செவ்வாய், 20 அக்டோபர், 2009

அல்லாவின் வேதமான திருகுரானை உளுவின்றி தொடலாமா?தொடக்கூடாதா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹீ அனைத்தும் முஸ்லிம்சகோதரர்களுக்கும்,
அல்லாவின் வேதமான திருகுரானை உளுவின்றி தொடலாமா?தொடக்கூடாதா? என்று இன்றைய மார்க்க அறிஞர்களுகளுக்கிடைய கருத்து வேறுபாடு இருந்து கொண்டு இருக்கிறது.. ஒரு சாரர் சம்பந்தமாக இதில் வரும் அறிவிப்பாளர்களை வைத்துஇது பலகினமானது என தள்ளுபடி செய்கின்றனர்.. ஆனால் இதில் வரும்அறிவிப்பாளர்கள் சரியானவர்கள் தான் என மற்ற வழிகளில் நிருபிக்கப்பட்டுள்ளது.

மறுக்கும் சாரர்களின் வைக்கும் ஆதாரம்:1.
சுத்தமானவர்களை தவிர, மற்ற எவரும் அதை தொடமாட்டார்கள்.(56:79)அதை என்பது லவ்ஹூல் மஹ்பூல் என்றும், சுத்தமானவர்கள் என்பவர்கள்அமரர்கள். ஆகவே இது மனிதர்களுக்கு உரியதல்ல, அமரர்களுக்கு சம்பந்தபட்டது,எனவே குரானை ஒளூவின்றி தொடலாம் என வாதடுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு எழுதிய கடிதமொன்றில் 'குர்ஆனைப்தூய்மையானவர்களைத் தவிர மற்றெவரும் தொடமாட்டார்' என்றுஎழுதியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூபக்ருபின் முஹம்மதுபின் அம்ரு பின்ஹஜ்மு (ரலி). மேற்காணும் ஆயத்தில் இதனைத் தொடமாட்டார்கள் எனும் வாசகம்இருக்கிறது. இதனை என்று சொல்லப்பட்டிருப்பது "பாதுகாக்கப்பட்ட ஏட்டை"என்பதுதான் பொருள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் திருக்குர்ஆன்விரிவுரையாளர்களும் கூறுகிறார்கள். அடுத்து நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் 'குர்ஆனைப்பரிசுத்தமானவரின்றி மற்றெவரும் தொடமாட்டார்' என்று எழுதியிருப்பதால்நபி (ஸல்) அவர்களே பாதுகாக்கப்பட்ட ஏட்டை என்று பொருட்கொள்ளாது குர்ஆனைஎன்று தானே பொருள் கொண்டிருக்கிறார்கள் எனலாம். அப்படி என்றால் அவர்கள்தொடவேண்டாம் என்று கூறாது "தொடமாட்டார்" என்றுதானேசொல்லியிருக்கிறார்கள். அவ்வாறிருக்க தொடமாட்டார் என்னும் வார்த்தைக்குதொட வேண்டாம் என்று பொருட்கொள்வது எங்கனம் பொருந்தும்? அவ்வாறே ஒரு வாதத்திற்காக அதை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் அந்தவாசகம் குர்ஆனைப் தூய்மையானவர்தான் தொடவேண்டும் என்பதைப் பொதுவாகக்காட்டுகிறதே தவிர ஒளுவில்லாதவர் அதைத் தொடக்கூடாது என்று குறிப்பிட்டுக்காட்டுவதாக அது அமைந்திருக்கவில்லை. ஏனெனில் தூய்மையானவர்(சுத்தம்) என்ற வார்த்தை பல கருத்துக்களைக்கொண்ட பொதுச் சொல்லாக அமைந்திருக்கிறது. அதற்கு [1] ஒளு செய்துசுத்தமானவர் [2] கையை மட்டும் களுவி சுத்தமானவர் [3] குளித்துசுத்தமானவர் [4] ஷிர்க் [இணைவைத்தல்] என்னும் அசுத்தத்தை அகற்றி முஸ்லிம்என்ற வகையில் சுத்தமானவர் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் கொள்ளஇடமிருப்பதால் ஒளு செய்து தூய்மையானவர் என்று மட்டும் பொருள்கொள்வதற்கு தக்க ஆதாரம் குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ இருந்தாக வேண்டும்.அவ்வாறிருப்பதாக தெரியவில்லை. அல்லாஹ்வும், ரசூலும் பொதுவாகசொல்லியிருக்கும் ஒரு வார்த்தைக்கு அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோஅதற்கு குறிப்பிட்டு விளக்கம் தராதிருக்கும்பொழுது , தக்க ஆதாரமின்றிஅதற்கு இதுதான் விளக்கம் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு யாருக்குஅதிகாரம் இருக்கிறது? என்று சொல்லி இதை உளுவை பற்றி குறிக்கவில்லை என்றுஹதிஸை நிராகரிக்கறார்கள் ஒரு பகுதியினர்..சுத்தம் என்பதற்கான பல ஹதிஸ்கள் வருவதால் அனைத்தும் உளு, குளிப்பு, எனஇருவகையில் ஹதிஸ்களில் வந்தாலும் இரண்டுமே சுத்ததை பற்றி தான்குறிப்பிடுகின்றது. எது வைத்தாலும் இரண்டுமேஒரு முஸ்லிம் இருந்தால் மட்டுமே குரானை தொட முடியும் என்பதை விளங்கவேண்டும் என்பதை தெளிவாக விளங்களாம்.

