ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சுபஹ் தொழுகையில் குனூத் ஓதலாமா? ஒதக் கூடாதா?

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்,

தமிழ்நாடு இஸ்லாமியர்களிடத்தில் இரட்டை வேடம் போடும் இணையதளங்கள்:

சுபஹ் குனூத் ஆய்வு என்ற நீண்ட கட்டுரையை தொகுத்து, அதில் சுபஹ்விறகு குனூத் வைக்கும் ஆதாரம் பலகினமானது பலகினமானது என்று மிகவும் தந்திரமாக மக்களை நம்ப வைத்து கொண்டு இருக்கிறது, நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்து ஒரு இணையதளத்திற்கு ஒரு ஆதரபூர்வமான ஹதிஸை பதித்தேன், ஆனால் அதை அவர்கள் மறைத்து விட்டார்கள், அதற்கும் நான் பதிலும் கூறினேன், இங்கு நீங்கள் மறைத்து விடலாம், ஆனால் மறுமையில் அல்லாஹ்விடம் மாட்டி கொள்வீர்கள் என்று கூறினேன், அல்லாஹ்வின் பயம் கொஞ்சம் கூட இல்லாமல் ஹதிஸை மறைக்கிறார்கள். நாங்களும் ஹதிஸை கூறுகின்றோம் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்,

நாங்கள் சகபாக்களை பின்பற்றுகிறோம் என்று மக்களை நம்ப வைத்து இறுதியில் சகபாக்களை பின்பற்றாமல் உள்ளார்கள், சகபாக்களை பின்பற்ற வேண்டும் என்று பல முறை பல மேடையில் கூறிய இவர்கள் ஏன் சகபாக்களை மறுக்கிறார்கள்.

சரி விசயத்திறகு வருவோம்.

மறுப்பவர்கள் வைக்கும் விமர்சனங்கள்:

//இவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹப் அறிஞரான இமாம் நவவி (ரஹ்) என்பவர் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் கிரந்தத்திற்கு பாட, மற்றும் அத்தியாயத் தலைப்பிட்டவர்கள், என்பதை இன்றும் இவர்கள் அறியாதிருக்கலாம்.
இந்த ஹதீஸ் இடம் பெறும் இடத்தில் (باب استحباب القنوت إذا نزل بالمسلمين نازلة) ‘முஸ்லிம்களுக்கு சோதனை ஏற்பட்டால் குனூத் ஓதுதல் சுன்னத் என்ற பாடம்’ என இதற்கு தலைப்பிட்டுள்ளார்கள்.
ஆகவே இது இந்தச் செய்தியானது ‘சுபஹ்’ குனூத்தைக் குறிக்கும் என வாதிடுவது இமாம்களின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறிக்கொள்வோருக்கு அழகில்லை. மாத்திரமின்றி இது ஹதீஸில் திரிபு செய்வோரின் செயலாகவும் கருதப்படும்.//

நமது  பதில்:

இங்கு இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களுக்கும், இமாம் நவவி(ரஹ்) அவர்களுக்கும் மார்க்கம் தெரியவில்லை என்பது போல் பதில் கொடுத்துள்ளார்கள், இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும், இமாம் நவவி(ரஹ்) அவர்களும் மேல் உள்ள தலைப்பான ''‘முஸ்லிம்களுக்கு சோதனை ஏற்பட்டால் குனூத் ஓதுதல் சுன்னத் என்ற பாடம்’ என்ற தலைப்பை பதிவு செய்து நபி(ஸல்) அவர்கள் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதின ஹதிஸை பதிவு செய்துள்ளார்கள் என்பதை  இணையதளம் அவர்கள் யாருக்கும் தெரியவில்லையா? இல்லை தெரிந்து கொண்டே இரட்டை வேடம் போடுகிறீர்களா?, மத்ஹப் வேண்டாம் என்று நீங்களே ஒரு மத்ஹப் உருவாக்கி கொண்டு இருப்பதை நன்றாக உணர முடிகிறது. அதே சமயத்தில் உங்கள் மத்ஹப் வெறியையும் நன்கு உணர முடிகிறது. உங்கள் மத்ஹபை பின்பற்றுவதற்காக மற்ற இமாம்களை மட்டமாக நினைப்பது சரியல்ல.

மேலும் ஒரு உதாரணம்:

தொழுகையில் எவ்வாறு கையை வைப்பது பற்றி பாடம்:

இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் தொழுகையில் தொப்புளுக்கு மேல் நெஞ்க்கு கீழ் மற்றும் தொப்புளுக்கு கீழ் கைகளை வைக்க வேண்டும் என்கிறார்கள்

இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் தொழுகையில் இரு கைகளையும் தொப்புளுக்கு மேல் வைக்கவேண்டுமென் சிலரும், தொப்புளுக்கு கீழ் வைக்க வேண்டும் என்கிறார்கள்.

விரிவாக..

தொழுகையில் தொப்புளுக்கு மேல் நெஞ்க்கு கீழ் மற்றும் தொப்புளுக்கு கீழ் கைகளை வைப்பது:

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு தொழுகை நடத்தும் போது தமது வலது கரத்தால் இடது கரத்தை பிடித்து கொள்வார்கள் என ஹுல்பு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்( திர்மதி(ரஹ்) 234, இப்னுமஜா(ரஹ்))
ஹுல்பு(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதிஸ் ஹசன் தரத்தலமைந்ததாகும். நபித்தோழர்கள், தாபியீன்கள் அதற்கும் அடுத்த தலைமுறை அறிஞர்கள் இவ்வாறே செயல்பட்டுள்ளனர், (ஆயினும்) இரு கைகளையும் தொப்புளுக்கு மேல் வைக்கவேண்டுமென் சிலரும், தொப்புளுக்கு கீழ் வைக்க வேண்டும் என்று சிலரும் கருதுகின்றனர்.(சிறந்தது) எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன, இரு முறையுமே அவர்களிடம் ஆதாரபூர்வமானவைத்தான்.


இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களின் விளக்கம்:

தொழுகையின் ஆரம்பத்தில் தக்பீரத்துல் இஹ்ராம் கூறிய பின் நெஞ்க்குக் கீழ்
தொப்புளுக்கு மேல் உள்ள பகுதியில் இடக் கையின் மீது வலக் கையை வைப்பதும், சஜ்தாவில் தோள்களுக்கு நேராக நிலத்தில் இரு கைகளையும்  வைப்பதும் சுன்னதாகும் (விரும்பத்தக்கதாகும்).(இமாம் முஸ்லிம்(ரஹ்)

இதில் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும், இமாம் திர்மதி(ரஹ்) அவர்களும் ஹதிஸ்கள் தெரியவில்லை,மார்க்கம் தெரியவில்லை அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்று உங்களால் கூற முடியுமா? ஏனென்றால் நீங்கள் தொழுகையில் நெஞ்சின் மீது கையை கட்ட வேண்டும் என்று கூறுகிறீர்கள், உங்களுக்கு மாற்றமாக இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும், இமாம் திர்மதி(ரஹ்) அவர்களும் இருக்கின்றார்கள் என்பதற்காக அவர்களின் ஹதிஸை நிராகரித்து விடுவீர்களா?.

