ஞாயிறு, 23 ஜனவரி, 2011

தொழுகை முறை ஹனபி

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்,

அடுத்து நமது படைப்பு சரியான அறிவிப்பாளர்களுடன் சரியான ஆதராப்பூர்வாமான ஹதிஸ்களுடன் தொழுகை முறை ஹனபி வெளியிடப்படும், அதன்பிறகு விமர்ச்சிப்பவர்களுக்கு மறுப்புகளுக்கு பதிலடியும் கொடுக்கப்படும், தொழுகை முறை ஹனபி சரியான ஆதரப்பூர்வமான ஹதிஸ்களுடன் ரெடியாகிவிட்டது, அதே சமயத்தில் விமர்ச்சனங்களும் நமது விளக்கமும் இன்சா அல்லா வெகு விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்யப்படுக்கிறது.

http://ahlussunnathwaljamath.blogspot.com/2011/06/blog-post.html

சனி, 22 ஜனவரி, 2011

சகபாக்களை குறைகூறுபவர்கள், அல்லாவை அஞ்சி கொள்ளட்டும்

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரகளுக்கும்,


என் தோழர்களைத் திட்டாதீர்கள்(ஏசாதீர்கள், குறைகூறாதீர்கள்), ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(இமாம் புகாரி(ரஹ்)).

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:தமத்து ஹஜ்ஜை ரசூல் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்றிருக்கும்போது, அதை அறிந்திருக்காத உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர், அதை மறுத்திருக்கிறார்கள். (புஹாரி 1563 )

நான் உஸ்மான்(ரலி) உடனும், அலீ(ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான்(ரலி) ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (ம்ரான்) செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார். இதைக்கண்ட அலீ(ரலி), ஹஜ் உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து 'லப்பைக் பி உம்ரதின் வ ஹஜ்ஜதின்" என்று கூறிவிட்டு 'நபி(ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான்விட்டு விடமாட்டேன்" எனக் கூறினார்கள் என மர்வான் இப்னி ஹகம் அறிவித்தார்கள்.

பதில்:

உஸ்மான்(ரலி) அவர்கள் சுயமாக செய்தார்களா?


நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி),உஸ்மான்(ரலி) ஆகியோரும் ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் அணிந்தார்கள் இதை இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் திர்மதி(ரஹ்),இமாம் புகாரி(ரஹ்),இமாம் முஸ்லிம்(ரஹ்).


அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்)
வந்தார்கள்.

பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தேபாது, முதல் வேலையாக இறையில்லம்கஅபாவைச் சுற்றிவந்தார்கள். பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல்,ஹஜ்ஜோடு உம்ராவை சேர்த்தல் வேறதுவும் நிகழவில்லை). 

பின்னர் உமர்(ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தேபாது,அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்ததை போன்றே செய்தார்கள்

பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அவர்கள் (மக்காவிற்கு 
வந்ததும்) முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றி வருவைதேய நான் கண்டேன்; 


பின்னர் அதை தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவை சேர்த்தல் வேறதுவும் நிகழவில்லை)

பின்னர் முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகியோரும் (அவ்வாறே செய்தனர்.) பின்னர் என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். 


அவர்களின் முதல் வேலையாக இருந்ததும் கஅபாவைச் சுற்றுவதாகத்
தான் இருந்தது. அதை தவிர வேரொன்ன்றும் நடக்க வில்லை. பின்னர் முஹாஜிர்களும் அன்சாரிகளும் அவ்வாறு செய்ய்வைதேய நான் கண்டேன்; பின்னர் அதத் தவிர வேரெதுவும் நிகழவில்லை.பின்னர் அவ்வாறு செய்தவர்களில் இறுதியானவராக இப்னு உமர் (ரலி) அவர்கைளேய நான்
கண்டேன். அவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றவில்லை. இதோ அவர்களுடன் இப்னுஉமர் (ரலி) அவர்கேள இருக்கிறார்கள். அவர்களிடேம மக்கள் கேட்கவேண்டியதுதானே!முன்னோர்களில் எவரும் தம் பாதங்கைள (மக்காவில்) பதித்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவை சுற்றிவராமல் இருந்ததில்லை. பின்னர் (ஹஜ்ஜை முடிக்காமல்)

இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டார்கள். என் தாயார் (அஸ்மா-ரலி), என் சிறிய தாயார்(ஆயிஷா-ரலி) ஆகியோர்(மக்காவிற்கு) வந்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் வேறெதையும் தொடங்கமாட்டார்கள். பின்னர் (ஹஜ்ஜை முடிக்கும்வைர) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள்.என் தாயார் (அஸ்மா-ரலி) அவர்கள் என்னிடம், "நானும் என் சேகாதரி (ஆயிஷா-ரலி) அவர்களும் (உன் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களும் மற்றும் இன்னின்ன மனிதரும் உம்ராவிற்குச் சென்ன்றேபாது ஹஜருல் அஸ்வைதத் தொட்டதும் (அதாவது தவாஃபும்"சயீ'யும் செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம்'' என்று தெரிவித்தார்கள். (எனேவ இராக்கைச் செர்ந்த) அந்த மனிதர் பொய்யான தகவலையே குறிப்பிட்டுள்ளார்'' என்று உர்வா (ரஹ்) அவர்கள் விடையளித்தார்கள். (இமாம் முஸ்லிம்(ரஹ்))


எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார் என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.(இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்),இமாம் புகாரி(ரஹ்),இமாம் முஸ்லிம்(ரஹ்)).

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:உடலுறவு கொண்டு, இந்திரியம் வெளியாகா விட்டாலும் குளிப்பு கடமை என்று ரசூல் (ஸல்) கட்டளையிட்டிருக்க, உஸ்மான் (ரலி) அவர்கள் குளிப்பு கடமையில்லை என்று கூறியிருக்கிறார்கள். (புஹாரி 179 )

பதில்:
ஆரம்ப சட்டம்:

விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பு கடமை என்பது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கொடுக்கப்பட்ட சலுகையாக இருந்தது. பின்னர் இந்த சலுகை ரத்து செய்யப்பட்டு(ஆணுறுப்பும்,பெண்ணுறுப்பும் இணைந்து விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது அவசிக்கப்பட்டு) விட்டது. என உபை பின் கஅபு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உஸ்மான்(ரலி,அலி(ரலி), ஆரம்ப காலத்தில் சலுகை அளிக்கப்பட்ட ஹதிஸ், அதுவும் அவர்கள் சுயமாக அறிவிக்கவில்லை,

உஸ்மான்(ரலி), அலி(ரலி), ஆகியோர் அறிவிக்கிறார்கள், விந்து வெளிப்பட்டாலே குளிப்பது அவசியம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹதிஸ் சட்டம் மாற்றப்பட்டப்பின் உஸ்மான்(ரலி), அலி(ரலி), அறிவிக்கும் ஹதிஸ்:
பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதை ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இது ஹசன், ஸஹிஹ் எனும் தரத்தலைமைந்தாகும், ஆயிசா(ரலி) அவர்கள் பல்வேறு வழிகளில் இந்த ஹதிஸ் அறிவிக்கப்படுகிறது.(அவர்கள்) அபூபக்கர்(ரலி),உமர்(ரலி),உஸ்மான்(ரலி),அலி(ரலி), போன்ற நபித்தோழர்களில் பலரது கருத்தும், தாபியின்களில் உள்ள சட்ட நிபுனர்களின் கருத்தும் ஸுஃப்யான் அஸ் ஸவ்ரீ(ரஹ்),ஷாஃபி(ரஹ்),அஹ்மத்(ரஹ்),இஸ்ஹாக்(ரஹ்) போன்றவர்களின் கருத்து இதுவேயாகும், பெண்ணுறுப்பை, ஆணுறுப்பு கடந்துவிட்டால்(விந்து வெளிப்பட்டா விட்டாலும்) குளிப்பு கடமை என்று இவர்கள் கூறுகின்றார்கள்.
(இமாம் முஸ்லிம்(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்),இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் நஸயி(ரஹ்),இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்))

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மூன்று தலாக்கை ஒரே நேரத்தில் சொன்னாலும், அது ஒரு தலாக்கென்று தான் கருதப்பட்டு வந்தது. ஆனால், உமர் (ரலி) இந்த சட்டத்தை மாற்றுகிறார்கள். (இதில் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் மாற்றுகிறார்கள் என்றே வருகிறது!) - முஸ்லிம் 2689

பதில்:
என் அருமை தோழர்களே நான் எவ்வளவு நாட்கள் நான் உங்களுடன் இருக்க போகிறேன் என்பது எனக்கு தெரியாது, எனக்கு பிறகு அபூபக்கர்(ரலி) அவர்களையும், உமர்(ரலி) அவர்களையும் பின்பற்றுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினதாக ஹூதைபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் மிஷ்காத்(ரஹ்),இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்)).

எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார் என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.(இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்),இமாம் புகாரி(ரஹ்),இமாம் முஸ்லிம்(ரஹ்)).

