன் பின்னர் திரும்பினேன் என் முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(மாலிக் மூஅத்தா(ரஹ்), பைஹகி(ரஹ்))இது சரியான தொடராகும், இதை சரியான தொடர் என்று தக்ரிப் என்ற நூலில் இமாம்நவவி(ரஹ்) அவர்களும், அதன் விளக்க உரை நூலில் இமாம் அஸ்ஸுயத்தி(ரஹ்)அவர்களும் சரியானது என முடிவு செய்து இருக்கின்றனர்.யார் வேண்டுமானலும் குரானை தொடலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றானர். ஆம்யார்வேண்டுமான்லும் தொடலாம் ஆனால் அவர் உளுவுடன் மற்றும் குளிப்புகடமை ஆகாதவராய் இருக்க வேண்டும்.. ஒரு சிலர் காபிர்கள்(இணைவைத்து வணங்ககூடியவர்கள்) குரானை தொடலாம் என்கின்றனர், தொடலாம் ஆனால் அவர் குளிப்புகடமை ஆகாதவராய் இருக்க வேண்டும்.

உமர்(ரலி) வாழ்க்கை வரலாறு:
உமர்(ரலி) இஸ்லாத்தை ஏற்கும் முன் தன்சகோதரிடம் நீ படித்த அந்த திரு குரானை கொடு என்று கேட்க அதற்கு உமர்(ரலி)அவர்களை நோக்கி அவர் சகோதரி நீங்கள் தூய்மையாகதவரை நீங்கள் இத்திருகுரானைதொடமுடியாது,குளித்துவிட்டு வாருங்கள் என சகோதரி கூற பிறகு உமர்(ரலி)அவர்கள் குளித்ததற்கு பின் அவருக்கு திருமறையின் பாகங்கள்கொடுக்கப்பட்டன.இதிலிருந்து திருமறை திருகுரான் ஒரு சில பாகங்கள் கொடுக்கும் போதே உமர்(ரலி) அவர்களின் சகோதரி உமர்(ரலி) தூய்மையாகும் வரை தரவில்லை..எனவே ஒரு முஸ்லிம் யாருக்கவது ஒரு சிறு பகுதி திருகுரானின் ஒரு சிலவசனத்தை கொடுத்தாலும் அவர் குளிப்பு கடமை ஆகாதவராய் வேண்டும் என்பதுசகபாக்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.
அல்லாவும் திருமறையில் இணைவத்து வணங்குபவர்களை பற்றிஈமான் கொண்டவர்களே! நிச்சியமாக இணைவைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே(அல்குரான் 9:28)
என்று அல்லா நமக்கு அவர்களை பற்றி அறிவிக்கின்றான்.அப்படி அல்லா அவ்வாறு கூறும் போது அவர்களுக்கு எப்படி இத்திரு வேததத்தைகொடுக்க முடியும். எனவே தூய்மையானவர்களைத் தவிர யாரும் இக்குரானை தொட வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

மறுக்கும் சாரர்களின் வைக்கும் ஆதாரம்:

2. சுத்தம்(உளூவு) இல்லாதவர்கள் குரானை தொட வேண்டாம். தொடக்கூடாது எனநிச்சியமாக நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு கடிதம் எழுதினார்கள். எனஅபூபக்ரு பின் முகம்மது பின் ஹஜ்ம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(தப்ரானி(ரஹ்))
3.யமன் தேசவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள்,அக்கடித்தில் சுத்தமில்லாதவரை தவிர,(மற்றெவரும்), குரானை தொடமாட்டார்கள்.(தொடக்கூடாது) என்று இருந்தது என அம்ருபின் ஹஜ்ம்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்(தப்ரானி(ரஹ்))
4)அம்ர் இப்னு ஹஸ்கி(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எழுதியகடிதத்தில் தூய்மையானவர்களை தவிர வேறெவரும் திருகுரானை தொடவேண்டாம் எனஎழுதி இருந்தார்கள் என அப்துல்லா இப்னு அபீபக்கர்(ரலி) எனஅறிவிக்கிறார்கள்(நஸயீ(ரஹ்),இப்னுஹிப்பான்(ரஹ்))மேற்கூறப்பட்டுள்ள ஹதிஸ் முர்ஸல் வகையை சார்ந்தது என்றும், அதில் வரும்அறிவிப்பாளர்களில் சுலைமான் பின் அர்க்கம் எனபவர் பலவினமானவர் என்பதால்இந்த ஹதிஸ் ஏற்க முடியாது எனவே குரானை உளுவின்றி தொடலாம் என்கின்றனர்.

தெளிவான விளக்கம்:

மேற்குறிப்பிட்டுள்ள ஹதிஸ்களில் சுலைமன் பின் அர்க்கம் அவர்கள் இடம்பெறுகிறார்கள், ஆனால் அதே ஹதிஸ் சுலைமான் பின் அர்க்கம் வழியே அறிவிக்கமால் அல்கவ்லானி எனறழக்கப்படும் சுலைமான் பின் தாவுது அவர்கள்அம்ரு பின் ஹஜ்ம்(ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படுள்ளது. அதையும்தொடலாம் சகோதரர்கள் பார்க்க வேண்டும்.

ஹதிஸ் தொடர்:
நபி(ஸல்)--->அம்ரு பின் ஹஜ்ம்(ரலி)--->சுலைமான் பின்தாவுது(ரஹ்)--->அபுல் ஹஸன் முகம்மது பின் அஹ்மது அல் ஜஃபரானி(ரஹ்)(ஃபவாயீத்அபீஷீஐபு)

மேலும் அஹ்மது பின் ஹன்பல்(ரஹ்) அவர்களிடம் இந்த ஹதிஸ் கேட்கப்பட்டது, அதற்குஅவர்கள் இந்த ஹதிஸ் சரியாக இருக்குமேன் நான் ஆதரவு வைக்கிறேன் என்பதாகக்கூற, பகவி(ரஹ்) கூறியாதாகவும்,சுலைமான் பின் தாவுது(ரஹ்) அறிவிக்கிறார்கள்.

சுலைமான் பின் தாவுது(ரஹ்) பற்றி ஹதிஸ்கலை வல்லுனர்கள்:

சுலைமான் பின் தாவுது ஹதிஸ் கலை வல்லுனர்களிடத்தில் மிகநம்பிக்கைகுரியவர், எனவே இந்த ஹதிஸ் ஆதரபூர்வமானது, ஏற்கதக்கதாகும்.-அல்பானி(ரஹ்)
மேலும் அந்த ஹதிஸ் பற்றி இன்னும் பல இமாம்கள் அறிவித்துள்ளார்கள்.

1.யமன் தேசவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள்,அக்கடித்தில் சுத்தமில்லாதவரை தவிர,(மற்றெவரும்), குரானை தொடமாட்டார்கள்.(தொடக்கூடாது) என்று இருந்தது அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.
ஹதிஸ் நூல்கள்:
1.முஃஜமுஸ்ஸகீர்(ரஹ்) பக்கம் 239
2.தப்ரானி(ரஹ்) அவர்கள் அல்கபரில் பாகம் 3-ல் 194/2
3.பைஹகீ(ரஹ்) 1/88
4.இப்னு அஸாகிர்(ரஹ்) 13ம் பாகம் 214/2
அப்துல்லா பின் உமர்(ரலி)வழியாக வரும் ஹதிஸ்களில் சயிது பின் முகம்மதுவழியில் இதே வாசகம் கொண்டு நபி(ஸல்) அவர்கள் வரை அறிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த ஹதிஸ் ஸாலிமிடம்(ரலி) செவியுற்றதாக அவர் தனது தந்தை கூறியதாகஇடம் பெற்றுள்ளது.இந்த ஹதிஸ் இமாம் அஹ்மது அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார்கள் என இமாம் அஸ்ரம்(ரஹ்) கூறுகிறார்கள்.