அதே போல் தான் நீங்கள் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதவில்லை என்பதற்காக இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் பதித்துள்ள ஹதிஸ்களை செயல்படுத்தும் இன்றைய மார்க்க அறிஞர்கள், தவறு என்று எப்படி கூற முடியும், இந்தியாவில் 1400 ஆண்டுகளாக மார்க்க அறிஞர்களே இல்லையா? இந்தியாவில் உள்ள மார்க்க அறிஞர்கள் சொன்னால் ஏற்க கூடாது, வெளி நாட்டில் உள்ள மார்க்க அறிஞர் சொன்னால் மட்டும் தான் ஏற்க வேண்டும் என்று எதாவது ஹதிஸ் உள்ளதா?இந்தியாவில் சகபாக்கள்(ரலி) அவர்கள் இல்லாமல், தாபின்கள்(ரஹ்), தபதாபின்கள்(ரஹ்) இல்லாமல் தான் இஸ்லாம் வந்ததா? பதில் தரவேண்டும்.

மறுப்பவர்கள் வைக்கும் விமர்சனங்கள்:

//இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ‘அத்தஹ்கீக்’ ‘அல்இலலுல் முதனாஹியா’ ஆகிய நூல்களில் இந்தச் செய்தி பலவீனமானது எனக் குறிப்பிட்டுள்ளதுடன், هذا حديث لا يصح ‘இது ஆதாரமற்ற செய்தியாகும்’, இப்னுஹிப்பான் அவர்கள் பிரபல்யமானவர்களைப் பயன்படுத்தி மறுத்துரைக்கப்பட வேண்டிய தகவல்களை அறிவிப்பவர் என்றும் விமர்சித்துள்ளனர்.இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள் ‘நதாயிஜுல் அஃப்கார்’, மற்றும் ‘தல்ஹீஸுல் ஹபீர’; ஆகிய நூல்களில் அபூஜஃபர் அர்ராஸியின் விபரம் பற்றிய பல விபரங்களை தந்துள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்//

நமது  பதில்:

மேற்கண்ட இமாம்கள் ஆய்வு செய்து கூறுவதால்  இணையதளங்கள்  சுபஹ் தொழுகையில் குனூத் ஒதக் கூடாது என்று இறுதியாக நிலைப்பாட்டை கூறியுள்ளார்கள்,

இவர்கள் மேற்கண்ட இமாம்கள் கூறுவதால் சுபஹ் தொழுகையில் குனூத், ஓதக் கூடாது என்ற கூறும் இவர்கள் அந்த இமாம்களின் ஆய்வுகளின் கருத்துகளையாவது ஏற்பார்களா? இல்லை இரட்டை வேடம் போடப் போகிறார்களா?

இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்), இமாம் இப்னு ஜவ்ஸி(ரஹ்), இமாம்  இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) போன்ற நல்லடியார்கள் சுன்னத் ஜமாத்தினர் அமல் செய்யும் எண்ணற்ற ஹதிஸ்களை ஆதாரபூர்வமானது என்று கூறியுள்ளார்கள், அந்த ஹதிஸ்களை தொகுத்தால் ஒரு நூலை வெளியிடலாம். சில ஹதிஸ்களை உதாரணமாக எடுத்து கொள்வோம்.

அவை:

இமாம் இப்னு ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் பதித்துள்ள சில ஹதிஸ்கள்:

1) தொழுகையில் தொப்புளுக்கு கீழ் கையை வைப்பதே நபி(ஸல்) அவர்களின் சுன்னதாகும்:

நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் தொப்புளுக்கு கீழ் கையை வைத்தார்கள் என்று இப்னு ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்து உள்ளார்கள், மேலும் தொழுகையில் நெஞ்சில் கையை வைக்க வேண்டும் என்ற அனைத்து ஹதிஸ்களின் அறிவிப்பாளர்களும் விமர்ச்சனம் செய்யப்பட்டுள்ளார்கள் அதை ஏற்க கூடாது என்பது போல் கூறியுள்ளார்கள்.

2) தொழுகையில் தரையில் கை வைப்பதற்கு முன் தனது முட்டுகால்களை தரையில்  வைப்பதே நபி(ஸல்) அவர்களின் சுன்னதாகும்:

நான் நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்துள்ளேன், நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறி, கட்டைவிரலை காது அருகில் உயர்த்துவார்கள்,(அதன் பிறகு) நபி(ஸல்) அவர்களின் முதுகு சமமாக ஆகும் வரை ருகூ செய்வார்கள், அதன் பிறகு தக்பீர் கூறி ஸஜ்தா செய்வார்கள், (அப்பொழுது ) நபி(ஸல்) (தரையில்) கை வைப்பதற்கு முன் தனது முட்டுகால்களை தரையில் வைப்பார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இமாம் தஹபி(ரஹ்) அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார்கள், 

இமாம் இப்னு அல் ஜவ்ஸி(ரஹ்) 1/287 அவர்களும் இத்தொடர் ஆதரபூர்வமானதில் அறிவிக்கிறார்கள்


3) மீலாது விழா கொண்டாடலாம்:

அபூலஹப் மரணித்த பின் அவரை கனவில் காணப்பட்டது. அவரிடத்தில் உங்களின் நிலை என்ன என்று கேட்கப்பட்டது. நான் நரகத்தில் இருக்கின்றேன், நபி(ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை எனக்கு துவைபா அம்மையார் அவர்கள் நற்செய்தி கூறியதாலும் நபி(ஸல்) அவர்களுக்கு அப்பெண்மணி பாலூட்டியதாலும் அப்பெண்ணை நான் உரிமையிட்டிருந்தேன். அதனால் ஒவ்வொரு திங்கட் கிழமையும் என் விரல்களுக்கு மத்தியிலிருந்து விரல் நுனியளவு கொட்டும் நீரை நான் உறிஞ்சி குடிக்கின்றேன் என்றார். காஃபிரான, இறைவனால் சபிக்கப்பட்ட ஒருவர் நபி(ஸல்) அவர்கள் பிறந்ததை பற்றி சந்தோஷம் அடைந்ததால் அவருக்கு இந்த சலுகை கொடுக்கப்பட்டதென்றால், உண்மையான ஒரு முஸ்லிம், நபி(ஸல்) அவர்கள் மீது மீலாது விழா கொண்டாடுவதால் அவருக்கு சுவர்க்கம் கிடைப்பது நிச்சயம்(இப்னு ஸஃது(ரஹ்), அப்துல்லாஹ் இப்னு முஹம்மதிப்னி வஹ்ஹாப்(ரஹ்),இப்னுல் ஜவ்ஸி(ரஹ்))