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:
தொழுகையின் போது ருகூவில் கால் முட்டிகளில் கை வைக்க வேண்டும் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கும் போது, அதற்க்கு மாற்றமாக, இப்னு மசூத் (ரலி) அவர்களுக்கு தெரியாமல், தமத்து இரு தொடைகளுக்கு நடுவே கை வைத்து தொழுகிறார்கள். (முஸ்லிம் 831 )

பதில்:

குர் ஆன் இறங்கிய முறைப்படியே ஓத வேண்டுமென உங்களில் ஒருவர் விரும்பினால் அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் முறைப்படி ஓதிக்கொள்ளவும், அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் உங்களுக்கு எந்த ஒரு ஹதிஸை அறிவித்தாலும் அதனை உண்மை என நம்புங்கள் என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். மேலும் நான் ஓராண்டு காலம் வரை ஒவ்வொரு வியாழன் கிழமை அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து கொண்டு இருந்தேன், அக்காலத்தில் ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எந்த விசயத்தையும் கூற நான் கேட்டதில்லை, ஒரு தடவை (அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி)) அவர்கள் கூறினார்கள் என்று தானாக நாவில் வந்தவுடன்,உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது,கண்களில் கண்ணீர் ததும்பியது, நெற்றில் வியர்வை துளிர்த்தது, நரம்புகள் புடைத்து கொண்டன, பிறகு அவர்கள் இன்சா அல்லா இவ்வாறு தான் கூறினார்கள் அல்லது இதை போன்றதை கூறினார்கள் அல்லது இதைவிட அதிகமாக அல்லது இதைவிட சற்று குறைவாக கூறினார்கள் என்று கூறி முடித்தார்கள்(இமாம் அஹ்மத்(ரஹ்).


அல்லா மிக்க அறிந்தவன்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரு காலம் வரும் நன்கு பசிதிருப்பவன் உணவை கண்டவுடன் அதை நோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் சமுதாயத்தை நோக்கி மற்றவர்கள் பாயவார்கள்.

அதற்கு பிறகு நபி தோழர் வினவினார்கள்: அல்லாவின் தூதரே அப்பொழுது முஸ்லிம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ?

அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரை போல் ஆகிவிடுவார்கள்.அவர்கள் உள்ளத்தில் வஹ்ன் வந்து விடும்.

அதற்கு பிறகு நபி தோழர் வினவினார்கள்: அல்லாவின் தூதரே வஹ்ன் என்றால் என்ன்?

அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்: இவ்வுலகத்தின் மீது அதிக பற்றும் மரணத்தை அஞ்சுவது ஆகும்

நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: என்னுடைய உம்மத்தினர் 73 கூட்டமாக பிரிவர், அதில் ஒரே ஒரு கூட்டத்தை தவிர மற்ற அனைவரும் நரகத்திற்கு செல்வர் இதை செவியுற்ற நபி தோழர் அல்லாவின் தூதரே! அந்த சுவனத்திற்கு செல்லும் அந்த கூட்டம் எது?

அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்: அந்த கூட்டம் நானும் என்னுடைய தோழர்களையும் பின்பற்றிய கூட்டம் ஆகும். (இமாம் திர்மதி(ரஹ்))


நபி(ஸல்) அவர்கள் எது சொன்னாலும் பின்பற்றுவோம்:

அவர்(நபி(ஸல்)) தம் இச்சைபடி எதையும் பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட்தேயன்றி வேறில்லை.மிக்க வல்லமுடையவர் ஜிப்ரில்(அலை) அவர்களிக்கு கற்று கொடுத்தார்கள்(53:3,4,5)

மேலும் (நபியுடைய) இதயம் கண்டதை பற்றி பொய்யுரைக்கவில்லை ஆயினும் அவர் கண்டவற்றின் மீது நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?(53:11,12).

அல்லா திருமறையில் நபி(ஸல்) அவர்களுக்கு வழிப்பட்டவர், அல்லாவுக்கு வழிபட்டவரவார்:
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்கள் கொண்டு நினையூட்டப்பட்டால் செவிடர்களையும், குருடர்களையும் போன்று அதில் மீது விழமாட்டார்கள்(25:73)

நீங்கள் முஃமீன்களாக இருப்பின் அல்லாவுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிங்குள்(8:1)

முஃமீன்களே! நீங்கள் அல்லாவுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் செவிமடுத்து கொண்டே அவரை புறக்கணிக்காதிர்கள்(8:20)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாவுக்கும் வழிபடுங்கள், இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள்- உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள்(47:33)

இன்னும் அல்லாவுக்கும் வழிபடுங்கள், இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள்,எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள், இதனை நீங்கள் புறக்கணித்து விட்டால், நம் கட்டளைகளை தெளிவாக விளங்குவது நம் தூதர் மீது கடமையாகும் எனபதை புரிந்து கொள்ளுங்கள்(5:92)