2. நபி(ஸல்) அவர்கள் எமன் நாட்டிற்கு என்னை அனுப்பிய போது நீர்சுத்தமானவராக அன்றி, குரானை தொட வேண்டாம் எனக் கூறினார்கள் எனமதருல்வுர்ராக் ஹஸ்ஸான் பின் பிலால்(ரலி) அறிவிக்கிறார்கள்.(ஹாகிம்(ரஹ்))இமாம் ஹாகிம்(ரஹ்) அவர்கள் இந்த ஹதிஸ் சரியான தொடர் எனக் கூற, இமாம் தஹபி(ரஹ்) அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார்கள்,

இதில் வரும் சுத்ததற்கு(தூய்மை)மற்றொரு வழியாக நபி(ஸல்) விளக்கம்:

1.தூய்மையின்றி எந்த தொழுகையும், மோசடி பொருட்களிலிருந்து(செய்யப்படும்)எந்த தர்மமும்(அல்லாவினால்) ஏற்கப்படாது என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(திர்மதி(ரஹ்))தொழுகையின் திறவு கோல் சுத்தமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்),அபூதாவூத்(ரஹ்),அஹ்மத்(ரஹ்),இப்னுமஜா(ரஹ்))

2.தூய்மைமூலம் தவிர எந்த தொழுகையும் ஏற்கப்படாது என (நபி(ஸல்) அவர்கள்அருளினார்கள்) என அபூஹீரைரா(ரலி) மற்றும் அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்(முஸ்லிம்(ரஹ்),அபூதாவுத்(ரஹ்),நஸயி(ரஹ்),இப்னுமஜா(ரஹ்),அஹ்மத்(ரஹ்))

இதில் தூய்மை என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்,
இதில் தூய்மைஎன்பது உளு மற்றும் குளிப்பு இரண்டையும் குறிக்கும், அதே போல் தான் நபி(ஸல்) தூய்மைஇனறி குரானை தொடாதே என்பதற்கும், உளு மற்றும் குளிப்புஇரண்டையும் குறிக்கும்.
இதில் வரும் சுத்ததற்கு சகாபாக்களின்(ரலி) வழியாக விளக்கம்:

நான் ஸஅது பின் அவக்காஸ்(ரலி) அவர்கள் முன், குரானை படித்து கொண்டுஇருந்தேன், அப்போது நான் சொரிந்து கொண்டேன். அது சமயம் என்னை பார்த்துஸஅது(ரலி) அவர்கள் ,உனது ஆண்குறியை தொட்டிருக்கலாம், அவ்வாறு தானே? என்றுகேட்க அதற்கு நான் (முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)) ஆம்என்றேன். நீ எழுந்து உளு செய் என்றனர். நான் எழுந்து உளு செய்து விட்டு,அதன் பின்னர் திரும்பினேன் என் முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(மாலிக் மூஅத்தா(ரஹ்), பைஹகி(ரஹ்))

ஆணுருப்பை தொட்டால் உளு நீங்கும்:

யார் தமது மர்ம உறுப்பை தொடுகிறாரோ அவர் உளு செய்யும் வரை தொழக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறுனார்கள் என புஸ்ரா பின்த் ஸஃப்வான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(திர்மதி(ரஹ்),அஹ்மத்(ரஹ்),அபூதாவுத்(ரஹ்),இப்னுமஜா(ரஹ்),நஸயி(ரஹ்),முஅத்தா(ரஹ்),இப்னுஹிப்பான்(ரஹ்),இப்னுகுஸைமா(ரஹ்),ஹாகிம்(ரஹ்))

இதில் சுத்ததற்குகான விளக்கத்தை தெள்ள தெளிவாக சகாபாக்கள்(ரலி) அவர்கள் விளக்கம் அறிந்து வைத்ததின் காரணமாக தான் சகபாக்கள்(ரலி) அவர்கள் மற்றொருசகாபிகளை(ரலி) பார்த்து நீ உளு செய் என்று சொன்னார்கள்.

மாதவிடாய் ஏற்பட்டவர்களும்,குளிப்பு கடமையானவர்களும் குரானை எதனையும்ஓதலாகாது:

மாதவிடாய் ஏற்பட்டவர்களும்,குளிப்பு கடமையானவர்களும் குரானை எதனையும்ஓதலாகாது என நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள் என் இப்னுஉமர்(ரலி)அவர்கள்அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்),அபுதாவுத்(ரஹ்),இப்னுமஜா(ரஹ்))

நபித்தோழர்கள்,தாபின்கள் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரில் அநேகரின்கூற்றும்,ஸூப்யான்அஸ் ஸவ்ரீ(ரஹ்),இப்னுல் முபாரக்(ரஹ்), ஷாஃபீ(ரஹ்),அஹமத்(ரஹ்),இஸ்ஹாக்(ரஹ்)ஆகியோரின் கருத்தும் இதுவாகும்.

ஒரு வசனத்தின் ஒரு பகுதி அல்லதுஒருஎழுத்து தவிர மாதவிடாய்காரிகளும்,குளிப்பு கடமையானவர்களும் ஓதக்கூடாதுஎன்கின்றனர், ஆயினும் தஸ்பிஹ்,தஹ்லில் போன்றவற்றிற்கு அனுமதி உண்டுஎன்கின்றனர்.மேலும் இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களின் மஸாயில்கள் என்ற நூலில் 5 ம்பக்கத்தில் அவரின் நெருங்கிய நண்பர் அஸ்ஸூயூத்தி(ரஹ்) அவர்கள் இமாம்அஹமது(ரஹ்), அவர்களிடம் உளுவின்றி ஒருவர் ஓதலாமா? என்று கேட்டேன். அதற்குஅவர்கள் ஆம் என்றார்கள், ஆயினும் உளூ இல்லாமல் குரானை தொட்டு ஓதக்கூடாதுஎன்றனர்.

நபி(ஸல்) அவர்கள் குளிப்பு கடமையாகாமிலிருக்கும் போது மட்டும் தான்திருகுரானை ஒதுவார்கள்:

குளிப்புகடமையாகாமலிருக்கும் போது எல்லா நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு குரானை ஓதி காட்டுவார்கள் என அலி(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்),நஸயி(ரஹ்))

நபித்தோழர்கள்,தாபின்கள் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரில் அநேகரின்கூற்றும்,ஸூப்யான் அஸ் ஸவ்ரீ(ரஹ்),இப்னுல் முபாரக்(ரஹ்), ஷாஃபீஅஹமத்(ரஹ்),இஸ்ஹாக்ஆகியோரின் கருத்தும் இதுவாகும்


உமர்(ரலி) வாழ்க்கை வரலாற்றில் ஒர் பாடம்:

கப்பாப் (ரலி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனதுஏட்டிலுள்ள தாஹா எனத் தொடங்கும் அத்தியாயம் தாஹாவின் வசனங்களை கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் வருவதை அறிந்த கப்பாப் (ரலி)வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் சகோதரியும் அந்த ஏட்டை மறைத்துவிட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரலி)கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார். வீட்டினுள் நுழைந்த உமர்,உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன? என்று கேட்டதற்குநாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை என்றுஅவ்விருவரும் கூறினார்கள்.அப்போது உமர் நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா? என்று கேட்டார்.அதற்கு அவரது மச்சான் உமரே! சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிரவேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?என்று கேட்க,உமர் கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து அவரை பலமாகத்தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரைவிலக்கினார். உமர் கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரதுமுகத்தை ரத்தக் காயப்படுத்தினார்.கோபம் கொண்ட உமரின் சகோதரி,உமது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா? (அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும்இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சிகூறுகிறேன் என்று உரக்கக் கூறினார்.தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் நிராசை அடைந்தார். தனதுசகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும்,வெட்கமும் ஏற்பட்டது.உங்களிடமுள்ள இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.அதற்கு அவரது சகோதரி நீ அசுத்தமானவர். நீர் எழுந்து குளித்து வாரும்என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார்.பிறகு குளித்து வந்தவுடன் திருமறையை கையிலேந்திபிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம் (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகியஅல்லாஹ்வின் பெயரால்) என்று ஓதியவுடன் ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்என்று கூறி, தொடர்ந்து தாஹா என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதிமுடித்துவிட்டு இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்!எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்! என்று கேட்டுக் கொண்டார்.உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரலி) வெளியேறி வந்து,உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு, அல்லாஹ்வே! உமர்அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு! என்று நபி (ஸல்)அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்தபிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான்உண்மையில் நம்புகிறேன் என்றுரைத்தார்.(முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கைவரலாறு)

மறுக்கும் சாரர்களின் வைக்கும் ஆதாரம்:

'நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில்நின்றிருந்தபோது நபி(ஸல்) என்னைச் சந்தித்தார்கள். அப்போது, நான் நழுவிவிட்டேன். குளித்துவிட்டுப் பின்னர் வந்தேன். நபி(ஸல்) அவர்கள் 'அபூஹுரைரா! எங்கு நழுவி விட்டீர்?' என்று கேட்டதற்கு, 'குளிப்புக்கடமையாகியிருந்தேன்; எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதைவெறுத்தேன்' என்றேன். அப்போது 'ஸுப்ஹானல்லாஹ்! ஒரு முஸ்லிம் அசுத்தமாகவேமாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தெளிவான விளக்கம்:

1.தூய்மையின்றி எந்த தொழுகையும், மோசடி பொருட்களிலிருந்து(செய்யப்படும்)எந்த தர்மமும்(அல்லாவினால்) ஏற்கப்படாது என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(திர்மதி(ரஹ்))

2.நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக்கடமையானவராக இருக்கும்போது உளூச் செய்துவிட்டுத் தூங்கலாம்' என்றுஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.(புகாரி(ரஹ்))

3.சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும்,தொழுகையின் திறவுகோல் உளுவாகும் எனநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்))

குளிப்பு கடமையானவர் உளு செய்யாமல் அல்லது குளிப்பு கடமை நிறைவேற்றாமல் உறங்க சென்றால்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எந்த இல்லத்தில் உருவப்படமோ, நாயோ இருக்கின்றதோ அல்லது குளிப்பு கடமையானவர்கள் இருக்கின்றார்களோ அங்கு வானவர்கள் நுழையமாட்டார்கள் என அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(அபூதாவுத்(ரஹ்),நஸயி(ரஹ்),தாரமி(ரஹ்),அஹ்மத்(ரஹ்))