மேலும் அல்லாமா இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். '' குர்ஆன்(அபூலஹபுடைய இரண்டு கைகளும் நாசமாட்டும் மேலும் அவனும் நாசமாகட்டும் (குர்ஆன் 111:2)) யாரைப் பழித்து ஒரு வசனத்தில் கூறுகிறதோ அவனுக்கு மவ்லித்துன்னபி ஸல்லல்லாஹு கொண்டாடியதால்(முன்னர் கண்டபடி) கூலி கொடுக்கப்பட்டானென்றால், ஏகத்துவத்தை நிலைநாட்டி வரும் ரஸுலில்லாஹி(ஸல்) அவர்களின் உம்மத்திலுள்ள முஸ்லிம், மீலாது ''நபி(ஸல்)'' அவர்கள் பிறந்த தினத்தில் மக௯ழ்ச்சியை வெளியிடுவதினால் அவரின் நிலை எவ்வாறு இருக்கும்,உண்மையில் அதைவிட பல்லாயிரம் மடங்கு நற்கூலி அளிக்கப்படுவர் என்பது திண்ணம்.(முத்தஸருஸ்ஸீரத், பக்கம் 113).

இப்னு ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் மீலாது விழா கொண்டாடலாம் எனக் கூறுகிறார்கள், ஏன் நீங்கள் மீலாது விழா கொண்டாடுபவர்கள் ஏசுகிறீர்கள்.

இப்னு ஜவ்ஸி(ரஹ்), அவர்களின் ஹதிஸ்கலை கூற்றை ஏற்கமாட்டோம் எனக் கூறினால், தனது இணைய தளத்தில் இப்னு ஜவ்ஸி(ரஹ்), வழியாக பதித்துள்ள அனைத்து ஹதிஸ்களையும் வாபஸ் பெற வேண்டும். அப்படி வாபஸ் பெறுகிறவன் தான் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறான் என்று அர்த்தம். அப்படி இல்லை என்றால் ரோசம் இல்லை என்று தான் அர்த்தம். இவர்கள் வேணுகிற போது இப்னு ஜவ்ஸி(ரஹ்), கூற்றை எடுத்து கொள்வார்கள், வேணாம் என்கிற போது எடுத்து கொள்ள மாட்டோம் என்று கூறுபவர்கள் நிச்சியமாக குழப்பத்தை பூமியில் உண்டாக்குகிறார்கள் என்பது சந்தேகமில்லை. 

இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்கள் பதித்துள்ள சுன்னத் ஜமாத் செய்யும் அமல்களின் சில ஹதிஸ்:

1) நோன்பு திறக்கும் துஆ:

அல்லாஹும்ம லக்க சம்த்து...  எனற நோன்பு திறக்கும் போது ஆதாரபூர்வமானது என இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்

2) நல்லடியார்களின் பொருட்டால் வஸிலா கேட்பது:

நல்லடியார்களின் பொருட்டால் வஸிலா கேட்கப்படும் ஹதிஸை இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்)அவர்கள் ஆதாரபூர்வமானது என கூறியுள்ளார்கள்

3) பரா அத் இரவு:

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கும் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக்கும் மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
இதை இமாம் தப்ரானி(ரஹ்) அவர்கள் ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள், 

மேலும் இதை இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்களும் உறுதி செய்துள்ளார்கள் இதில் இடம் பெரும் அறிவிப்பாளார்கள் நம்பகமானவர்கள் என்று கூறுகிறார்கள். இதை ஸஹிஹ்வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்,

மேலும் இமாம் இப்னு ஹஜர் ஹைதமி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் தனது கித்தாபில் இந்த ஹதிஸை பதிவு செய்து விட்டு இதில் இடம் பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் ஆவார்கள், சிலர் விமர்ச்சனம் செய்து உள்ளார்கள், அது தவறு.  எனவே இது ஹசன் தரத்தில் கூட கூற முடியாது இது ஸஹிஹ் வான ஹதிஸ் ஆகும்.

மேலும் இமாம் முந்தரி(ரஹ்) அவர்கள் வழியாக தஹ்ரிப் தஹ்ரிப் லும், இமாம் சூயூத்தி(ரஹ்) அவர்களும் இதில் இடம் பெறும் அறிவிப்பாளார்கள் மிகவும் நம்பகமானவர்கள் ஆவார்கள் என கூறியுள்ளார்கள்.

இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் பதித்துள்ள சுன்னத் ஜமாத் செய்யும் அமல்களின் சில ஹதிஸ்:

1) கூட்டு துஆ

கூட்டு துஆ வாக இடம் பெறும்  ஹதிஸை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ஆதராபூர்வமானது என்கிறார்கள்,

2) தராவிஹ் 20

நபி(ஸல்)  அவர்கள் ரமலானின் மூன்று நாட்கள் தொழவைத்த நிகழ்வை எத்தனை ரக்கத்து என  புஹாரி விரிவுரை கூறும் போது இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் நபி(ஸல்) அவர்கள் 20 ரக்கத்து மூன்று நாட்கள் தொழ வைத்தார்கள் எனக் கூறியுள்ளார்கள்.

3) இமாம் அபுஹனிபா(ரஹ்)

இமாம் அபுஹனிபா(ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அனைத்து ஹதிஸ் அனைத்தும் சரியானதாகும்

மேல் உள்ள எந்த ஹதிஸையும் ஏற்க மாட்டார்கள் அந்த இமாம்கள் ஆய்வு செய்து சரி என்று சொன்னாலும் ஏற்க மாட்டார்கள், இரட்டை வேடம் போடுபவர்களிடம் ஆயிரம் தான் கூறினாலும் ஏற்க மாட்டார்கள், அவர்களின் இதயத்தில் அல்லாஹ் முத்திரைப் பதித்துவிட்டான் என்பது தான் உண்மை

மறுப்பவர்கள் வைக்கும் விமர்சனங்கள்:


அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) பலவினமானவர்


நமது  பதில்:

அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) பலவினமானவரா?

இல்லை.