தெளிவான விளக்கம்:

சகாபாக்கள்(ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறை படித்தால் குரானை தொடுதல்பற்றியான சுத்தம் என்பதற்கான விளக்கம் கிடைக்கும்:
நான் ஸஅது பின் அவக்காஸ்(ரலி) அவர்கள் முன், குரானை படித்து கொண்டுஇருந்தேன், அப்போது நான் சொரிந்து கொண்டேன். அது சமயம் என்னை பார்த்துஸஅது(ரலி) அவர்கள் ,உனது ஆண்குறியை தொட்டிருக்கலாம், அவ்வாறு தானே? என்றுகேட்க அதற்கு நான் (முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)) ஆம்என்றேன். நீ எழுந்து உளு செய் என்றனர். நான் எழுந்து உளு செய்து விட்டு,அதன் பின்னர் திரும்பினேன் என் முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(மாலிக் மூஅத்தா(ரஹ்), பைஹகி(ரஹ்))இது சரியான தொடராகும், இதை சரியான தொடர் என்று தக்ரிப் என்ற நூலில் இமாம்நவவி(ரஹ்) அவர்களும், அதன் விளக்க உரை நூலில் இமாம் அஸ்ஸுயத்தி(ரஹ்)அவர்களும் சரியானது என முடிவு செய்து இருக்கின்றனர்.யார் வேண்டுமானலும் குரானை தொடலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றானர். ஆம்யார்வேண்டுமான்லும் தொடலாம் ஆனால் அவர் உளுவுடன் மற்றும் குளிப்புகடமை ஆகாதவராய் இருக்க வேண்டும்.. ஒரு சிலர் காபிர்கள்(இணைவைத்து வணங்ககூடியவர்கள்) குரானை தொடலாம் என்கின்றனர், தொடலாம் ஆனால் அவர் குளிப்புகடமை ஆகாதவராய் இருக்க வேண்டும்.

உமர்(ரலி) வாழ்க்கை வரலாறு:
உமர்(ரலி) இஸ்லாத்தை ஏற்கும் முன் தன்சகோதரிடம் நீ படித்த அந்த திரு குரானை கொடு என்று கேட்க அதற்கு உமர்(ரலி)அவர்களை நோக்கி அவர் சகோதரி நீங்கள் தூய்மையாகதவரை நீங்கள் இத்திருகுரானைதொடமுடியாது,குளித்துவிட்டு வாருங்கள் என சகோதரி கூற பிறகு உமர்(ரலி)அவர்கள் குளித்ததற்கு பின் அவருக்கு திருமறையின் பாகங்கள்கொடுக்கப்பட்டன.இதிலிருந்து திருமறை திருகுரான் ஒரு சில பாகங்கள் கொடுக்கும் போதே உமர்(ரலி) அவர்களின் சகோதரி உமர்(ரலி) தூய்மையாகும் வரை தரவில்லை..எனவே ஒரு முஸ்லிம் யாருக்கவது ஒரு சிறு பகுதி திருகுரானின் ஒரு சிலவசனத்தை கொடுத்தாலும் அவர் குளிப்பு கடமை ஆகாதவராய் வேண்டும் என்பதுசகபாக்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.
அல்லாவும் திருமறையில் இணைவத்து வணங்குபவர்களை பற்றிஈமான் கொண்டவர்களே! நிச்சியமாக இணைவைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே(அல்குரான் 9:28)
என்று அல்லா நமக்கு அவர்களை பற்றி அறிவிக்கின்றான்.அப்படி அல்லா அவ்வாறு கூறும் போது அவர்களுக்கு எப்படி இத்திரு வேததத்தைகொடுக்க முடியும். எனவே தூய்மையானவர்களைத் தவிர யாரும் இக்குரானை தொட வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