இங்கு ஒரு செயலை குறிப்பிட்டு கூறுகிறார்கள். எனவே நீங்கள் குளிப்புகடமையாய் இருக்கும் போது ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டான் என எண்ணி உளுசெய்யாமல் உறங்குவீர்களா? முஸ்லிம் அசுத்தமாக மாட்டான் என்று சொல்லிதொழுக முடியுமா? அது போல் தான் தூய்மை இல்லாமல் குரானை தொட வேண்டாம்என்று சொன்னார்கள். அதுவும் ஒரு இபாதத் தான், ஒரு செயல் வெளிப்படையாகவெளிப்படும் போது அது எடுத்து செயல்படுத்துவது தான் ஒரு முஸ்லிமின்கட்டாய கடமையாகும்.நபி(ஸல்) ஒரு செயலை பற்றி கட்டளை இட்டால் அது செய்துதான் ஆக வேண்டும்.
எனவே குர்ஆனை தொடும் போதும், தொட்டு ஓதும் போது உளுவுடன் இருப்போமாக!
அல்லா மிக்க நன்கு அறிந்தவன்


கடையநல்லூர் அக்ஸா.காம் பதித்தவை

1)வாதம்

நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு எழுதிய கடிதமொன்றில் ‘குர்ஆனைப்தூய்மையானவர்களைத் தவிர மற்றெவரும் தொடமாட்டார்’ என்றுஎழுதியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூபக்ருபின் முஹம்மதுபின் அம்ரு பின்ஹஜ்மு (ரலி). மேற்காணும் ஆயத்தில் இதனைத் தொடமாட்டார்கள் எனும் வாசகம்இருக்கிறது. இதனை என்று சொல்லப்பட்டிருப்பது ‘பாதுகாக்கப்பட்ட ஏட்டை’என்பதுதான் பொருள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் திருக்குர்ஆன்விரிவுரையாளர்களும் கூறுகிறார்கள். அடுத்து நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் ‘குர்ஆனைப்பரிசுத்தமானவரின்றி மற்றெவரும் தொடமாட்டார்’ என்று எழுதியிருப்பதால்நபி (ஸல்) அவர்களே பாதுகாக்கப்பட்ட ஏட்டை என்று பொருட்கொள்ளாது குர்ஆனைஎன்று தானே பொருள் கொண்டிருக்கிறார்கள் எனலாம். அப்படி என்றால் அவர்கள்தொடவேண்டாம் என்று கூறாது ‘தொடமாட்டார்’ என்றுதானேசொல்லியிருக்கிறார்கள். அவ்வாறிருக்க தொடமாட்டார் என்னும் வார்த்தைக்குதொட வேண்டாம் என்று பொருட்கொள்வது எங்கனம் பொருந்தும்?

பதில்

நீங்கள் சுட்டிக்காட்டிய செய்தி பலவீனமானதாகும் என்று நாம் நம்முடைய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளோம்.
2) நான் ஸஅது பின் அவக்காஸ்(ரலி) அவர்கள் முன், குரானை படித்து கொண்டுஇருந்தேன், அப்போது நான் சொரிந்து கொண்டேன். அது சமயம் என்னை பார்த்துஸஅது(ரலி) அவர்கள் ,உனது ஆண்குறியை தொட்டிருக்கலாம், அவ்வாறு தானே? என்றுகேட்க அதற்கு நான் (முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)) ஆம்என்றேன். நீ எழுந்து உளு செய் என்றனர். நான் எழுந்து உளு செய்து விட்டு,அதன் பின்னர் திரும்பினேன் என் முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(மாலிக் மூஅத்தா(ரஹ்), பைஹகி(ரஹ்))இது சரியான தொடராகும், இதை சரியான தொடர் என்று தக்ரிப் என்ற நூலில் இமாம்நவவி(ரஹ்) அவர்களும், அதன் விளக்க உரை நூலில் இமாம் அஸ்ஸுயத்தி(ரஹ்)அவர்களும் சரியானது என முடிவு செய்து இருக்கின்றனர்.

பதில்
நீங்கள் குறிப்பிட்ட செய்தி முஅத்தா மா­க் என்ற புத்தகத்தில் 82 வது செயதியாக இடம் பெற்றுள்ளது. என்றாலும் இந்த செய்தி நபி ஸல் அவர்கள் சம்மந்தப்பட்டது அல்ல. ஸஹாபிகளின் கருத்துதான்.
மேலும் ஆன் குறியை தொட்டாள் ஒளு நீங்குமா என்றால் அதுவும் நீங்காது. எனவே இந்த செய்தியை ஆதாரத்திற்காக எடுத்துக் கொள்ள முடியாது.

வாதம்
3) உமர்(ரலி) இஸ்லாத்தை ஏற்கும் முன் தன்சகோதரிடம் நீ படித்த அந்த திரு குரானை கொடு என்று கேட்க அதற்கு உமர்(ரலி)அவர்களை நோக்கி அவர் சகோதரி நீங்கள் தூய்மையாகதவரை நீங்கள் இத்திருகுரானைதொடமுடியாது,குளித்துவிட்டு வாருங்கள் என சகோதரி கூற பிறகு உமர்(ரலி)அவர்கள் குளித்ததற்கு பின் அவருக்கு திருமறையின் பாகங்கள்கொடுக்கப்பட்டன.இதிலிருந்து திருமறை திருகுரான் ஒரு சில பாகங்கள் கொடுக்கும் போதே உமர்(ரலி) அவர்களின் சகோதரி உமர்(ரலி) தூய்மையாகும் வரை தரவில்லை..எனவே ஒரு முஸ்லிம் யாருக்கவது ஒரு சிறு பகுதி திருகுரானின் ஒரு சிலவசனத்தை கொடுத்தாலும் அவர் குளிப்பு கடமை ஆகாதவராய் வேண்டும் என்பதுசகபாக்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.

பதில்
நீங்கள் குறிப்பிடும் செய்தி தாரகுத்னீ 435, பைஹகீ 417 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்செய்தி ஆதாரப்பூர்வமானதா என்பதை இதைப் பதிவு செய்த இமாம் தாரகுத்னீ அவர்களே அச்செய்தியின் கீழ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
(இதில் இடம்பெறும்) அல் காஸிம் பின் உஸ்மான் என்பவர் பலம் வாய்ந்தவர் இல்லை.
மேலும் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இடம்பெறவில்லை. உமர் (ரரி) அவர்களின் சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இந்த செய்தியை மையாமாக வைத்து எடுத்து வைத்த மற்ற உங்களுடைய வாதங்களும் வீழ்ந்துவிடுகின்றன.