இவர்கள் உண்மையாளர்கள் இருந்தால் இரண்டு கருத்துகளும் பதித்திருக்க வேண்டும், சிலர்  அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) அவர்கள் விமர்ச்சித்தும் உள்ளார்கள்,அதை நான் மறுக்கவில்லை, ஆனால் சிலர் இவரை மிகவும் நம்பகமான பட்டியலில் இணைத்து உள்ளார்கள், இவர் பொய் பேசுபவராக இல்லை, நேர்மையானவர்கள் எனக் கூறிய இமாம்கள் நம்பகமான பட்டியலில் இணைத்துள்ள இமாம்களை மறுத்தது ஏன்? தனது மத்ஹப்பிற்கு ஒத்து வரவில்லை என்பதற்காக  ஹதிஸை விட்டுவிடுவதா? யார் மத்ஹப் வெறி பிடித்து அலைக்கிறார்கள், அப்படி பார்த்தால் அது போல் என்னால் பல ஹதிஸை பதிக்க முடியும், உதரணமாக நெஞ்சில் கை கட்டுவது சம்பந்தமாக வரும் அறிவிப்பாளர் பலவினாமானவர்கள் என எத்தனை இமாம்கள் விமர்ச்சனம் செய்து உள்ளார்கள், அது பலகினமானது எனத் தெரிந்தும் ஏன் பின்பற்றீர்கள்? நீங்கள் ஒரு கேள்வி அதே போல் தொழுகையில் தொப்பிள் கீழே மற்றும் தொப்பிள் மேல்(நெஞ்சிற்கு கீழ்) இடம் பெறும் அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் சிலர் விமர்ச்சித்தாலும் மற்ற சிலர் நம்பிக்கையானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

இமாம் திர்மதி(ரஹ்)(ரஹ்) அவர்கள்  அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் வழியாக இடம் பெறும் ஹதிஸை ஹசன் தரத்தில் இவரது ஹதிஸ்களை பதிவு செய்துள்ளார்கள், அதாவது இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்கள், அதனால் இது ஹசன் தரத்தில் அமைந்துள்ளதால் இதுவும் ஆதரபூர்வமானதாகும்.

இமாம் ஹாகிம்(ரஹ்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர்  மிகவும் பலமானவர், மேலும் அவர் அறிவிக்கும் அனைத்து ஹதிஸ்களை ஸஹிஹ்வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

மேலும் பல ஆதாரபூர்வமான ஹதிஸ்:

தொழுகையில் தொப்புளுக்கு மேல் நெஞ்க்கு கீழ் மற்றும் தொப்புளுக்கு கீழ் கைகளை வைப்பது:

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு தொழுகை நடத்தும் போது தமது வலது கரத்தால் இடது கரத்தை பிடித்து கொள்வார்கள் என ஹுல்பு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்( திர்மதி(ரஹ்) 234, இப்னுமஜா(ரஹ்))
ஹுல்பு(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதிஸ் ஹசன் தரத்தலமைந்ததாகும். நபித்தோழர்கள், தாபியீன்கள் அதற்கும் அடுத்த தலைமுறை அறிஞர்கள் இவ்வாறே செயல்பட்டுள்ளனர், (ஆயினும்) இரு கைகளையும் தொப்புளுக்கு மேல் வைக்கவேண்டுமென் சிலரும், தொப்புளுக்கு கீழ் வைக்க வேண்டும் என்று சிலரும் கருதுகின்றனர்.(சிறந்தது) எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன, இரு முறையுமே அவர்களிடம் ஆதாரபூர்வமானவைத்தான்.


இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களின் விளக்கம்:

தொழுகையின் ஆரம்பத்தில் தக்பீரத்துல் இஹ்ராம் கூறிய பின் நெஞ்க்குக் கீழ்
தொப்புளுக்கு மேல் உள்ள பகுதியில் இடக் கையின் மீது வலக் கையை வைப்பதும், சஜ்தாவில் தோள்களுக்கு நேராக நிலத்தில் இரு கைகளையும்  வைப்பதும் சுன்னதாகும் (விரும்பத்தக்கதாகும்).(இமாம் முஸ்லிம்(ரஹ்)


தொழுகையில் (இடது) முன் கையின் மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்கு கீழ் வைப்பது நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாகும் என அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(அபூதாவுத்(ரஹ்) 645, பைஹகி(ரஹ்) 2170, 2171)

நபி(ஸல்) அவர்கள் தமது வலதை கையை இடது கையின் மீது அதை தொப்புளுக்கு கீழே வைத்ததை நான் பார்த்தேன் என வாயில் பின் ஹுஜ்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இப்னு அபிஷைபா(ரஹ்) 343,இமாம் ஹாசிம் சிந்தி(ரஹ்)பக்கம் 64 ,இமாம் நிமாவி(ரஹ்)330 )
இந்த ஹதிஸில் தொடரில் அனைவரும் நம்பகமானவரே என இப்னு அபிஷைபா(ரஹ்),இமாம் ஹாசிம் சிந்தி(ரஹ்),இமாம் நிமாவி(ரஹ்) அவர்கள் அனைவரும் ஸஹிஹ் வான தரத்தில் அமைத்துள்ளார்கள், எனவே இந்த ஹதிஸ் ஸஹிஹ் தரத்தில் அமைந்துள்ளதால் இந்த ஹதிஸ் ஆதரபூர்வமானதாகும்.

ஹஜ்ஜாஜ் இப்னு அல் ஹசன்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் அபுமிஜ்லஸ்(ரஹ்)(தாபியி) அவர்களிடம் கேட்டேன் தொழுகையில் எப்படி கையை கட்ட வேண்டும், அதற்கு அவர்கள் இடது கையின் மீது வலது கையை வைத்து தொப்புளுக்கு கீழ் கையை கட்ட வேண்டும் என அறிவித்தார்கள்

இப்ராஹிம் நகயீ(ரஹ்)(தாபியி) அவர்கள் தொழுகையில் இடது கையின் மீது வலது கையை வைத்து தொப்புளுக்கு கீழ் கையை கட்டினார்கள்(இப்னு அபிஷைபா(ரஹ்) 390,இப்னுத் துர்குமனி(ரஹ்) 47 )
இந்த ஹதிஸ் இப்னு அபிஷைபா(ரஹ்) அவர்கள் ஹசன் தரத்தலமைந்ததாகும்,அதனால் இது ஹசன் தரத்தில் அமைந்துள்ளதால் இதுவும் ஆதரபூர்வமானதாகும்.
இப்னுத் துர்குமனி(ரஹ்) அவர்கள் இதனுடைய தொடர் மிகவும் அழகானதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள், இதை ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்
இமாம் நிமாவி(ரஹ்) அவர்களும் முஹத்தித் யூசுன் பின் நூரி(ரஹ்) அவர்களும் இதை ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்

தொழுகையில் ஒரு முன்கையை மற்றொரு முன்கையின் மீது வைத்து தொப்புளுக்கு கீழ் கட்ட வேண்டும் என அபுஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தாக அபுவாயில்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(அபூதாவுத்(ரஹ்) 647,அல்ஜவரல் நகீ(ரஹ்) 31)
இந்த ஹதிஸ் பலகினமானது என்று அபூதாவுத்(ரஹ்) தெரிவிக்கின்றார்கள்,
இருந்த போதிலும் இமாம் அல்ஜவரல் நகீ (ரஹ்) அவர்கள் ஸஹிஹ்வான தரத்தில் இந்த ஹதிஸ் பதிவு செய்துள்ளார்கள், அதாவது இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்கள், அதனால் இது ஸஹிஹ்வான தரத்தில் அமைந்துள்ளதால் இதுவும் ஆதரபூர்வமானதாகும்.