அல்லாவுக்கும் வழிபடுங்கள்,இன்னும் ரஸீலுக்கும் வழிபடுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக! நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட இத்தூது செய்தியை அறிவிப்பு செய்வது தான்; இன்னும் உங்கள் மீதுள்ளா கடமையானது உங்கள் சுமத்தப்படி வழிபடுவானது; எனவே நீங்கள் அவருக்கு கீழ்படிந்து நீங்கள் நேர்வழிப் பெறுவீர்கள், இன்னும் நம் தூதை தெளிவாக எடுத்துரைப்பது தவர வேறெதும் தூதர்மீது இல்லை(24:54)

அல்லாஹ்வை நீங்கள் வழிபடுங்கள்:அவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள்: எனக்கு வழிபடுங்கள்(71:3)

மேலும் அல்லாவும், அவனுடைய தூதரும் ஒரு காரியதை பற்றி கட்டளையிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமை இல்லை, ஆகவே அல்லாவுக்கும் அவனுடைய ரஸீலுக்கும் மாறு செய்தால் நிச்சியமாக அவர்கள் பகிரங்க வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்(33:36)

வெள்ளி, 21 ஜனவரி, 2011

தராவிஹ் 8 அல்லது 20 -பகுதி 1

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:


//13 ரக்அத்கள்

நபி(ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்" அறிவிப்பவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். புகாரி 183 முஸ்லிம் 1400நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம் 1402நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் வித்ரு தொழுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதுமையடைந்து பலவீனப்பட்டபோது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) திர்மிதீ 420 நஸயீ 1708அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறு ரக்அத்களிலும் உட்கார மாட்டார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள். முஸ்லிம் 1341 திர்மிதீ 421 அபூதாவூத் 1141 தாரமீ 1535அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் உள்பட பதிமூன்று ரக்அத்கள் (இரவில்) தொழுவார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள். முஸ்லிம் 1342 //நமது பதில்:

மேற்கண்ட எந்த வாசகத்திலும் ரமலான் என்ற வாசகம் இடம் பெறவில்லை என்பதை சகோதரர் நன்கு படித்து பார்க்கவும் இங்கு நடைப் பெறக்கூடிய தலைப்பு ரமலானில் நடைப்பெறும் தராவிஹ் என்பதை நினைவு கொள்ளுங்கள். ரமலான் என்று 8 - 3 வரும் ஒரு சில ஹதிஸ்களும் பலகினமானது, அதையும் 8 - 3 பள்ளியில் ஜமாத்தாக தொழுகும் சகோதரர்கள் நன்கு படித்து பார்க்கவும்.
11 அல்லது 13 ரக்கத்து பள்ளியில் ரமலானில் ஜமாத்தாக தொழுகுவதற்கு எந்த ஒரு ஆதரபூர்வமான செய்தி கிடையாது.
இன்று சில சகோதரர்கள் ரமலானில் 8 மற்றும் 3 ரக்கத்து வித்ரு ஜமாத்தாக தொழுகுகிறார்கள், இதற்கான ஆதாரமாக கீழ்கண்ட ஆதாரத்தை எடுத்து வைக்கிறார்கள்

20 ரக்கத்து சரியா அல்லது தவறா எனபது ஒரு பக்கம் இருக்கட்டும்..அதைப்பற்றி அதன் ஹதிஸ் நிலை மற்றும் மிகப் பெரிய மார்க்க அறிஞர்கள் விளக்கம் என்ன என்பதை பிறகு பார்ப்போம்.

20 ரக்கத்தின் நிலமையை பலகினமானது என்று குறள் கொடுக்கும் சிலர் 8+3 ரக்கத்தில் வரும் அறிவிப்பளார்களின் நிலைமையையும் கட்டாய தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் 30 நாள் பள்ளியில் ஜமாத்தாக நபி(ஸல்) அவர்கள் தொழுததாக ஆதராத்தையும் முன் வைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும்

கீழ் கண்ட ஹதிஸை எடுத்து வைக்கும் சிலர்(என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினாதாக சொல்லி 30 நாள் ஜமாத்தாக தொழுது வருக்கின்றார்ர்கள். நபி(ஸல்) அவர்கள் ரமலானில் பள்ளியில் கூட்டாக 30 நாள் இரவு தொழுகை நடத்தி காட்டினார்கள் என்று ஒரு பலகினமான ஹதிஸ் கூட இவர்களால் எடுத்து வைக்கும் முடியாது,

சகபாக்களை பின் பற்ற மாட்டோம் சொல்லும் சகோதரர்கள் இந்த ஒரு விசயத்தில் மட்டும் சகபாக்களை பின் பற்ற காரணம் என்ன?