அல்லாவும் திருமறையில் இணைவத்து வணங்குபவர்களை பற்றிஈமான் கொண்டவர்களே! நிச்சியமாக இணைவைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே(அல்குரான் 9:28)
என்று அல்லா நமக்கு அவர்களை பற்றி அறிவிக்கின்றான்.அப்படி அல்லா அவ்வாறு கூறும் போது அவர்களுக்கு எப்படி இத்திரு வேததத்தைகொடுக்க முடியும். எனவே தூய்மையானவர்களைத் தவிர யாரும் இக்குரானை தொட வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
சுத்தம்(உளூவு) இல்லாதவர்கள் குரானை தொட வேண்டாம். தொடக்கூடாது எனநிச்சியமாக நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு கடிதம் எழுதினார்கள். எனஅபூபக்ரு பின் முகம்மது பின் ஹஜ்ம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(தப்ரானி(ரஹ்))
3.யமன் தேசவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள்,அக்கடித்தில் சுத்தமில்லாதவரை தவிர,(மற்றெவரும்), குரானை தொடமாட்டார்கள்.(தொடக்கூடாது) என்று இருந்தது என அம்ருபின் ஹஜ்ம்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்(தப்ரானி(ரஹ்))
4)அம்ர் இப்னு ஹஸ்கி(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எழுதியகடிதத்தில் தூய்மையானவர்களை தவிர வேறெவரும் திருகுரானை தொடவேண்டாம் எனஎழுதி இருந்தார்கள் என அப்துல்லா இப்னு அபீபக்கர்(ரலி) எனஅறிவிக்கிறார்கள்(நஸயீ(ரஹ்),இப்னுஹிப்பான்(ரஹ்))மேற்கூறப்பட்டுள்ள ஹதிஸ் முர்ஸல் வகையை சார்ந்தது என்றும், அதில் வரும்அறிவிப்பாளர்களில் சுலைமான் பின் அர்க்கம் எனபவர் பலவினமானவர் என்பதால்இந்த ஹதிஸ் ஏற்க முடியாது எனவே குரானை உளுவின்றி தொடலாம் என்கின்றனர். தெளிவான விளக்கம்:
மேற்குறிப்பிட்டுள்ள ஹதிஸ்களில் சுலைமன் பின் அர்க்கம் அவர்கள் இடம்பெறுகிறார்கள், ஆனால் அதே ஹதிஸ் சுலைமான் பின் அர்க்கம் வழியே அறிவிக்கமால் அல்கவ்லானி எனறழக்கப்படும் சுலைமான் பின் தாவுது அவர்கள்அம்ரு பின் ஹஜ்ம்(ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படுள்ளது. அதையும்தொடலாம் சகோதரர்கள் பார்க்க வேண்டும்.
ஹதிஸ் தொடர்:
நபி(ஸல்)—>அம்ரு பின் ஹஜ்ம்(ரலி)—>சுலைமான் பின்தாவுது(ரஹ்)—>அபுல் ஹஸன் முகம்மது பின் அஹ்மது அல் ஜஃபரானி(ரஹ்)(ஃபவாயீத்அபீஷீஐபு)
மேலும் அஹ்மது பின் ஹன்பல்(ரஹ்) அவர்களிடம் இந்த ஹதிஸ் கேட்கப்பட்டது, அதற்குஅவர்கள் இந்த ஹதிஸ் சரியாக இருக்குமேன் நான் ஆதரவு வைக்கிறேன் என்பதாகக்கூற, பகவி(ரஹ்) கூறியாதாகவும்,சுலைமான் பின் தாவுது(ரஹ்) அறிவிக்கிறார்கள்.
சுலைமான் பின் தாவுது(ரஹ்) பற்றி ஹதிஸ்கலை வல்லுனர்கள்:
சுலைமான் பின் தாவுது ஹதிஸ் கலை வல்லுனர்களிடத்தில் மிகநம்பிக்கைகுரியவர், எனவே இந்த ஹதிஸ் ஆதரபூர்வமானது, ஏற்கதக்கதாகும்.லிஅல்பானி(ரஹ்)
மேலும் அந்த ஹதிஸ் பற்றி இன்னும் பல இமாம்கள் அறிவித்துள்ளார்கள்.
1.யமன் தேசவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள்,அக்கடித்தில் சுத்தமில்லாதவரை தவிர,(மற்றெவரும்), குரானை தொடமாட்டார்கள்.(தொடக்கூடாது) என்று இருந்தது அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.
ஹதிஸ் நூல்கள்:
1.முஃஜமுஸ்ஸகீர்(ரஹ்) பக்கம் 239
2.தப்ரானி(ரஹ்) அவர்கள் அல்கபரில் பாகம் 3லில் 194/2
3.பைஹகீ(ரஹ்) 1/88
4.இப்னு அஸாகிர்(ரஹ்) 13ம் பாகம் 214/2
அப்துல்லா பின் உமர்(ரலி)வழியாக வரும் ஹதிஸ்களில் சயிது பின் முகம்மதுவழியில் இதே வாசகம் கொண்டு நபி(ஸல்) அவர்கள் வரை அறிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த ஹதிஸ் ஸாலிமிடம்(ரலி) செவியுற்றதாக அவர் தனது தந்தை கூறியதாகஇடம் பெற்றுள்ளது.இந்த ஹதிஸ் இமாம் அஹ்மது அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார்கள் என இமாம் அஸ்ரம்(ரஹ்) கூறுகிறார்கள்.
2. நபி(ஸல்) அவர்கள் எமன் நாட்டிற்கு என்னை அனுப்பிய போது நீர்சுத்தமானவராக அன்றி, குரானை தொட வேண்டாம் எனக் கூறினார்கள் எனமதருல்வுர்ராக் ஹஸ்ஸான் பின் பிலால்(ரலி) அறிவிக்கிறார்கள்.(ஹாகிம்(ரஹ்))இமாம் ஹாகிம்(ரஹ்) அவர்கள் இந்த ஹதிஸ் சரியான தொடர் எனக் கூற, இமாம் தஹபி(ரஹ்) அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார்கள்,

பதில்
நீங்கள் குறிப்பிடும் இந்த செய்தி : முஅத்தா 419 இடம் பெற்றுள்ளது. இது பற்றி விமர்சனம் கீழே கொடுக்கப்படுகிறது.
இதே செய்தி அபூதாவூத் அவர்களின் அல்மாரஸீல் என்ற நூரிலும், தாரகுத்னீயிலும், தப்ரானீ மற்றும் பல நூற்களிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெறும் இச்செய்தி முழுமையான அறிவிப்பாளர் வரிசை கொண்ட செய்தி அல்ல! இதில் சில அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். இச்செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பவர் தாபியீ ஆவார். இவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல! இவ்வாறிருக்க அவர் நபி (ஸல்) அவர்கள், அம்ர் பின் ஹஸ்ம் (ரரி)க்கு எழுதிய கடிதத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்க முடியாது. அவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஒன்றோ அல்லது பல அறிவிப்பாளர்களோ விடுபட்டிருக்க வேண்டும். எனவே இவ்வகை செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் விடுபட்டவர்களில் பொய்யர்கள், பலவீனர்கள் இருக்கக் கூடும் என்பதால் இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு தாபியீ, நபி (ஸல்) அவர்கள் தொடர்புடைய செய்தியை அறிவித்தால் அச்செய்திக்கு முர்ஸல் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுவர். எனவே தான் இமாம் அபூதாவூத் அவர்கள் தமது மராஸீல் (முர்ஸலான செய்திகள்) என்ற நூரில் இச்செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். எனவே இச்செய்தியை ஆதாரமாகக் கொண்டு சட்டம் கூற முடியாது.
இதே செய்தி சில நூற்களில் கூடுதலாக இரண்டு அறிவிப்பாளர்கள் இடம் பெற்று தொடர்பு முழுமை பெற்ற அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப் பட்டுள்ளது. எனினும் இச்செய்தியும் பலவீனமானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் வாரிசுரிமைச் சட்டம், சில வழிமுறைகள், இழப்பீடு சட்டங்கள் எழுதப்பட்டிருந்தன. அத்துடன் ‘தூய்மையானவர்களைத் தவிர குர்ஆனைத் தொடக் கூடாது’ என்றும் எழுதப் பட்டிருந்தது.
அறிவிப்பவர் : அம்ர் பின் ஹஸ்ம் (ரரி), நூல் : ஷுஅபுல் ஈமான் (பைஹகீ)
இதே செய்தி தாரமீ, தாரகுத்னீ ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. அனைத்து நூற்களிலும் சுலைமான் பின் தாவூத் அல்கவ்லானீ என்பவர் இடம் பெறுகின்றார்.
ஸுஹ்ரியிடமிருந்து இவரும், இவரிடமிருந்து யஹ்யா பின் ஹம்சாவும் அறிவிக்கும் இந்த சுலைமான் பின் தாவூத் என்பவரைப் பற்றி யஹ்யா பின் முயீனிடம் கேட்கப்பட்ட போது, ‘இவர் ஒரு பொருட்டாகவே கருதப்பட மாட்டார்’ என்று கூறினார்கள்.
(நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்: 4, பக்கம்: 110)
(தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்ற முர்ஸலான) இச்செய்தி முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் அது ஆதாரப்பூர்வமானது அல்ல. (நூல்: அல்மராஸீல், பாகம் 1, பக்கம் 122)
எனவே அம்ர் பின் ஹஸ்ம் (ரரி) வழியாக அறிவிக்கப் படுவதில் முர்ஸல் என்ற தரத்தில் அறிவிக்கப் படுவதே சரியானதாகும். இச்செய்தியை ஆதாரமாகக் கொண்டு குர்ஆனை தூய்மையின்றி தொடக்கூடாது என்று வாதிட முடியாது.
தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரரி), நூல் : தப்ரானீ ஸகீர் லி கபீர், தாரகுத்னீ
இச்செய்தியும் ஆதாரப்பூர்வமானது இல்லை. இதில் சுலைமான் பின் மூஸா என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.
சுலைமான் பின் மூஸா என்பவர் ஹதீஸ் துறையில் பலமானவர் இல்லை என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் 1, பக்கம் 49)
இவரிடத்தில் பல மறுக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன என்று இமாம் புகாரி குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் 1, பக்கம் 35)
சுலைமான் பின் மூஸா என்பவரைப் பற்றி குறை கூறப்பட்டுள்ளது என்று அலீ இப்னுல் மதீனீ குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவுல் உகைலீ, பாகம் 2, பக்கம் 140)
சுலைமான் பின் மூஸா என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப் பட்டவர் இவரிடமிருந்து நான் எதையும் அறிவிக்க மாட்டேன். இவர் அறிவித்த பெரும்பான்மையான செய்திகள் மறுக்கப் படவேண்டியவையாகும் என்று புகாரி இமாம் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: இலலுத் திர்மிதீ, பாகம் 1, பக்கம் 257)
மேலும் இதே செய்தியில் அப்துல் மாரிக் பின் அப்துல் அஜீஸ் என்ற இப்னு ஜுரைஜ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் ‘இன்னாரிடமிருந்து நான் கேட்டேன்’, ‘எனக்கு அறிவித்தார்’ என்பது போன்ற தெளிவான வாசகங்களைக் கொண்டு அறிவித்தால் மட்டுமே அவரின் அறிவிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.
இப்னு ஜுரைஜ், ‘எனக்கு இவர் அறிவித்தார்’ என்று கூறினால் அவர் அடுத்தவரிடம் கேட்டதாகும். அவர் சொன்னார் என்று கூறினார் அது மதிப்பற்றதாகும் என்று யஹ்யா பின் ஸயீத் குறிப்பிடுகின்றார்.
இப்னு ஜுரைஜ் என்பவர், ‘எனக்கு இவர் அறிவித்தார்’ என்றோ அல்லது ‘நான் செவியுற்றேன்’ என்றோ கூறினால் அது ஆதாரத்திற்கு ஏற்றதாகும் என்று தஹ்லீ குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 6, பக்கம் 359)
குறிப்பிட்ட இந்தச் செய்தியில் இப்னு ஜுரைஜ் அவர்கள் தமக்கு அடுத்த அறிவிப்பாளரிடமிருந்து, எனக்கு அறிவித்தார், நான் செவியுற்றேன் என்ற தெளிவான வாசகங்கள் இல்லாமல் ‘அன்’ என்ற வார்த்தையைக் கொண்டு அறிவிப்பதால் இச்செய்தி மேலும் பலவீனமடைகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்….. ‘நீ தூய்மையாக இருந்தாலே தவிர குர்ஆனைத் தொடாதே!’
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரரி), நூல் : தப்ரானீ (கபீர்)
இச்செய்தியில் இஸ்மாயில் பின் ராபிவு என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமானவர்.
இஸ்மாயில் பின் ராபிவு ஹதீஸில் விடப்பட வேண்டியவர் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்1, பக்கம் 16)
இஸ்மாயில் பின் ராபிவு என்பவரைப் பற்றி அஹ்மத் பின் ஹன்பல் அவர்களிடம் கேட்டேன். பலவீனமானவர் என்றார்கள்.
இஸ்மாயீல் பின் ராபிவு என்பவர் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று யஹ்யா பின் முயீன் அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
(நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 2, பக்கம் 162)
அஹ்மத், யஹ்யா மற்றும் பெரும் கூட்டத்தினர் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். தாரகுத்னீ மற்றும் சிலர், இவர் ஹதீஸில் விடப்பட வேண்டியவர் என்று கூறியுள்ளார்கள். இவருடைய அனைத்துச் செய்திகளிலும் ஆட்சேபணை உள்ளது என்று இப்னு அதீ குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம் 1, பக்கம் 384)