மறுக்கும் சாரர்களின் வைக்கும் ஆதாரம்:

2. சுத்தம்(உளூவு) இல்லாதவர்கள் குரானை தொட வேண்டாம். தொடக்கூடாது எனநிச்சியமாக நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு கடிதம் எழுதினார்கள். எனஅபூபக்ரு பின் முகம்மது பின் ஹஜ்ம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(தப்ரானி(ரஹ்))
3.யமன் தேசவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள்,அக்கடித்தில் சுத்தமில்லாதவரை தவிர,(மற்றெவரும்), குரானை தொடமாட்டார்கள்.(தொடக்கூடாது) என்று இருந்தது என அம்ருபின் ஹஜ்ம்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்(தப்ரானி(ரஹ்))
4)அம்ர் இப்னு ஹஸ்கி(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எழுதியகடிதத்தில் தூய்மையானவர்களை தவிர வேறெவரும் திருகுரானை தொடவேண்டாம் எனஎழுதி இருந்தார்கள் என அப்துல்லா இப்னு அபீபக்கர்(ரலி) எனஅறிவிக்கிறார்கள்(நஸயீ(ரஹ்),இப்னுஹிப்பான்(ரஹ்))மேற்கூறப்பட்டுள்ள ஹதிஸ் முர்ஸல் வகையை சார்ந்தது என்றும், அதில் வரும்அறிவிப்பாளர்களில் சுலைமான் பின் அர்க்கம் எனபவர் பலவினமானவர் என்பதால்இந்த ஹதிஸ் ஏற்க முடியாது எனவே குரானை உளுவின்றி தொடலாம் என்கின்றனர்.

தெளிவான விளக்கம்:

மேற்குறிப்பிட்டுள்ள ஹதிஸ்களில் சுலைமன் பின் அர்க்கம் அவர்கள் இடம்பெறுகிறார்கள், ஆனால் அதே ஹதிஸ் சுலைமான் பின் அர்க்கம் வழியே அறிவிக்கமால் அல்கவ்லானி எனறழக்கப்படும் சுலைமான் பின் தாவுது அவர்கள்அம்ரு பின் ஹஜ்ம்(ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படுள்ளது. அதையும்தொடலாம் சகோதரர்கள் பார்க்க வேண்டும்.

ஹதிஸ் தொடர்:
நபி(ஸல்)--->அம்ரு பின் ஹஜ்ம்(ரலி)--->சுலைமான் பின்தாவுது(ரஹ்)--->அபுல் ஹஸன் முகம்மது பின் அஹ்மது அல் ஜஃபரானி(ரஹ்)(ஃபவாயீத்அபீஷீஐபு)

மேலும் அஹ்மது பின் ஹன்பல்(ரஹ்) அவர்களிடம் இந்த ஹதிஸ் கேட்கப்பட்டது, அதற்குஅவர்கள் இந்த ஹதிஸ் சரியாக இருக்குமேன் நான் ஆதரவு வைக்கிறேன் என்பதாகக்கூற, பகவி(ரஹ்) கூறியாதாகவும்,சுலைமான் பின் தாவுது(ரஹ்) அறிவிக்கிறார்கள்.

சுலைமான் பின் தாவுது(ரஹ்) பற்றி ஹதிஸ்கலை வல்லுனர்கள்:

சுலைமான் பின் தாவுது ஹதிஸ் கலை வல்லுனர்களிடத்தில் மிகநம்பிக்கைகுரியவர், எனவே இந்த ஹதிஸ் ஆதரபூர்வமானது, ஏற்கதக்கதாகும்.-அல்பானி(ரஹ்)
மேலும் அந்த ஹதிஸ் பற்றி இன்னும் பல இமாம்கள் அறிவித்துள்ளார்கள்.