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

1)ஜாபிர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் ரமலானில் 8ரக்கத்துகளும் வித்ரு 3 ரக அத்துகளும் தொழவைத்ததாக அறிவிக்கிறார்கள்.(அபுதாவுத், நஸயி)


நமது பதில்:


இது இந்த இரண்டும் நூல்களில் இடம் பெறும் இந்த ஹதிஸ் முன்கர்,சாத், மத்ருக் தரத்தில் அமைந்த ஹதிஸ் ஆகும் என இமாம் அபுதாவுத்(ரஹ்),இமாம் நஸயி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்தததை மறுக்கும் சகோதரர்கள் மறைத்து தாங்கள் முழுமையாக ஸஹிஹ் வான ஹதிஸ் பின்பற்றும் என்று அறியாத மக்களை மூடராக்கி கொண்டு இருக்கிறார்கள். மேலும் இதில் இடம் பெறும் அறிவிப்பாளர்களின் நிலைமை.

இமாம் அபுதாவுத்(ரஹ்), இமாம் நஸயி(ரஹ்) இதில் வரும் அறிவிப்பாளர் ஈஸா பின் சாரியா யாரென அறியப்படாதவர். எனவே இந்த ஹதிஸ் ஏற்க தக்கதல்ல என விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதில் வரும் மற்றொரு அறிவிப்பாளர் முகம்மது பின் ஹூமைத் அர் ரஜி ஒரு பொய்யர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

2)மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

உமர்(ரலி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரலி),தமிமுத்தாரி(ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக்கத்து தொழவைக்கும் படி கட்டளையிட்டார்கள்(மாலிக் மூஅத்தா)

நமது பதில்:


இது நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக வரவில்லையே, உமர்(ரலி) அவர்கள் அறிவித்தாக வருகின்றது, உமர்(ரலி) அவர்களைப் பின்பற்ற மாட்டோம் என்று சொல்லிவிட்டு. உமர்(ரலி) இடம் பெறும் ஹதிஸ்களைப் பதித்தது ஏன்? உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதிஸ் 8 அல்லது 20 என்பதை கீழே நன்றாக படித்து பாருங்கள்

மேற்கண்ட ஹதிஸ் அவர்கள் கூற்றுபடி உமர்(ரலி) பின்பற்றுவதை ஏற்று கொள்வதாக என்று வைத்து கொண்டாலும் 23 ரக்கத்து என்பதை கீழ்கண்ட தொடர் மூலம் அறியலாம்.

ஸாயப் பின் யாஜித் அவர்களின் வழியாக இந்த ஹதிஸ் அறிவிக்கப்படுகின்றது, இவர் அறிவிப்பு செய்யும் வரிசையில் 11, 13, 20 ரக்கத்துகள் இடம் பெறுவதால் மார்க்க அறிஞர்களிடத்தில் கருத்து வேறுபாடு இருக்கின்றது. அவற்றின் தொடரை விரிவாக பார்த்தால் உன்மை நிலையை நாம் கண்டறியலாம்,

ஸாயிப் பின் யாஜித் அவர்களிடமிருந்து 3 பேர் ஹதிஸை அறிவிக்கிறார்கள்

1)ஹரித் பின் அப்துர் ரஹ்மான்

2)யாஜித் பின் குஷைபா

3)முகம்மது பின் யூசுப்இதில் 1)ஹரித் பின் அப்துர் ரஹ்மான் மற்றும் 2)யாஜித் பின் குஷைபா இந்த இரண்டு பேரும் 20 ரக்கத்து என அதே ஹதிஸில் குறிப்பிடுக்கின்றார்கள், மேலும் யாஜித் பின் குஷைபா அவர்களிடத்தில் இரண்டு மாணவர்களும் ஸாயிப் பின் யாஜித் அவர்களிடத்தில் 20 ரக்கத்து என அறிவிப்பு செய்கிறார்கள்.

யாஜித் பின் குஷைபா

1)இப்னு அபிதைப்

2)முகம்மது பின் ஜாபர்

ஆகிய இருவரும் 20 ரக்கத்து என ஸாயிப் பின் யாஜித் அவர்களிடத்தில் அறிவிப்பு செய்கிறார்கள்.

இப்போது கருத்து வேறுபாடு முகம்மது பின் யூசுப் அவர்களிடத்தில் வருகிறது

முகம்மது பின் யூசுப் அவர்களிடத்தில் மூன்று மாணவர்கள் இடம் பெறுகின்றார்கள்

1)இப்னு இசாக்

2)தாவுத் பின் கைஸ்

3)இமாம் மாலிக்

இதில் இப்னு இசாக் 13 ரக்கத்தும், இமாம் மாலிக் 11 ரக்கத்தும், தாவுத் பின் கைஸ் 21 ரக்கத்து அறிவிப்பு செய்கிறார்கள்.