வாதம்

மாதவிடாய் ஏற்பட்டவர்களும்,குளிப்பு கடமையானவர்களும் குரானை எதனையும்ஓதலாகாது:
மாதவிடாய் ஏற்பட்டவர்களும்,குளிப்பு கடமையானவர்களும் குரானை எதனையும்ஓதலாகாது என நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள் என் இப்னு உமர்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்),அபுதாவுத்(ரஹ்),இப்னுமஜா(ரஹ்))
நபித்தோழர்கள்,தாபின்கள் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரில் அநேகரின்கூற்றும்,ஸூப்யான்அஸ் ஸவ்ரீ(ரஹ்),இப்னுல் முபாரக்(ரஹ்), ஷாஃபீ(ரஹ்),அஹமத்(ரஹ்),இஸ்ஹாக்(ரஹ்)ஆகியோரின் கருத்தும் இதுவாகும்.
ஒரு வசனத்தின் ஒரு பகுதி அல்லதுஒருஎழுத்து தவிர மாதவிடாய்காரிகளும்,குளிப்பு கடமையானவர்களும் ஓதக்கூடாதுஎன்கின்றனர், ஆயினும் தஸ்பிஹ்,தஹ்லில் போன்றவற்றிற்கு அனுமதி உண்டுஎன்கின்றனர்.மேலும் இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களின் மஸாயில்கள் என்ற நூலில் 5 ம்பக்கத்தில் அவரின் நெருங்கிய நண்பர் அஸ்ஸூயூத்தி(ரஹ்) அவர்கள் இமாம்அஹமது(ரஹ்), அவர்களிடம் உளுவின்றி ஒருவர் ஓதலாமா? என்று கேட்டேன். அதற்குஅவர்கள் ஆம் என்றார்கள், ஆயினும் உளூ இல்லாமல் குரானை தொட்டு ஓதக்கூடாதுஎன்றனர்.

பதில்
நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதியில் 121 வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. எனினும் இந்த செய்தியை பதிவு செய்த திர்மிதி அவர்களே பலவீனம் என்று சொல்­யுள்ளாôகள்.
மேலும் நீங்கள் அந்த செய்தியின் கீழ் இடம் பெற்றிருக்கும் அறிஞர்களின் கருத்தை மொழிபெயர்த் நீங்கள் அதற்கும் கீழாக இடம் பெற்றிருக்கும் இமாம் திர்மிதியன் விமர்சனத்தை ஏன் மொழிபெயர்க்கவில்லை?
இப்படி மறைத்துதான் உங்கள் வாதத்தை நீங்கள் நிலைநாட்ட வேண்டுமா?

வாதம்
நபி(ஸல்) அவர்கள் குளிப்பு கடமையாகமிலிருக்கும் போது மட்டும் தான்திருகுரானை ஒதுவார்கள்:
குளிப்புகடமையாகாமலிருக்கும் போது எல்லா நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு குரானை ஓதி காட்டுவார்கள் என அலி(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்),நஸயி(ரஹ்))
நபித்தோழர்கள்,தாபின்கள் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரில் அநேகரின்கூற்றும்,ஸூப்யான் அஸ் ஸவ்ரீ(ரஹ்),இப்னுல் முபாரக்(ரஹ்), ஷாஃபீஅஹமத்(ரஹ்),இஸ்ஹாக்ஆகியோரின் கருத்தும் இதுவாகும்

பதில்

நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதியில் 136 வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் ஸலமா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மீது சில ஆட்சேபனைகள் உள்ளன.

மேலும் இந்த செய்தி ஆயிஷா ர­ அவர்கள் அறிவிக்கும் நபி ஸல் அவர்கள் எல்லா நிலையிலும் இறைவனை நினைவு கூர்வார்கள் என்ற செய்திக்கும் குர்ஆனில் அவர்கள் இருந்த நிலையிலும் படித்த நிலையிலும் இறைவனை நினைவு கூர்வார்கள் என்ற செய்திக்கும் இது முரணாக இருக்கிறது. செய்தியை சொன்ன நீங்கள்தான் இந்த முரண்பாட்டை நீக்க வேண்டும்.



வாதம்



குளிப்பு கடமையானவர் உளு செய்யாமல் அல்லது குளிப்பு கடமை நிறைவேற்றாமல் உறங்க சென்றால்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எந்த இல்லத்தில் உருவப்படமோ, நாயோ இருக்கின்றதோ அல்லது குளிப்பு கடமையானவர்கள் இருக்கின்றார்களோ அங்கு வானவர்கள் நுழையமாட்டார்கள் என அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(அபூதாவுத்(ரஹ்),நஸயி(ரஹ்),தாரமி(ரஹ்),அஹ்மத்(ரஹ்))



பதில்

நீங்கள் குறிப்பிடம் செய்தி நஸயீ 261 ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின்அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அப்தில்லாஹ் பின் நுஜய்யி என்பவர் மீதும் அவருடைய தந்தை மீதும் இமாம்கள் விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த செய்தியை வைத்து ஆதாரம் எடுக்க முடியாது. மேலும் இதை மையமாக வைத்து எழுப்பப்படும் வாதங்களும் நிற்காது.



ஆதாரப்பூர்வமான செய்திகள் கிடைத்தால் கொண்டு வாருங்கள். பலவீனமான செய்திகளை காட்டி சட்டம் சொல்லாதீர்கள்.

நமது பதில்

அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பராக்காத்துஹூ

//நீங்கள் குறிப்பிட்ட செய்தி முஅத்தா மா­க் என்ற புத்தகத்தில் 82 வது செயதியாக இடம் பெற்றுள்ளது. என்றாலும் இந்த செய்தி நபி ஸல் அவர்கள் சம்மந்தப்பட்டது அல்ல. ஸஹாபிகளின் கருத்துதான்.

மேலும் ஆன் குறியை தொட்டாள் ஒளு நீங்குமா என்றால் அதுவும் நீங்காது. எனவே இந்த செய்தியை ஆதாரத்திற்காக எடுத்துக் கொள்ள முடியாது.

//

உங்கள் அறிவுக்கு ஒத்து வரவில்லை என்று சகாபாக்கள் கருத்து தான் சொல்லி அலட்சியமாக விட்டு விட முடியாது, அது போல் பல கருத்துகள் நான் எடுத்து வைக்க முடியும். உதரணத்திற்கு வருவோம், ஆண் உறுப்பை தொட்டால் உளூ முறியுமா அல்லது முறியாதா என்று இரு வேறு கருத்துகள் உள்ளன, ஆனால் ஒன்றை மறைத்து ஒன்றை வெளியிடுவதாக என்னை குறை சொன்னீர்கள்,ஆனால் தாங்களும் அதே போல் தான் செய்து உள்ளீர்கள்,

மர்வான்(ரஹ்) அவர்கள் மதினாவின் ஆளுநராக இருந்த போது ஒருவரின் கை அவர் மறைவுறுப்பில் பட்டுவிட்டால், அதற்காக உளூ செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்கள், அப்போது நான் அதை மறைத்து மறைவுறுப்பைத் தொட்டால் உளூச் செய்தாக வேண்டும் என்று (சட்டம்) இல்லை என்று கூறினேன்,உடனே மர்வான்(ரஹ்) அவர்கள் எதனெல்லாம் உளு செய்ய வேண்டும் என்று அல்லாவின் தூதர்(ஸல்) அவர்கள் விவரிக்கும் போது மறைவு உறுப்பை தொட்டுவிட்டாலும் உளூ செய்ய வேண்டும் என்று தாம் செவியுற்றதாக புஸ்ரா பின் த் ஸஃப்வான்(ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள் என்று கூறினார்கள்.