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் மூன்று காரியங்கள் நுபுவத்தின் தன்மைகளாக உள்ளன. நோன்பு திறப்பதை விரைவுபடுத்துதல், ஸஹர் செய்வதை தாமதப்படுத்துதல், தொழும்போது இடது கையின் மீது வலது கையை வைத்து தொப்புளுக்கு கீழ் கையை கட்டுவதாகும்(இப்னு ஹிப்பான்(ரஹ்),அல்ஜவரல் நகீ(ரஹ்),
இப்னு ஹிப்பான்(ரஹ்) மற்றும் அல்ஜவரல் நகீ(ரஹ்)அவர்களும் இதை ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள். எனவே இது ஸஹிஹ்வான தரத்தில் அமைந்துள்ளதால் இதுவும் ஆதரபூர்வமானதாகும்.

நானும் உங்களைப் போல் இமாம்கள் ஆதரபூர்வமான சொன்னதைத்தான் பதித்துள்ளேன், மேலும் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும் இமாம் திர்மதி(ரஹ்) மற்றும் பல இமாம்களும் சொன்ன ஆதாரபூர்வமான கருத்துகள் தான் செயல்படுத்துகிறோம், மறுப்பு தெரிவிப்புர்களனால் இமாம் முஸ்லிம்(ரஹ்), இமாம் திர்மதி மற்றும் நான் பதித்த இமாம்களைப் பார்த்து அவர்களுக்கு ஹதிஸ்கள் தெரியவில்லை, அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்று பத்வா கொடுக்க போகிறீர்களா?, 

மேலும் இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் தெளிவாக கூறுகிறார்கள்:

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு தொழுகை நடத்தும் போது தமது வலது கரத்தால் இடது கரத்தை பிடித்து கொள்வார்கள் என ஹுல்பு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்( திர்மதி(ரஹ்) 234, இப்னுமஜா(ரஹ்))
ஹுல்பு(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதிஸ் ஹசன் தரத்தலமைந்ததாகும். நபித்தோழர்கள்(ரலி), தாபியீன்கள்(ரஹ்) அதற்கும் அடுத்த தலைமுறை அறிஞர்கள் இவ்வாறே செயல்பட்டுள்ளனர், (ஆயினும்) இரு கைகளையும் தொப்புளுக்கு மேல் வைக்கவேண்டுமென் சிலரும், தொப்புளுக்கு கீழ் வைக்க வேண்டும் என்று சிலரும் கருதுகின்றனர்.(சிறந்தது) எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன, இரு முறையுமே அவர்களிடம் ஆதாரபூர்வமானவைத்தான்.

இதில் இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் நபித்தோழர்கள்(ரலி), தாபீன்கள்(ரஹ்), அதற்கும் தலைமுறை அறிஞர்கள் என அவர்களின் காலம் வரை உள்ள ஒட்டு மொத்த அனைவரையும் சேர்த்து கூறுகிறார்கள் என்றால் இதைவிட ஒரு பெரிய ஆதாரம் வேண்டுமா என்ன? இந்த ஒரு வார்த்தையை வைத்து ஒற்றுமை ஏற்படுத்துவது ஒரு முஸ்லிமாக இருக்க முடியும், இல்லை அவன் முனாபிக் தான்.

தமிழ் நாட்டில் மாற்றம் வேண்டும் என்பதற்காக தந்தைக்கும் பிள்ளைக்கும், கணவன் மற்றும் மனைவிக்கும், உறவினர்களுக்கும் எனக்கும், எனக்கு என் நண்பர்களுக்கும், எனக்கு அண்டை வீட்டுக்காரர்களுக்கும் சண்டை ஏற்படுத்தி பசுத்தோல் போர்த்திய புலிப் போல் வேட்டையாடி கொண்டு இருக்கின்றீர்கள்.

அதே போல் அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) இமாம்கள் கூறியுள்ளதையும் விளக்கி இருக்க வேண்டும்,

அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்)அவர்களைப் பற்றி:

அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 90 -ல் பஸ்ராவில் பிறந்தவர்கள், இவருக்கு அப்துல்லா இப்னு அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) என்ற மகன் இருந்தார்கள், இவர் தாபின்கள் இடம் வரிசையில் இடம் பெற்றுள்ளார்கள், மேலும் இவருடைய ஆசிரியர்கள் அனைவரும் மிகப் பெரிய மார்க்க அறிஞர்கள் ஆவார்கள், 

 அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) ஆசிரியர்கள்:

இவர்களின் மார்க்க அறிஞர்களான  ஆசிரியரான ஹுசைன் பின் அப்துர் ரஹ்மான்(ரஹ்) என்ற அறிஞர் அனஸ் பின் மாலிக்(ரலி), அம்மாரா(ரலி) மற்றும் அப்துல்லா இப்னு ஷத்தாத்(ரலி) அவர்களிடம் மாணவராய் இருந்தவர்கள்.

மேலும் மற்றொரு ஆசிரியரான ஹமித்(ரஹ்) அவர்கள் அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்களிடம் மாணவராய் இருந்தவர்கள்,

மேலும் மற்றொரு ஆசிரியரான அல் ரபி(ரஹ்) அவர்கள் அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்களிடம் மாணவராய் இருந்தவர்கள்,

மேலும் மற்றொரு ஆசிரியரான  அபூ முஹம்மது(ரஹ்) அவர்கள் அனஸ் பின் மாலிக்(ரலி), அப்துல்லா பின் அபி அவ்பா(ரலி) அவர்களிடம் மாணவராய் இருந்தவர்கள்,

மேலும் மற்றொரு ஆசிரியரான அதா(ரஹ்) அவர்கள் அனஸ் பின் மாலிக்(ரலி), அப்துல்லா பின் அபி அவ்பா(ரலி) அவர்களிடம் மாணவராய் இருந்தவர்கள்,

அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) பற்றி இமாம்கள்:

இமாம் தபரி(ரஹ்) இமாம் சூயுத்தி(ரஹ்): இவரை நம்பகமானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள். தமது குர்ஆன் விளக்க உரையில்  ஹதிஸ்கள் இவரின் வழியாகவும் பதிவு செய்துள்ளார்கள்

இமாம் யஹ்யா பின் மயீன்(ரஹ்): இவரை நம்பகமானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

இமாம் அபூஹாதம்(ரஹ்): இவரை நம்பகமானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.மேலும் நேர்மையானவர் என்றும் கூறியுள்ளார்கள்.