இதில் மூன்று பேர் அறிவிக்கும் ஹதிஸ் வெவ்வேறாக வருவதால் இது முள்தரப் வகையை சார்ந்தது, அதாவது அறிவிப்பாளர் விசய்த்திலோ அல்லது அறிவிக்கப்படும் செய்திகளிலோ குழப்பம் இருத்தல், இது போன்ற ஹதிஸ் ஏற்கத்தக்கதல்ல, எனவே இதுவும் பலவினமடைகிறது,

மேலும் 1)ஹரித் பின் அப்துர் ரஹ்மான் 2)யாஜித் பின் குஷைபா இந்த இரண்டு பேர் வழியாக வரும் ஹதிஸில் எந்த வித குழப்பமும் இல்லை, அறிவிக்கும் நபர்கள் பற்றி யாரும் விமர்சனம் செய்யப்படவில்லை, இதன் தொடர் மிகவும் அழகானதாகும், எனவே இந்த ஹதிஸ் ஸஹிஹ் தரத்தில் அமைந்தவையாகும், எனவே 20 ரக்கத்து என்பது பலமாக இங்கு நிருபிக்கப்பட்டுள்ளது.

இமாம் பைஹகி(ரஹ்) அவர்கள் பதிவு செய்த இந்த ஹதிஸ் ஸஹிஹ் வானது என ஹதிஸ் கலை வல்லுனர்கள்.

இம்மணிமொழியை அறிவித்த அறிவிப்பாளர்கள் அனைவரும் உண்மையாளர் எனவும், குறை கூற பெறதாவர்கள் எனவும் என மற்றொரு ஹதிஸ்கலை வல்லுனர்களான இமாம் நவவி(ரஹ்) அவர்க மஜ்மஃ எனும் தமது கித்தாபில் பகுதி 4, பக்கம் 32-ல் குறிப்பிடுள்ளார்கள், மற்றும் இமாம் புகாரி விரிவுரையாளரன இமாம் ஹஜருல் அஸ்லானி(ரஹ்) அவர்கள் தல்கீஸுல் ஹபீர் என்ற நூலில் 265ம் பக்கத்திலும் கூறியுள்ளார்கள், இவ்வாறு ஸஹிஹ் வான அறிவிப்பாளர் இடம் பெற்று இருப்பதால் இதை எடுத்து செயல்படுத்துவதில் தவறு எதுவுமில்லை.

3)மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

‘உமர் (ரழி) அவர்கள் காலத்தில் ரமழான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர்’ (அறிவிப்பவர்: யஸீத் பின் ரூமான், நூல்: பைஹகீ௪802, முஅத்தா௩80)


மறுப்பவர்கள் பதில்: குறித்த செய்தியை அறிவிக்க கூடிய ‘யஸீத் பின் ரூமான்’ என்பவர் உமர் (ரழி) அவர்களது காலத்தில் பிறந்தவர் கிடையாது. எனவே, இச் செய்தி ஆதாரபூர்வமற்றது.

நமது பதில்:

இங்கு சகோதரரே மாபெரும் உண்மை மறைந்து இருக்கிறது. யஸித் இப்னு ருமான் அவர்களும், ஸாயிப் இப்னு யஸித் அவர்களும் ஒரே காலத்தில் வாழ்ந்தவரவார்கள். யாஸித் இப்னு யஸித் அவர்கள் காலத்தில் வாழ்ந்த யஸித் இப்னு ரூமான் அவர்கள், அமீருல் முஃமீனின் உமர்(ரலி) காலத்தில் தராவிஹ் இருபது ரக்கத்துகள் நடந்திருப்பது உண்மை, ஏனென்றால் யாஸிப் பின் யஸித் அவர்களும் 20 ரக்கத்துகள் அறிவிக்கிறார்கள், அதே சமயத்தில் யஸித் இப்னு ருமான் அவர்களும் 20 ரக்கத்துகள் என இரண்டு ஒரே கருத்தில் அறிவிக்கிறார்கள்.

யஸித் இப்னு ரூமான் என்பவர் நம்பிக்கையாளர், நேர்மையானவர், குறை கூற பெறதாவர் என்று ஹதிஸ் கலை வல்லுநர்களான இமாம் நஸயி(ரஹ்) அவர்களும், இமாம் இப்னு முயின்(ரஹ்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் ஆசிரியர் யஸித் இப்னு ரூமான் அவர்கள் ஆவார்கள்.(ரிஜாலில் முஅத்தா பக்கம் 42)

இவர்கள் இவ்விருவரும் சேர்ந்து ஒரு மணி மொழியை அறிவிப்பார்களானால் அது ஏற்க கூடியது என அனைத்து ஹதிஸ்கலை வல்லுநர்களில் ஒரு மித்த கருத்தாகும்.நபி(ஸல்) அவர்கள் 3 நாட்கள் மட்டும் தொழுகை நடத்தினார்கள்:


ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள், நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள்.

"நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!" என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி)


எந்த எந்த நாட்கள்:நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் நோன்பு இருந்தோம், அம்மாத்தத்தில் ஏழு நாட்கள் எஞ்சி இருக்கும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை. அவ்விரவில்(24ம் இரவில்) மூன்றில் ஒரு பகுதி முடியும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். ஆறு நாட்கள் மீதம் இருக்கும் போது(25ம் இரவில்)எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை. ஐந்து நாட்கள் மீதம் இருக்கும் போது(26ம் இரவில்) பாதி இரவு கழிவும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், அப்போது நாங்கள் அல்லாவின் தூதரே! அவ்விரவில் மீதமுள்ள நேரத்தில் எங்களுக்கு உபரியான வணக்கத்தை நடத்தலாமே? என்றோம் அதற்கவர்கள் யார் இமாம் தொழுகையை முடிக்கும் வரை இமாமுடன் தொழுகிறாரோ அவர் பாதி இரவு வணங்கியதாக பதிவு செய்யப்படுகினறது. என்று கூறினார்கள் மீதமிருக்கும் போது(27ம் இரவில்) எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், தம் குடும்பத்தினரயும் மனைவிமாரையும் அழைத்தார்கள் வெற்றி எங்களுக்கு அஞ்சுமளவுக்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், என அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அப்போது வெற்றி என்பது என்ன? என்று கேட்டேன் அதற்கவர் ஸஹர் செய்தல் என விடையளித்தார்கள்.இதை ஜுபைர் பின் நுபைர் அறிவிக்கிறார்கள்(நஸயி,இப்னுமஜா,திர்மதி,அஹ்மத்,தாரிமி,அபுதாவுத்)எவ்வாறு என்னை தொழுகை கண்டீர்களோ அதுபோல தொழுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், எனவே மறுக்கும் சகோதரர் 23ம், 25ம், 27ம் இரவில் மட்டும் கூட்டாக தொழ வேண்டும், அப்படி இல்லை என்றால் 30 நாட்கள் பள்ளியில் ஜமாத்தாக தொழுகை நடத்தினார்கள் என ஆதரத்தை நிருபிக்க வேண்டும்.நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இரவு தொழுகையை சகபாக்கள் எப்படி தொழுதார்கள்:

ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!" என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.(புகாரி)ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும் இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது!" என்று இமாம் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்(புகாரி)


நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நபி(ஸல்) மரணிக்கும் வரை மக்கள் தனிதனியாகவே தொழுது வந்தனர், எனவே மறுக்கும் சகோதரர்கள் தனிதனியே தொழ வேண்டும்,

உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஜமாத்தாக தராவிஹ் நடத்தபட்டது:

நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நல்லதாகிவிட்டது.எந்த தொழுகைவிட்டு நீங்கள் உறங்கின்றீர்களோ அந்த தொழுகை சிறந்த தொழுகையே! என்று உமர்(ரலி) கூறினார்கள் என அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்(புகாரி,மாலிக் முஅத்தா) )

உமர்(ரலி) பின்பற்ற வேண்டும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்த பொன் வார்த்தைகள்:

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றி விட்டு, ஒரு சிறப்பான பிரசங்கம் நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டு கண்கள் நீரைச் சொரிந்தன; உள்ளங்கள் உருகின; அப்பொது யாரசூலுல்லாஹ்! இது விடை பெறுபவரின் பிரசங்கம் போன்றல்லவா இருக்கிறது. எனவே , எங்களுக்கு இறுதி உபதேசம் செய்யுங்கள் என்று நபித் தோழர்கள் சொன்னார்கள். அப்போது கருப்பு இனத்தைத் சார்ந்த ஒருவர் உங்களுக்குத் தலைவராக வந்தாலும் அவருக்கு நீங்கள் வழிப்படுங்கள். உங்களில் எனக்குப் பின்னால் யார் வாழ்கிறார்களோ அவர்கள் சமுதாயத்தில் அதிகமான கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்கள். அப்போது என்னுடைய வழிமுறையையும், எனது வழிமுறையை எடுத்து நடந்து நேர்வழி சென்ற கலீபாக்களின் வழி முறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அந்த வழிமுறைகைளை நீங்கள் உங்கள் கடவாய்ப் பற்களால் கவ்விக் பிடித்துக் கொள்ளுங்கள். மார்க்கத்தில் புதிதாக எதையும் உண்டு பண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக மார்க்கத்தில் புதிதாக உண்டு பண்ணப்படுபவை யாவும் வழி கேடுகளேயாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இர்பாள் பின் சாரியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவுத்,அஹமத்)