உர்வா(ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்: இது பற்றி மர்வான்(ரஹ்) அவர்களிடம் நான் தொடர்ந்து விவாத்தித்து வந்தேன், அப்போது மர்வான்(ரஹ்) அவர்கள் தம் காவலாளிக்களுள் ஒருவரை அழைத்து அவரை புஸ்ரா(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள், அவர் மர்வான்(ரஹ்) அவர்களுக்கு புஸ்ரா(ரலி) அவர்கள் அறிவித்த செய்திப்பற்றி புஸ்ரா(ரலி) அவர்களிடமே விசாரித்தார்.அப்போது புஸ்ரா(ரலி) அவர்கள் மர்வான்(ரஹ்) அவர்களுக்கு அறிவித்த அதே செய்தியை அவரிடம் சொல்லி அனுப்பி வைத்தார்கள். என உர்வா பின் அஸ்ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்

இமாம் நஸயி(ரஹ்) 163,164. இமாம் திர்மதி(ரஹ்) 77,இமாம் அபூதாவுத்(ரஹ்) 154, இமாம் அஹ்மத்(ரஹ்)(26030) , இமாம் மாலிக்(ரஹ்) மூவத்தா 89, இமாம் இப்னு மாஜா(ரஹ்) 472, இமாம் தாரமி(ரஹ்) 718,719,இமாம் ஹாகிம்(ரஹ்), இமாம் இப்னு குஸைமா(ரஹ்) 33.போன்ற இமாம்கள் ஸஹிஹ்வானது என றிவிப்பு செய்கிறார்கள்.

இமாம் புகாரி(ரஹ்) அவர்களும் மேற்கெண்ட செய்தி ஆதராபூர்வமானது எனவும் அறிவிக்கிறார்கள்,

உங்களில் ஒருவர் மறைவுறுப்பை தொட்டு விட்டால் அவர் உளூ செய்யட்டும் என இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,இமாம் மாலிக்(ரஹ்) மூவத்தா 90,91,92,93


அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்களுடன் நான் பயணத்தில் இருந்தேன், அப்போது அவர்கள் சூரியன் உதியமாகி பின் உளூச் செய்து விட்டு, பின்பு தொழுத்தை பார்த்தேன், இந்த தொழுகை தான் சற்று முன் தொழுதீர்களே! என்றேன். சுப்ஹு தொழுகைக்காக நான் உளூ செய்து விட்டு, என் மறைவுறுப்பை தொட்டேன், எனவே மீண்டும் உளு செய்தேன். மீண்டும் தொழுதேன் என்று பதில்கூறினார்கள், இதை ஸாலிம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இமாம் மாலிக்(ரஹ்) மூவத்தா 90,91,92,93



என் தந்தை அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்கள் குளித்து விட்டு பின்பு உளு செய்வதை பார்த்தேன், தந்தை அவர்களே! குளித்ததே உளூவிற்கு பகரமாகி விடும் என்று நான் கேட்டேன். (அதற்கு) ஆம் பகரமாகிவிடும் தான் என்றும் , நான் மறைவுறுப்பை சில சமயம் தொட்டிருக்க கூடும், எனவே தான் உளு செய்தேன் என(பதில்) கூறினார்கள், இதை ஸாலிம்(ரலி) அவர்கள் கூறினார்கள்.இமாம் மாலிக்(ரஹ்) மூவத்தா 90,91,92,93.

மேலுள்ள செய்தியில் இப்னு உமர்(ரலி) அவர்களின் சொந்த கூற்றாகவே அமைந்தது என வெளிப்படையாக மனதில் தோன்றலாம், ஆனால் அவர்கள் எப்படி நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை பின்பற்றினார்கள் என்று ஒரு சிறு விளக்கம் கொடுத்தால் தங்களுக்கு புரியும்.

இப்னு உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை நேசித்த விதம்:

முஜாஹித் (ரலி) அறிவிக்கிறார்கள்:

நாங்கள் ஒரு பிரயாணத்தின் போது இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் பிரயாண வழியில் ஓரிடத்தில் சற்று விலகிச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் ஏன் இவ்வாறு இவ்விடத்தில் சற்று விலகிச் செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நபி (ஸல்) அவர்களை அவர்களின் பிரயாணத்தின் போது இவ்விடத்தில் இவ்வாறு சற்று விலகிச் சென்றதை நான் நேரில் பார்த்தேன். ஆகையால் நானும் அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்றே இவ்விடத்தில் சற்று விலகிச் செல்கிறேன் என்றார்கள். ( இமாம் அஹ்மத்(ரஹ்))

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் இவ்வழியாகப் பிரயாணம் செய்யும் போது, இவ்விடத்தில் தமது வானத்தை நிறுத்தி கீழே இறங்கி, தமது சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கழிப்பிடத்திற்குச் சென்றார்கள். அதை நினைவில் கொண்டவர்களாக இன்று உமர்(ரலி) அவர்களும் அதே இடத்தில் தாமும் இறங்கி, அவர்களைப் போன்றே தாமும் தமது சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக விரும்பி, கழிப்பிடம் செல்வதற்காக இவ்விடத்தில் இறங்கியுள்ளார்கள் என்றார். ( இமாம் அஹ்மத்(ரஹ்))

இப்னு உமர்(ரலி) அவர்கள் மக்காவுக்கும், மதீனாவுககுமிடையில் ஓரிடத்திலுள்ள மரத்தின் அருகே வந்த போது, அம்மரத்தடியில் இறங்கி சிறிது நேரம் படுத்துத்தூங்கி எழுந்துவிட்டு,நபி(ஸல்) அவர்கள் இவ்விடத்தில், இம்மரத்தடியில் சிறிது நேரம் படுத்தெழுந்ததை நேரில் கண்ட எமது நபியைப் போன்றே, படுத்தெழுந்திருக்க வேண்டும் என விரும்பியே இவ்வாறு படுத்தெழுந்திருக்கிறேன் என்றார்கள்(இமாம் பஜ்ஜார்(ரஹ்)

இது போன்று அபுபக்கர்(ரலி),உமர்(ரலி),உஸ்மான்(ரலி),அலி(ரலி),இப்னு மஸ்வூத்(ரலி),இப்னு அப்பாஸ்(ரலி), அன்ஸ்(ரலி) இன்னும் பல ஒவ்வோரு சகாபியும்(ரலி) நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை போட்டி போட்டு அமல் செய்தார்கள், சுன்னத் என்று அலட்சியம் படுத்தவில்லை.

அதனால் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி வெளிப்படையாக தெரிந்தாலும்,ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்கள் சொல்லாத,செய்யாத எதையும் சுயமாக செய்யமாட்டார்கள், மேலும் அதை அவர்கள் நபி(ஸல்) அவர்கள் நேசித்த விதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம், அதே போல் ஸஅது பின் அவக்காஸ்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத எதையும் அறிவித்திருக்க மாட்டார்கள், ஸஅது பின் அவக்காஸ்(ரலி) அவர்கள் கட்டளையிடும் போது முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி) அவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்க வில்லை, ஏனென்றால் முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவித்தார்கள் என அவர்கள் அறிந்திருந்தார்கள், உங்களைப் போல் அவர்கள் விதாண்டவதம் பண்ணவில்லை.



//நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதியில் 121 வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. எனினும் இந்த செய்தியை பதிவு செய்த திர்மிதி அவர்களே பலவீனம் என்று சொல்­யுள்ளாôகள்.

மேலும் நீங்கள் அந்த செய்தியின் கீழ் இடம் பெற்றிருக்கும் அறிஞர்களின் கருத்தை மொழிபெயர்த் நீங்கள் அதற்கும் கீழாக இடம் பெற்றிருக்கும் இமாம் திர்மிதியன் விமர்சனத்தை ஏன் மொழிபெயர்க்கவில்லை?