இமாம் முஹம்மது பின் உஸ்மான் பின் அபிஷைபா(ரஹ்): இவரை நம்பகமானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

அம்ர்(ரஹ்): இவரை நம்பகமானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

இமாம் ஹாகிம்(ரஹ்): இவரை நம்பகமானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

இமாம் தஹபி(ரஹ்): இவரை நம்பகமானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

இமாம் ஹைதமி(ரஹ்): இவரை நம்பகமானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

இவருக்கு ஈஸா பின் மஹான்(ரஹ்) என்ற அழகிய பெயராலும் அழைக்கப்பட்டார்கள்.

இமாம் அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 160-ல் அல்லாஹ்விடம் சேர்ந்தார்கள், 

நாமும் மற்றொரு வழியில் அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) அவர்கள் நம்பிக்கையானவர்கள் தான் என்று எடுத்து வைத்துள்ளோம், இன்னும் சில இமாம்கள் அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) அவர்கள் நம்பிக்கையானவர், ஆனால் நினைவற்றால் மட்டும் குறைந்தவர் ஆவார்கள் என்றும் கூறியுள்ளார்கள்,


இதில் இமாம் அபூஹாதிம்(ரஹ்) அவர்கள் ஹதிஸ்களை அறிவிப்பாளர்களைப் பற்றி மிக துல்லியமாக கணக்கிடுப்பவர்கள், மிகவும் திறமையானவர்கள் என்று பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் அறிவித்துள்ளார்கள், இமாம் அபூஹாதிம்(ரஹ்) அவர்களும் அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்)  அவர்களைப் பற்றி நம்பிக்கையான தளத்தில் இணைத்து உள்ளார்கள் என்றால் இன்னும் அந்த ஹதிஸ் கூடுதலாக வலுமையடைகிறது.

இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) அவர்களை நம்பிக்கையான பட்டியலில் இணைத்துள்ளார்கள், இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களின் பெயரை கேட்டாலே வெறுக்கிறார்கள், ஏன் அவர்கள் தாபின்களின் வரிசையில் வரவில்லையா? ஸஹிஹ் ஸித்தா அழைக்கப்படும் இமாம் புஹாரி(ரஹ்),இமாம் முஸ்லிம்(ரஹ்),இன்னும்  பல இமாம்களுக்கு முன் பிறக்கவில்லையா? அவர்கள் அறிவித்த ஹதிஸ் ஏற்க கூடாது என்று சொல்வது அர்த்தமற்றது, இமாம் அபூஹனிபா(ரஹ்),இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களின் பெயரை கேட்டால் இன்று சில முஸ்லிம்கள் வெறுக்கிறார்கள், அந்த அளவு அவர்களின் முகப்பத்தை மனதில் இருந்து எடுத்து விட்டார்கள், ஆனால் இமாம் அஹ்மது(ரஹ்),இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள்  ஹதிஸை மதிக்கிறார்கள், ஆனால் அதே சமயத்தில் அவர்களை மறைமுகமாக மிதிக்கிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இமாம் அபூஹனிபா(ரஹ்),இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களின் தொகுத்த கித்தாபின் அடிப்படையில் உள்ள ஹதிஸ்களின் படி அமல்களை செய்து கொண்டு இருந்தார்கள், ஆனால் கருத்து வேறுபாடு அவர்களுக்கிடையே இருந்தாலும் மக்கள் சண்டை சச்சரவு என்று தெருவிற்கு தெரு, ஊருக்கு ஊரு என்று மேடை ஏறி விமர்ச்சியது இல்லை, ஆனால் இன்று ஹதிஸ்கள் ஆய்வுகள் என்ற பெயரில் தனது மத்ஹபை பின்பற்றுவதற்காக அடுத்தவரை குறையை ஆராயந்து வயிற்று பிழைப்பை நடத்தி கொண்டு இருப்பது தான் உணமை, பிறரின் குறைகளை ஆராய்தீர்கள், குறை கூறி திரிபவருக்கு கேடு தான் மற்றும் உங்களின் முன்சென்ற நல்லவர்களைப் பற்றி பேசாதீர்கள் என்று அல்லாஹ் சொல்வதேல்லாம் இவர்களுக்கு தெரியுமா? அல்லது தெரியாதா?

மறுப்பவர்கள் வைக்கும் விமர்சனங்கள்:

//‘சுபஹ் குனூத்’ ஓதும் மௌலவிகளே! அல்லாஹ்வின் தூதரோ! அவர்களின் நல்வழி நடந்த நாட்பெரும் கலீபாக்களோ சுபஹ் தொழுகையில் ‘குனூத்’ ஓதவில்லை என அறிவிக்கும் நபித்தோழரின் செய்தியை அமுல் செய்யாது நீங்கள் சார்ந்திருக்கும் மத்ஹபின் தீர்ப்பை அமுல் செய்வது பெரும் கொடுமை அல்லவா ?//

நமது  பதில்:

இங்கு தான் இவர்களின் பித்தலாட்டத்தை காணமுடிகிறது.

நான்கு கலீபாக்களின் ஒருவரான இறை நம்பிக்கையாளரின் தலைவர் உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி) ஆகிய ஆட்சியில் அவர்கள் ரமலானின் 20 ரக்கத்து தொழுது உள்ளதாக ஆதாரபூர்வமான ஹதிஸ்கள் இருந்தும், பல மாபெரும் இமாம்களும் விளக்கம் அளித்துள்ளார்கள் , அதற்கு அடையாளம் தான் இன்று மக்காவில் 20 ரக்கத்து நடைப் பெற்று கொண்டு இருக்கிறது, 20 ரக்கத்து இல்லை என்று வாதாடினால் அது எப்படி வந்தது என்பதை விளக்கவும், ஆனால் பல மேடைகளில் சகபாக்களைப் பின்பற்ற வேண்டும், சகபாக்களைப் பின்பற்றுவது வழிகேடு அல்ல என்று சொல்லி சுன்னத் ஜமாத்தினர் 20 ரக்கத்து தொழுவது தவறு வாதாடுவது எதற்கு?, சகபாக்களைப் பின்பற்ற வேண்டும் என மேடை ஏறி பேசினால் மட்டும் போதாது அதை அமல் படுத்த வேண்டும், அப்படி என்றால் சகபாக்களை சில கருத்துகளை ஏற்று சில கருத்துகள் மறுக்கிறீர்களா? இதைப் பற்றி அல்லாஹ் திருகுர்ஆனில் 

 (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனி;க்காமல் இல்லை.(2:85)

மேலுல் சில மத்ஹப் அவர்களும் இந்த கேள்வியை உங்களிடம் கேட்டு உள்ளார்கள், இன்னும் நீங்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை, ஏன் இந்த இரட்டை வேடம்? உள் ஒன்று வெளி ஒன்று பேசுவது முனாஃபிக் தனம் என்பதை தங்களுக்கு தெரியாதா?.