உமர்(ரலி) அவர்களின் நாவில் அல்லா குடி இருக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(திர்மதி)

என் அருமை தோழர்களே நான் எவ்வளவு நாட்கள் நான் உங்களுடன் இருக்க போகிறேன் என்பது எனக்கு தெரியாது, எனக்கு பிறகு அபூபக்கர்(ரலி) அவர்களையும், உமர்(ரலி) அவர்களையும் பின்பற்றுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினதாக ஹூதைபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(மிஷ்காத், அஹ்மத்,திர்மதி,இப்னுமஜா).

எனக்கு பிறகு அல்லா ஒரு நபியை இந்த உலகுக்கு அனுப்ப நாடினால் அது உமராக(ரலி) அவர்களாக தான் இருப்பார்கள், ஆனால் அல்லா என்னை இறுதி நபியாக தேர்ந்தெடுத்துவிட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(நபிமொழியின் சுருக்கம்)

இதுபோல் பல சிறப்புகளை சொல்லி கொண்டே போனாலும் அவர்கள் மார்க்கத்திற்கு செய்த அருட்கொடைகள்கள் சொல்ல வார்த்தைகளுகள் நம்மிடத்தில் இல்லை, அல்லா அவர்களை அந்தஸ்துகளையும், அவர்களின் கபுருகளையும் ஒளிமயமாக்குவனாக! ஆமின்.

3) மறுப்பவர்கள் வைக்கும் மிகப் பெரிய ஆதாரம்.

//நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'என் கண் தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை' என்று பதிலளித்தார்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) புகாரி 3569 முஸ்லிம் 1343 //

மேல் உள்ள நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி தஹஜ்ஜதை தான் குறிக்கின்றது தவிர, தராவிஹ் அல்ல.

அல்லா திருமறையில் தஹஜ்ஜத்ப் பற்றி குறிப்பிடுக்கின்றான்.

இன்னும் இரவில் ஒரு சிறு பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக, இதன் பாக்கியத்தினால் உம்முடைய இறைவன் மகாமம் மஹ்முதா என்றும் புகழ் பெற்ற தலத்தில் உம்மை எழுப்ப போதும்.(17:79),

இன்னும் இரவில் அவனுக்கு ஸுஜுது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் தஸ்பிஹ் செய்விராக(76:26)

இங்கு தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக என்பது ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களையும் குறிக்கும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒரு மித்த கருத்து ஆகும்.

மேலும் தஹஜ்ஜத் பற்றி சிறப்புகள் பற்றி புகாரி,முஸ்லிம்,திர்மதி,அபுதாவுத்,இப்னுமஜா,நஸயி,அஹ்மத், மாலிக் மூஅததா, உலகத்தில் உள்ள அனைத்து இமாம்களின் கித்தாப்புகளிலும் நபி(ஸல்) அத்தொழுகையின் சிறப்பை பற்றி நன்மையின் அளவையும், சிறப்பை பற்றி கூறினதை பதிவு செய்யாத இமாம்கள் இல்லை என்று கூட சொல்லாம்.

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் ண் காரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினாதாக என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி)


அல்லா தஹஜ்ஜத் சிறப்பை பற்றி தெளிவாக கூறுகின்றான், ஆனால் அல்லாவும் தஹஜ்ஜத் தொழுங்கள் என்று சொல்கின்றான், அதே போல் நபி(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகை மக்களுக்கு ஊக்கப்படுத்தினார்கள் என்பது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட விசயம்.

இப்போது நன்கு கவனிக்க வேண்டியவை,

அல்லாவும், ரஸீல்(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகையை தொழுகும் மாறு கூறி இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் ரமலானில் ஜமாத்தாக தொழுகை நடத்தின பிறகு

ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள். (புகாரி)

3 நாட்கள் தொழுகையை பற்றி தான் இங்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் தவிர, தஹஜ்ஜதைப் பற்றி குறிப்பிடவில்லை, ஏனென்றால் தஹஜ்ஜத் தொழுது வாருங்கள், அல்லாவுடைய அருள் தஹஜ்ஜதில் தான் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகைப் பற்றி தொழுகை ஏவுவனதை தெள்ளத் தெளிவாக கூறி இருக்கும் போது பிறகு ஏன் இந்த தொழுகை உங்கள் மீது கடமையாகிவிடும் என அஞ்சினார்கள்??.சிந்திப்பவர்களுக்கு விளக்கம் கிடைக்கும்.