இப்படி மறைத்துதான் உங்கள் வாதத்தை நீங்கள் நிலைநாட்ட வேண்டுமா?//



சகோதரர் அவர்கள் இமாம் திர்மதி(ரஹ்) எந்த இடத்தில் பலவினாமானது ஹதிஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டும்,

இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் இஸ்மாயில் பின் அய்யாஷ்(ரஹ்) என்பவரைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார்கள், ஆனால் இஸ்மாயில் பின் அய்யாஷ் அறிவிக்கும் ஹதிஸ் அனைத்தும் இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் ஸஹிஹ்வான ஹதிஸ்களும்,ஹசன் தரத்திலும், அதே போல் இமாம் அஹ்மது(ரஹ்),இமாம் அபுதாவுத்(ரஹ்) அவர்களும் இவர் அறிவிக்கும் ஹசன் தரத்திலும் பதிவு செய்துள்ளார்கள்,இமாம் திர்மதி(ரஹ்) அவர்களின் ஹதிஸ் விளக்க உரையில் இமாம் ஹைதமி(ரஹ்) அவர்களும் இஸ்மாயில் பின் அய்யாஷ் அவர்களை பலமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.இஸ்மாயில் பின் அய்யாஷ் அவர்களை சிலர் விமர்ச்சனம் செய்தாலும், சிலர் இவர் நம்பிக்கையானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளாரே என ஒரு கேள்வி கேட்கிறீர்கள் என வைத்து கொள்வோம், சகோதரர் வழியிலேயே வருவோம், ஆண் உறுப்பை தொட்டால் உளு முறியாது என்று கூறினீர்கள்., சகோதரர் மறுப்பு தெரிவிக்கும் அதே ஹதிஸை இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் இமாம் புகாரி(ரஹ்) அவர்களிடம் கேட்கும் பொழுது, அந்த ஹதிஸ் சரியானது என்று அறிவிப்பு செய்கிறார்கள், இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் சரியானது என அறிவிப்பு செய்த பிறகு சகோதரர் ஏன் ஆண் உறுப்பை தொட்டால் உளு முறியாது என என்னை நோக்கி விமார்சனம் செய்தீர்கள், இவர்களுக்கு வேணுகிற பொழுது இமாம் புகாரி(ரஹ்) எடுத்து கொள்ள வேண்டும், வேண்டாம் என்கிற போது விட்டு விட வேண்டும்,இது போல் சில ஹதிஸ்களை இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் வழியாக ளயீப் என்று அறிவிப்பு செய்துள்ளீர்கள்(நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் சரியான தொடரில் என பதித்து இருந்தும், நீங்கள் ஏன் பலகினமானது தள்ளுபடி செய்தீர்கள்).

//நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதியில் 136 வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் ஸலமா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மீது சில ஆட்சேபனைகள் உள்ளன.//

இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸலமா(ரஹ்) அவர்கள் நம்பகமானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள், இவரைப் பற்றி சில இமாம்கள் ஆட்சேபனைகள் உள்ளன மட்டும் பதித்துவிட்டு, இமாம் திர்மதி(ரஹ்) அவர்களின் ஹதிஸின் விளக்கத்தை மறைத்தது ஏன்?

(என்னை நோக்கி கேள்வி கேட்டது போல், நான் உங்களை தற்போது கேட்கிறேன்),

உங்கள் பதில் முன்பு

(நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதியில் 121 வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. எனினும் இந்த செய்தியை பதிவு செய்த திர்மிதி அவர்களே பலவீனம் என்று சொல்­யுள்ளாôகள்.

மேலும் நீங்கள் அந்த செய்தியின் கீழ் இடம் பெற்றிருக்கும் அறிஞர்களின் கருத்தை மொழிபெயர்த் நீங்கள் அதற்கும் கீழாக இடம் பெற்றிருக்கும் இமாம் திர்மிதியன் விமர்சனத்தை ஏன் மொழிபெயர்க்கவில்லை?

இப்படி மறைத்துதான் உங்கள் வாதத்தை நீங்கள் நிலைநாட்ட வேண்டுமா?)


தாங்கள் மிகவும் நல்லவர் போல் பதிலளிக்கிறீர்கள்(பசுத்தோல் போர்த்திய புலி). இமாம் திர்மதி(ரஹ்) இந்த ஹதிஸை, ஹசன் தரத்திலும் பதிக்கவில்லை,ஸஹிஹ்வான தரத்திலும் பதிக்கவில்லை, ஹசன் ஸஹிஹ் என்று இரண்டு தரத்திலும் சேர்த்தே பதித்துள்ளார்கள், இதனால் இந்த ஹதிஸிற்கு இன்னும் கூடுதல் வலு சேர்கிறது, அதனால் ஒரு ஹதிஸை பலவினப்படுத்த அந்த இமாம் இப்படி சொன்னார்கள், இந்த இமாம் இப்படி சொன்னார்கள் என்று சொல்லி ஒரு பலமான ஹதிஸை , பலகினமானது ஆக்கி விடாதீர்கள்,இது ஒன்றும் விளையாட்டு அல்ல, இது மார்க்கம்,உங்கள் கொள்கைக்கு ஒத்து வரவில்லை என்றால் ஹதிஸை பலகினமாக்க முற்படுவதா? எனக்கும் உங்களைப் போல் பல ஹதிஸ்கள் பதிக்க முடியும், அதையெல்லாம் பலகினமாக்க எனக்கு விருப்பமில்லை, ஏனென்றால் என்னை அல்லா கடுமையாக பிடிப்பான். ஒரு இமாம் பலமான அறிவித்த ஹதிஸை, மற்றொரு இமாம் பலகினமானதாக அமைந்த ஹதிஸ்களும் உள்ளன், அதே போல் ஒரு இமாம் பலகினாமாக அமைந்த ஹதிஸ்கள் மற்றொரு இமாம் பலமானதாக அமைந்த ஹதிஸ்களும் உள்ளன.ஹதிஸ் என்பது ஒவ்வொரு இமாமின் கருத்து கணிப்பு என்பதை அறிந்து கொள்ளுங்கள், அப்படி மறுப்பு தெரிவிப்பீர்கள் ஆனால், நெஞ்சில் கை கட்டுவதையும், விரல் அசைப்பதையும் முதலில் நிறுத்துங்கள், ஏனென்றால் பல இமாம்கள் அந்த ஹதிஸை பலகினமானது என்று அறிவித்துள்ளார்கள்,

//மேலும் இந்த செய்தி ஆயிஷா ர­ அவர்கள் அறிவிக்கும் நபி ஸல் அவர்கள் எல்லா நிலையிலும் இறைவனை நினைவு கூர்வார்கள் என்ற செய்திக்கும் குர்ஆனில் அவர்கள் இருந்த நிலையிலும் படித்த நிலையிலும் இறைவனை நினைவு கூர்வார்கள் என்ற செய்திக்கும் இது முரணாக இருக்கிறது. செய்தியை சொன்ன நீங்கள்தான் இந்த முரண்பாட்டை நீக்க வேண்டும்.//

ஹதிஸின் ஒரு பகுதியை மட்டும் படித்துவிட்டு மறுபகுதியை விட்டால் அப்படி தான் இருக்கும், இதற்கு ஹதிஸ்களின் அறிவு இல்லாத ஒரு காரணமாகும்,

நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாவை திக்ரு செய்பவர்களாக இருந்தார்கள் என ஆயிசா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்( இமாம் முஸ்லிம்(ரஹ்) 608).

சகோதரர், திக்ரு என்றால் குர் ஆன் ஓதுவது தான் சரியான அர்த்தம் என்பதை எங்கிருந்து ஆதாரம் எடுத்தீர்கள், திக்ரு என்றால் அல்லாவைப் பற்றி நினைவு கூர்வது என்று அர்த்தம், அல்லாவை நினைவு கூர்வது தொழுகையும் ஒரு பகுதியாகும், அந்த சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் அல்லாவை அதிகமாக நினைவு கூறுவார்கள், அதை தற்போது உதரணமாக எடுத்து கொள்வோம். சகோதரர் அவர்கள் அவர்கள் எல்லா நிலையிலையும் அல்லாவை நினைவு கொள்வதாக வைத்து கொள்வோம், சகோதரராகிய உங்களுக்கு திடீரென்று குளிப்பு கடமையாகி விட்டது, அந்த சமயத்தில், பள்ளியில் இகாமத் சொல்லப்படுகிறது, சகோதரர் அவர்கள் நபி(ஸல்) எல்லா நிலையிலையும் அல்லாவை திக்ரு செய்வார்கள் என்று ஆயிசா(ரலி) அவர்கள் அறிவித்த செய்தியை படித்து விட்டு , சகோதரர் அவர்கள், அந்த தொழுகை செல்லலமா?, செல்வீர்களா? . நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று ஒரு ஆதாரம் உங்களால் காட்ட முடியுமா?. அல்லாவை திக்ரு செய்வது குர் ஆன மட்டும் தான் என்று ஆதாரம் என்று எங்கு எடுத்தீர்கள்.

சிறு நீர் கழித்து கொண்டு இருக்கும் போது நபி(ஸல்) அவர்களுக்கு, முஜாஹிர் பின் குன்ஃபுது(ரலி) அவர்கள் ஸலாம் சொன்னார்கள், அதற்கு நபியவர்கள் மறுமொழி கூறவில்லை, பிறகு உளு செய்து விட்டு மறு மொழி கூறினார்கள்.

தூய்மையான நிலையில் தவிர (வேறு எந்த நிலைகளிலும்) அல்லாவை திக்ர் செய்வதை நான் வெறுக்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஹாஜிர் பின் குன்புத்(ரலி) அறிவிக்கிறார்கள்,

இமாம் அபுதாவுத்(ரஹ்)(16),இமாம் இப்னுமஜா(ரஹ்)(344),இமாம் நஸயி(ரஹ்) (38),இமாம் முஸ்னத் அஹ்மது(ரஹ்)(18259,19833), இமாம் தாரமீ(ரஹ்) (2527) இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்),இமாம் பைஹகி(ரஹ்),இமாம் ஹாகிம்(ரஹ்).