சுபஹ் தொழுகையில் குனூத் ஒதுவது, நபித்தோழர்கள்(ரலி) யாரும் அமல் செய்யவில்லையா?

சகபாக்கள் யாரும் அமல் செய்யவில்லை என்பது மாபெரும் பொய், உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்,

  அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! கிட்டத்தட்ட அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் தொழவைத்ததைப் போன்றே நான் உங்களுக்குக் தொழ வைக்கிறேன்' என்று கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) லுஹர், இஷா, ஸுபுஹ் தொழுகைகளின் கடைசி ரக்அத்துகளில் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' என்று கூறியபிறகு குனூத் ஓதுவார்கள். அதில் இறைநம்பிக்கையாளர்களுக்காக பிரார்த்திப்பார்கள். இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்  என அபூ ஸலமா(ரஹ்) அறிவிக்கிறார்கள்(இமாம் புஹாரி(ரஹ்), இமாம் முஸ்லிம்(ரஹ்))

இமாம் புஹாரி(ரஹ்), இமாம் முஸ்லிம்(ரஹ்) சேர்த்து அறிவித்துள்ளார்கள் என்றால் இது ஆதாரபூர்வமான ஹதிஸ் என்பது மேலும் உறுதியாகின்றது.

மேலும் நீங்கள் உங்கள் வாயிலே கூறியுள்ளீர்கள்.

//ஒரு ஹதீஸ் புகாரி, முஸ்லிம் அல்லாத வேறு கிரந்தங்களில் இடம் பெறுமானால் அதனை ஆய்வின்றி உலகில் எந்த அறிஞரும் ஏற்றுக் கொள்வதில்லை//

அப்போ இமாம் புஹாரி(ரஹ்), இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் இடம் பெற்றிருக்கும் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதிஸ் ஆய்வின்றி ஏற்று கொள்வதாக நீங்களே கூறிவிட்டீர்கள்,

சரி இதில் சிலர் கேட்கலாம், அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் லுஹர், இஷா, ஸுபுஹ் தொழுகையில் தொழுதுள்ளார்களே, இமாம் ஷாஃபி(ரஹ்) மத்ஹப் காரர்கள் தொழ மாட்டீ கிறார்கள் என்று கேள்வி கேட்கலாம், அதற்கு நீங்கள் அமல் செய்தால் அல்லது செய்ய தயார் என்றால் அவர்களும் செய்வார்கள், இதில் என்ன சந்தேகம், அவர்களும் செய்வது தவறு ஒன்றுமில்லை ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் சுபஹ் தொழுகைக்கு மட்டும் தொழ வைத்தார்கள் என்றும் ஹதிஸில் இடம் பெற்றுள்ளது.அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) வழியாக வரும் அறிவிப்புகளில் நபி(ஸல்) அவர்கள் சுபஹ் தொழுகையில் ஒதினார்கள் என்றும், சுபஹ் தவிர மற்ற தொழுகையில் குனூத் ஓதமால் இருந்தார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.அபூஜஃபர் அர்ராஸி(ரஹ்) அவர்கள் நம்பகமானவர் என்பதால் இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் சுபஹ் தொழுகையில் மட்டும் அமல் செய்யலாம்  என்று கூறியுள்ளார்கள், அதனால் எந்த ஹதிஸ் செய்ல் படுத்தினாலும் தவறு இல்லை, 


அபூஹூரைரா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! என்ற வாசகத்தை பயன் படுத்தி கூறியுள்ளார்கள்,  மேலும் நான் உங்களுக்கு தொழ வைக்கின்றேன் என்ற வாசகத்தை பயன் படுத்திருக்கின்றார்கள், இதில் இரண்டு விதமான மக்களைப் பார்த்து குறிக்கும். 1) நபித்தோழர்கள்(ரலி) 2) தாபின்கள்(ரஹ்)

நபித்தோழர்களும்(ரலி), தாபின்களும்(ரலி) மறுப்பு தெரிவிக்கவில்லை, அப்படி தெரிவித்து இருந்தால் ஹதிஸ் சமர்க்கப்பட வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன், உங்கள் கூற்றுபடி அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் பித்அத் வாதி என்று உங்களால் கூற முடியுமா? 

ஆனால் இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் இதன் அடிப்படையில் ஆதாரம் தொகுத்து இருக்கலாம் அல்லவா? இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களின் ஆசிரியர் யாராவது இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களுக்கு அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதிஸ் அறிவித்திருக்கலாம் அல்லவா?, இதன் அடிப்படையில் இன்றைய உலகத்தில் வாழும் இமாம் ஷாஃபி(ரஹ்)மத்ஹப் வினர் எடுத்து அமல் செய்வது என்ன தவறு?

உங்கள் மத்ஹப் விற்கு மாற்றமாக உங்கள் மனதுக்கு சரியாக படவில்லை இருப்பதற்காக மற்றவர்களை ஏசுவதா?

யார் சகபாக்களைப் பின்பற்றிக்கின்றார்கள்? யார் அவமாரியாதை செய்கின்றார்கள். சகபாக்களைப் பின்பற்றுவது வழிகேடு அல்ல என்று உங்கள் இணைய தளத்தில் பல்வேறு இடங்களில் சுட்டி காட்டியுள்ளீர்கள், அப்படி  இருக்கும் போது ஏன் இந்த குழப்பத்தை மக்கள் இடையே ஏற்படுத்தி கின்றீர்கள், குழப்பம் ஏற்படுத்துவது கொலை செய்வது கொடியதாகும் என்ற அல்லாஹ் கூறுவதெல்லாம் உங்களுக்கு தெரியாதா என்ன?

அபூஹுரைரா(ரலி) அவர்கள் சுயமாக செய்தார்களா?

இல்லை,


நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ, அல்லது ஒரு கூட்டத்தை சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர குனூத் ஓத மாட்டார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

எனவே அபூஹுரைரா(ரலி) அவர்கள் சுயமாக செய்யவில்லை, நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை தான் அமல்படுத்தினார்கள், அந்த நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை நாமும் அமல் படுத்தலாம் எனபதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களின் கூற்றும் சரியானதாகும், 

அபூஹுரைர(ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த செய்தியை வைத்து அதனால் தான் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும், இமாம் நவவி(ரஹ்) அவர்கள் முஸ்லிம்களுக்கு சோதனை ஏற்பட்டால் குனூத் ஓதுதல் சுன்னத் என்ற தலைப்பை  பதிவு செய்துள்ளார்கள்,  அதனால் முஸ்லிம்களுக்கு துன்பம் ஏற்படும் போது ஓதலாம் எனபதில் எந்த வித தவறும் இல்லை.

வித்ரு குனூத்தில் ஆமின் கூறலாமா?

கூறலாம், தவறு ஒன்றுமில்லை, 

நபி(ஸல்) அவர்கள்(குனூத்) துஆ செய்யும் போது பின்னர் நின்ற அனைத்து சகபாக்களும் ஆமின் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம்  அபூதாவுத்(ரஹ்)


மறுப்பவர்கள் வைக்கும் விமர்சனங்கள்:

//நபி (ஸல்) அவர்கள் ‘சுபஹ்’ தொழுகையில் இரண்டாவது ரகஅத்தில் ருகூவில் இருந்து நிலைக்கு வந்ததும் இந்த ‘அல்லாஹும்மஹ்தனீ பீமன் ஹதைத்த… என்ற துஆவை ஓதுவார்கள்//

நமது  பதில்:

ஆனால் சுபஹ் தொழுகை என்ற வார்த்தை இடம் பெறாமல் வந்துள்ளது. நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையில் இந்த குனூத் ஒதிவுள்ளார்கள் என்பது தெளிவாக பல்வேறு கித்தாபுகளில் உள்ளது, 

ஸஹிஹ் ஸித்தா என்று அழைக்கப்படும் இமாம் புஹாரி(ரஹ்),இமாம் முஸ்லிம்(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்),இமாம் அபூதாவுத்(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்),இமாம் நஸாயி(ரஹ்), ஆகிய ஆறு ஹதிஸ் நூல்களில் நான்கு ஹதிஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது, அந்த ஹதிஸ் நூல் இமாம் திர்மதி(ரஹ்),இமாம் அபூதாவுத்(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்),இமாம் நஸாயி(ரஹ்) ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது, இந்த நான்கு இமாம்களும் ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள், யார் மதஹப் வெறி பித்து பிடித்து அலைக்கின்றார்கள் இந்த கட்டுரையை படித்தவர்கள் அறிவார்கள்.உண்மையை மறைப்பது யார் என்று அவர்களே தெரிந்து கொள்ளட்டும்

மேலும் வித்ரு தொழுகையில் அல்லாஹும்மா இன்ன நஸ்தயினுக.. என்ற ஹனபி இமாம்கள் ஓதும் வித்ரு குனூத் உமர்(ரலி) அவர்கள் வித்ரு தொழுகையில் ஓதினார்கள் என்ற ஆதாரபூர்வமான ஹதிஸ் இமாம் பைஹகி(ரஹ்),இமாம் அப்துர் ரஜாக்(ரஹ்),இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்),இமாம் தஹவி(ரஹ்) போன்ற இமாம்கள் பதிவு செய்துள்ளார்கள்,

இன்னும் பல துஆக்கள் ஓதினதாக ஹதிஸ்களில் இடம் பெற்றுள்ளது.

இன்சா அல்லாஹ்..மேலும் விவரங்கள் வித்ரு தொழுகை ஹனிபி என்ற கட்டுரையில்  அதன் அறிவிப்பாளர்களுடன் விரைவில் காணாலாம் 

நபி(ஸல்) அவர்கள் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதவில்லைப் பற்றிய பாடம்:

அபூமாலிக் அல்அஷ்ஜயீ (ரழி) அவர்கள் தனது தந்தையிடம் தந்தையே! தாங்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னாலும், அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான்(ரலி) கூபாவில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அலி(ரலி) ஆகியொருக்குப் பின்னாலும் தொழுதிருக்கிறீர்கள், அவர்களில் ஒருவராவது பஃஜ்ரில் குனூத் ஓதினார்களா? எனக் கேட்டேன். அதற்கு மகனே! அது புதிய வழிமுறையாகும் எனப் பதிலளித்தார்கள்(இமாம் திர்மதி(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்), இமாம் அஹமது(ரஹ்),இமாம் நஸாயி(ரஹ்)

இந்த ஹதிஸ் ஆதரபூர்வமானதாகும். பெரும்பான்மையான ஹதிஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது,

கூஃபாவில் பிறந்த இமாம் அபுஹனிபா(ரஹ்) அவர்கள் அலி(ரலி) அவர்களின் வழியாக இந்த ஹதிஸ் பதிவு செய்துள்ளார்கள், அலி(ரலி) அவர்களின் மாணவரின் மகன் தான் இமாம் அபுஹனிபா(ரஹ்) அவர் ஆவார்கள், அதானல் அலி(ரலி) அவர்கள் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதவில்லை என்று ஆதாரபூர்வமான ஹதிஸ் மூலமாக இடம் பெற்றுள்ளது,இமாம் அபுஹனிபா(ரஹ்) அவர்கள் அலி(ரலி) அவர்கள் மூலமாக இச்செய்தியை அறிவிப்பு செய்து உள்ளார்கள், இதனால் ஹனபி மத்ஹப் வினர் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவதில்லை,

ரிஃல், தக்வான் ஆகிய கூட்டத்தினருக்கு எதிராக நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் குனூத் ஓதினார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் புஹாரி(ரஹ்)

மேற் கண்ட  ஹதிஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது, 

நபி(ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் மட்டும் தான் ஓதினார்கள் என்றும் அதற்கு பிறகு ஓதவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, 


கருத்து வேறுபாடுகளின் முடிவு:

சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது சம்பந்தமாக இரு வேறுக்கருத்துகள் உள்ளன.மற்றொரு வழியில் நபி(ஸல்) அவர்கள் ஒருமாத தொழுகையில் மட்டும் தான் ஓதினார்கள் அதன் பிறகு ஓதவில்லை என்று மற்ற வழியிலும் ஆதரபூர்வமான ஹதிஸ் மூலமாக  நிருபிக்கப் பட்டுள்ளது.மற்றொரு வழியில் நபி(ஸல்) அவர்கள் சுபஹ் தொழுகையில் ஓதினார்கள் என்று உள்ளது, மார்க்க அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது இரு வேறு கருத்துகளும் சரியாகும், சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது தவறுமில்லை, ஓத வேண்டும் என்று கட்டாயமும் இல்லை. செயல்கள் அனைத்து எண்ணத்தே பொறுத்தே அமைக்கின்றன.

இமாம்களுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது அனைத்து இயக்கத்தில் உள்ளவர்களுக்கும் நன்கு தெரியும், அதை காரணம் பயன்படுத்தி அதாவது இமாம்களின் கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி மக்கள் உடையே பணம் பெற்றுக் கொண்டு வயிற்று பிழைப்பிற்காக நூலை விற்று சம்பாதிப்பவர்களும் மக்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்தி வயிற்றை நிரப்புவர்களும் நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள்.