சிறு நீர் மலம் கழிக்கும் போது உளுவின்றி ஸலாம் கூறுவதும் அதற்கு பதிலளிப்பது கூடாது, அதே போன்றே தஸ்பிஹ் கூறுவதும் , தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் கூறுவதும், பாங்கிற்கு பதில் கூறுவதும், பொதுவாக துஆ, திக்ர் எதுவும் செய்யவும் கூடாது(அல் மின் ஹாஜ்)

ஏன் நபி(ஸல்) அவர்கள் ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை? அதற்கு

இமாம் ஸிந்தி(ரஹ்) அவர்களின் விளக்கம்:


ஸலாம் கூறுவதற்கு உளு தேவையில்லை என்றாலும், ஸலாம் என்பது அல்லாவின் பெயர்களும் ஒன்றாக இருப்பதால் தூய்மை அடைந்த நிலையில் பதில் சொன்னார்கள்.


ஸலாத்திற்கு பதில் கூறும் போது நபி(ஸல்) அவர்கள் தூய்மையை இந்த அளவு எதிர் பார்த்தார்கள் என்றால், அல்லாவை திக்ர் செய்யும் போது எந்த அளவுக்கு தூய்மை எதிர் பார்த்திருப்பார்கள் என்பதை சகோதரர் சுயமாக சிந்திக்க வேண்டும், சும்மா கப்சா விடக்கூடாது. தனக்கு எல்லாம் தெரிந்தவர் போல்..

நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாவை திக்ரு செய்பவர்களாக இருந்தார்கள் என ஆயிசா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்( இமாம் முஸ்லிம்(ரஹ்) 608,இமாம் அபுதாவுத்(ரஹ்)).

இதிலிருந்து நபி(ஸல்) எல்லா நிலையிலும் அல்லாவை நினைவு கூறுவார்கள்,ஆனால் அது தூய்மையான நிலையில் அல்லாவை நினைவு கூறுவார்கள் என்று மறு நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள் நேரடியாக தாங்களகவே அறிவிக்கிறார்கள், அதனால் நபி(ஸல்) அவர்கள் தூய்மையான நிலையில் அல்லாவை திக்ர் செய்திருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

ஹதிஸ்களை முழுமையாக படிக்கமால் அறைகுறையுமாக படித்துவிட்டு உளருவதும், ஹதிஸ்களை ஆராய்வதில் ஞானம் இல்லாமல் இருப்பது தான் இதற்கு காரணம், இனி மேலாவது முறையாக படித்துவிட்டு முறையாக பதிலளியுங்கள்.

//நீங்கள் குறிப்பிடம் செய்தி நஸயீ 261 ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின்அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அப்தில்லாஹ் பின் நுஜய்யி என்பவர் மீதும் அவருடைய தந்தை மீதும் இமாம்கள் விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த செய்தியை வைத்து ஆதாரம் எடுக்க முடியாது. மேலும் இதை மையமாக வைத்து எழுப்பப்படும் வாதங்களும் நிற்காது//

கருத்துகள் பதிக்கும் போது அப்படியே ஒரு சுவர் கட்டி நிறுத்துவிட்டேன்.வாதங்கள் எதுவும் நிற்காது ,இங்கும் சகோதரர் உண்மை மறைத்திருக்கிறார்கள், தன்னுடைய கொள்கை கூட்டம் மானத்தை காக்க பித்தலாட்டத்தை கையாண்டு உள்ளார். பதித்திருக்கும் ஹதிஸ் சில இமாம்கள் இவரைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார்காள், அதை நான் மறுக்கவில்லை, நான் ஏற்கனவே இது போன்ற கருத்துக்கு முன்பு பதிலளித்து உள்ளேன், ஒரு இமாம் பலகினமானத்தில் அமைந்த ஹதிஸை மற்றொரு இமாம் பலமான தரத்தில் பதித்திருப்பார்கள், அதே போல் ஒரு இமாம் பலமான தரத்தில் அமைந்த ஹதிஸ் மற்றொரு இமாம் பலகினமான தரத்தில் பதித்திருப்பார்கள், அது அவர்களின் ஹதிஸ்கலை ஆராய்வு.

அப்துல்லா பின் நுஜய்யி(ரஹ்) அவர்களைப் பற்றி பார்ப்போம்.

இந்த ஹதிஸை பதிவு செய்த இமாம் நஸயி(ரஹ்) அவர்களே இவரை பலமானவர் , நம்பகமானவர் பட்டியலில் இணைத்து உள்ளார்கள்.

அதே போல் இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) நம்பகமானவர் பட்டியலில் இணைத்து உள்ளார்கள்.



1.யமன் தேசவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள்,அக்கடித்தில் சுத்தமில்லாதவரை தவிர,(மற்றெவரும்), குரானை தொடமாட்டார்கள்.(தொடக்கூடாது) என்று இருந்தது அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.

ஹதிஸ் நூல்கள்:

1.முஃஜமுஸ்ஸகீர்(ரஹ்) பக்கம் 239

2.தப்ரானி(ரஹ்) அவர்கள் அல்கபரில் பாகம் 3-ல் 194/2

3.பைஹகீ(ரஹ்) 1/88

4.இப்னு அஸாகிர்(ரஹ்) 13ம் பாகம் 214/2

அப்துல்லா பின் உமர்(ரலி)வழியாக வரும் ஹதிஸ்களில் சயிது பின் முகம்மதுவழியில் இதே வாசகம் கொண்டு நபி(ஸல்) அவர்கள் வரை அறிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த ஹதிஸ் ஸாலிமிடம்(ரலி) செவியுற்றதாக அவர் தனது தந்தை கூறியதாகஇடம் பெற்றுள்ளது.இந்த ஹதிஸ் இமாம் அஹ்மது அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார்கள் என இமாம் அஸ்ரம்(ரஹ்) கூறுகிறார்கள்.



2. நபி(ஸல்) அவர்கள் எமன் நாட்டிற்கு என்னை அனுப்பிய போது நீர்சுத்தமானவராக அன்றி, குரானை தொட வேண்டாம் எனக் கூறினார்கள் எனமதருல்வுர்ராக் ஹஸ்ஸான் பின் பிலால்(ரலி) அறிவிக்கிறார்கள்.(ஹாகிம்(ரஹ்))இமாம் ஹாகிம்(ரஹ்) அவர்கள் இந்த ஹதிஸ் சரியான தொடர் எனக் கூற, இமாம் தஹபி(ரஹ்) அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார்கள்,

மேல் உள்ள ஹதிஸ் நான் ஏற்கனவே சரியான தொடரில் பதித்துவிட்டேன், அதனால் உங்கள் அறிவுக்கு இவை ஒத்து வரவில்லை என்பதால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது, ஒர் ஹதிஸை தனக்கு தகுந்தோற் போல் மாற்றும் உங்கள் கொள்கைக்கு இது ஒன்று புதியதல்ல?. நான் ஆதாரபூர்வமாக பதித்து விட்டேன், எனக்கு நான் பதித்த ஆதாரம் போதுமானதாகும். இதுவும் ஆதரபூர்வாமான ஹதிஸ் தான், நீங்கள் சொல்லும் இமாம்களின் கருத்து கணிப்பு எடுக்க வேண்டும் என்று எந்த ஒரு நபி(ஸல்) மொழி ஆதாரம் எதுவும் கிடையாது, ஆதாரபூர்வமான ஹதிஸ் யார் சொன்னாலும் ஏற்று கொள்ளலாம், நானும் ஆதாரபூர்வம்மாகத் தான் பதிவு செய்துள்ளேன், இட்டுகட்டப்பட்டதை ஒன்று நான் பதிவு செய்யவில்லை.

//பதில்

நீங்கள் குறிப்பிடும் செய்தி தாரகுத்னீ 435, பைஹகீ 417 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தி ஆதாரப்பூர்வமானதா என்பதை இதைப் பதிவு செய்த இமாம் தாரகுத்னீ அவர்களே அச்செய்தியின் கீழ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

(இதில் இடம்பெறும்) அல் காஸிம் பின் உஸ்மான் என்பவர் பலம் வாய்ந்தவர் இல்லை.

மேலும் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இடம்பெறவில்லை. உமர் (ரரி) அவர்களின் சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இந்த செய்தியை மையாமாக வைத்து எடுத்து வைத்த மற்ற உங்களுடைய வாதங்களும் வீழ்ந்துவிடுகின்றன.//


இமாம் இப்னு ஜவ்ஸி அவர்கள் நேரடியாக அல் காசிம் பின் உஸ்மான்(ரஹ்) அவர்களை நேரடியாக பார்த்து அவர்( அல் காசிம் பின் உஸ்மான்(ரஹ்) )நம்பகமானவர் என ஸிவாத்துல் அல் ஸவா அறிவிப்பு செய்வதினால் இவருடைய ஹதிஸ்கள் ஏற்க தக்கதாகும்.

சகோதரர் அவருக்கு ஒரு வேண்டு கோள்,

நானும் நம்பகமானவர் பட்டியலில் உள்ளவர்கள் தான் பதித்துள்ளேன், இதற்கும் மேலும் விவாதம் பண்ணினால் அது விவாதம் அல்ல, அது விதாண்டவாதம் என்பது சந்தேகமில்லை,