1.யமன் தேசவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள்,அக்கடித்தில் சுத்தமில்லாதவரை தவிர,(மற்றெவரும்), குரானை தொடமாட்டார்கள்.(தொடக்கூடாது) என்று இருந்தது அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.
ஹதிஸ் நூல்கள்:
1.முஃஜமுஸ்ஸகீர்(ரஹ்) பக்கம் 239
2.தப்ரானி(ரஹ்) அவர்கள் அல்கபரில் பாகம் 3-ல் 194/2
3.பைஹகீ(ரஹ்) 1/88
4.இப்னு அஸாகிர்(ரஹ்) 13ம் பாகம் 214/2
அப்துல்லா பின் உமர்(ரலி)வழியாக வரும் ஹதிஸ்களில் சயிது பின் முகம்மதுவழியில் இதே வாசகம் கொண்டு நபி(ஸல்) அவர்கள் வரை அறிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த ஹதிஸ் ஸாலிமிடம்(ரலி) செவியுற்றதாக அவர் தனது தந்தை கூறியதாகஇடம் பெற்றுள்ளது.இந்த ஹதிஸ் இமாம் அஹ்மது அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார்கள் என இமாம் அஸ்ரம்(ரஹ்) கூறுகிறார்கள்.

2. நபி(ஸல்) அவர்கள் எமன் நாட்டிற்கு என்னை அனுப்பிய போது நீர்சுத்தமானவராக அன்றி, குரானை தொட வேண்டாம் எனக் கூறினார்கள் எனமதருல்வுர்ராக் ஹஸ்ஸான் பின் பிலால்(ரலி) அறிவிக்கிறார்கள்.(ஹாகிம்(ரஹ்))இமாம் ஹாகிம்(ரஹ்) அவர்கள் இந்த ஹதிஸ் சரியான தொடர் எனக் கூற, இமாம் தஹபி(ரஹ்) அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார்கள்,

இதில் வரும் சுத்ததற்கு(தூய்மை)மற்றொரு வழியாக நபி(ஸல்) விளக்கம்:

1.தூய்மையின்றி எந்த தொழுகையும், மோசடி பொருட்களிலிருந்து(செய்யப்படும்)எந்த தர்மமும்(அல்லாவினால்) ஏற்கப்படாது என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(திர்மதி(ரஹ்))தொழுகையின் திறவு கோல் சுத்தமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்),அபூதாவூத்(ரஹ்),அஹ்மத்(ரஹ்),இப்னுமஜா(ரஹ்))

2.தூய்மைமூலம் தவிர எந்த தொழுகையும் ஏற்கப்படாது என (நபி(ஸல்) அவர்கள்அருளினார்கள்) என அபூஹீரைரா(ரலி) மற்றும் அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்(முஸ்லிம்(ரஹ்),அபூதாவுத்(ரஹ்),நஸயி(ரஹ்),இப்னுமஜா(ரஹ்),அஹ்மத்(ரஹ்))

இதில் தூய்மை என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்,
இதில் தூய்மைஎன்பது உளு மற்றும் குளிப்பு இரண்டையும் குறிக்கும், அதே போல் தான் நபி(ஸல்) தூய்மைஇனறி குரானை தொடாதே என்பதற்கும், உளு மற்றும் குளிப்புஇரண்டையும் குறிக்கும்.
இதில் வரும் சுத்ததற்கு சகாபாக்களின்(ரலி) வழியாக விளக்கம்:

நான் ஸஅது பின் அவக்காஸ்(ரலி) அவர்கள் முன், குரானை படித்து கொண்டுஇருந்தேன், அப்போது நான் சொரிந்து கொண்டேன். அது சமயம் என்னை பார்த்துஸஅது(ரலி) அவர்கள் ,உனது ஆண்குறியை தொட்டிருக்கலாம், அவ்வாறு தானே? என்றுகேட்க அதற்கு நான் (முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)) ஆம்என்றேன். நீ எழுந்து உளு செய் என்றனர். நான் எழுந்து உளு செய்து விட்டு,அதன் பின்னர் திரும்பினேன் என் முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(மாலிக் மூஅத்தா(ரஹ்), பைஹகி(ரஹ்))

ஆணுருப்பை தொட்டால் உளு நீங்கும்:

யார் தமது மர்ம உறுப்பை தொடுகிறாரோ அவர் உளு செய்யும் வரை தொழக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறுனார்கள் என புஸ்ரா பின்த் ஸஃப்வான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(திர்மதி(ரஹ்),அஹ்மத்(ரஹ்),அபூதாவுத்(ரஹ்),இப்னுமஜா(ரஹ்),நஸயி(ரஹ்),முஅத்தா(ரஹ்),இப்னுஹிப்பான்(ரஹ்),இப்னுகுஸைமா(ரஹ்),ஹாகிம்(ரஹ்))

இதில் சுத்ததற்குகான விளக்கத்தை தெள்ள தெளிவாக சகாபாக்கள்(ரலி) அவர்கள் விளக்கம் அறிந்து வைத்ததின் காரணமாக தான் சகபாக்கள்(ரலி) அவர்கள் மற்றொருசகாபிகளை(ரலி) பார்த்து நீ உளு செய் என்று சொன்னார்கள்.

மாதவிடாய் ஏற்பட்டவர்களும்,குளிப்பு கடமையானவர்களும் குரானை எதனையும்ஓதலாகாது:

மாதவிடாய் ஏற்பட்டவர்களும்,குளிப்பு கடமையானவர்களும் குரானை எதனையும்ஓதலாகாது என நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள் என் இப்னுஉமர்(ரலி)அவர்கள்அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்),அபுதாவுத்(ரஹ்),இப்னுமஜா(ரஹ்))

நபித்தோழர்கள்,தாபின்கள் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரில் அநேகரின்கூற்றும்,ஸூப்யான்அஸ் ஸவ்ரீ(ரஹ்),இப்னுல் முபாரக்(ரஹ்), ஷாஃபீ(ரஹ்),அஹமத்(ரஹ்),இஸ்ஹாக்(ரஹ்)ஆகியோரின் கருத்தும் இதுவாகும்.

ஒரு வசனத்தின் ஒரு பகுதி அல்லதுஒருஎழுத்து தவிர மாதவிடாய்காரிகளும்,குளிப்பு கடமையானவர்களும் ஓதக்கூடாதுஎன்கின்றனர், ஆயினும் தஸ்பிஹ்,தஹ்லில் போன்றவற்றிற்கு அனுமதி உண்டுஎன்கின்றனர்.மேலும் இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களின் மஸாயில்கள் என்ற நூலில் 5 ம்பக்கத்தில் அவரின் நெருங்கிய நண்பர் அஸ்ஸூயூத்தி(ரஹ்) அவர்கள் இமாம்அஹமது(ரஹ்), அவர்களிடம் உளுவின்றி ஒருவர் ஓதலாமா? என்று கேட்டேன். அதற்குஅவர்கள் ஆம் என்றார்கள், ஆயினும் உளூ இல்லாமல் குரானை தொட்டு ஓதக்கூடாதுஎன்றனர்.

நபி(ஸல்) அவர்கள் குளிப்பு கடமையாகாமிலிருக்கும் போது மட்டும் தான்திருகுரானை ஒதுவார்கள்:

குளிப்புகடமையாகாமலிருக்கும் போது எல்லா நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு குரானை ஓதி காட்டுவார்கள் என அலி(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்),நஸயி(ரஹ்))

நபித்தோழர்கள்,தாபின்கள் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரில் அநேகரின்கூற்றும்,ஸூப்யான் அஸ் ஸவ்ரீ(ரஹ்),இப்னுல் முபாரக்(ரஹ்), ஷாஃபீஅஹமத்(ரஹ்),இஸ்ஹாக்ஆகியோரின் கருத்தும் இதுவாகும்


உமர்(ரலி) வாழ்க்கை வரலாற்றில் ஒர் பாடம்:

கப்பாப் (ரலி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனதுஏட்டிலுள்ள தாஹா எனத் தொடங்கும் அத்தியாயம் தாஹாவின் வசனங்களை கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் வருவதை அறிந்த கப்பாப் (ரலி)வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் சகோதரியும் அந்த ஏட்டை மறைத்துவிட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரலி)கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார். வீட்டினுள் நுழைந்த உமர்,உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன? என்று கேட்டதற்குநாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை என்றுஅவ்விருவரும் கூறினார்கள்.அப்போது உமர் நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா? என்று கேட்டார்.அதற்கு அவரது மச்சான் உமரே! சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிரவேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?என்று கேட்க,உமர் கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து அவரை பலமாகத்தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரைவிலக்கினார். உமர் கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரதுமுகத்தை ரத்தக் காயப்படுத்தினார்.கோபம் கொண்ட உமரின் சகோதரி,உமது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா? (அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும்இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சிகூறுகிறேன் என்று உரக்கக் கூறினார்.தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் நிராசை அடைந்தார். தனதுசகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும்,வெட்கமும் ஏற்பட்டது.உங்களிடமுள்ள இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.அதற்கு அவரது சகோதரி நீ அசுத்தமானவர். நீர் எழுந்து குளித்து வாரும்என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார்.பிறகு குளித்து வந்தவுடன் திருமறையை கையிலேந்திபிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம் (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகியஅல்லாஹ்வின் பெயரால்) என்று ஓதியவுடன் ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்என்று கூறி, தொடர்ந்து தாஹா என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதிமுடித்துவிட்டு இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்!எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்! என்று கேட்டுக் கொண்டார்.உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரலி) வெளியேறி வந்து,உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு, அல்லாஹ்வே! உமர்அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு! என்று நபி (ஸல்)அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்தபிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான்உண்மையில் நம்புகிறேன் என்றுரைத்தார்.(முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கைவரலாறு)

மறுக்கும் சாரர்களின் வைக்கும் ஆதாரம்:

'நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில்நின்றிருந்தபோது நபி(ஸல்) என்னைச் சந்தித்தார்கள். அப்போது, நான் நழுவிவிட்டேன். குளித்துவிட்டுப் பின்னர் வந்தேன். நபி(ஸல்) அவர்கள் 'அபூஹுரைரா! எங்கு நழுவி விட்டீர்?' என்று கேட்டதற்கு, 'குளிப்புக்கடமையாகியிருந்தேன்; எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதைவெறுத்தேன்' என்றேன். அப்போது 'ஸுப்ஹானல்லாஹ்! ஒரு முஸ்லிம் அசுத்தமாகவேமாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தெளிவான விளக்கம்:

1.தூய்மையின்றி எந்த தொழுகையும், மோசடி பொருட்களிலிருந்து(செய்யப்படும்)எந்த தர்மமும்(அல்லாவினால்) ஏற்கப்படாது என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(திர்மதி(ரஹ்))

2.நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக்கடமையானவராக இருக்கும்போது உளூச் செய்துவிட்டுத் தூங்கலாம்' என்றுஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.(புகாரி(ரஹ்))

3.சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும்,தொழுகையின் திறவுகோல் உளுவாகும் எனநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்))

குளிப்பு கடமையானவர் உளு செய்யாமல் அல்லது குளிப்பு கடமை நிறைவேற்றாமல் உறங்க சென்றால்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எந்த இல்லத்தில் உருவப்படமோ, நாயோ இருக்கின்றதோ அல்லது குளிப்பு கடமையானவர்கள் இருக்கின்றார்களோ அங்கு வானவர்கள் நுழையமாட்டார்கள் என அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(அபூதாவுத்(ரஹ்),நஸயி(ரஹ்),தாரமி(ரஹ்),அஹ்மத்(ரஹ்))

இங்கு ஒரு செயலை குறிப்பிட்டு கூறுகிறார்கள். எனவே நீங்கள் குளிப்புகடமையாய் இருக்கும் போது ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டான் என எண்ணி உளுசெய்யாமல் உறங்குவீர்களா? முஸ்லிம் அசுத்தமாக மாட்டான் என்று சொல்லிதொழுக முடியுமா? அது போல் தான் தூய்மை இல்லாமல் குரானை தொட வேண்டாம்என்று சொன்னார்கள். அதுவும் ஒரு இபாதத் தான், ஒரு செயல் வெளிப்படையாகவெளிப்படும் போது அது எடுத்து செயல்படுத்துவது தான் ஒரு முஸ்லிமின்கட்டாய கடமையாகும்.நபி(ஸல்) ஒரு செயலை பற்றி கட்டளை இட்டால் அது செய்துதான் ஆக வேண்டும்.
எனவே குர்ஆனை தொடும் போதும், தொட்டு ஓதும் போது உளுவுடன் இருப்போமாக!
அல்லா மிக்க நன்கு அறிந்தவன்


கடையநல்லூர் அக்ஸா.காம் பதித்தவை

1)வாதம்

நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு எழுதிய கடிதமொன்றில் ‘குர்ஆனைப்தூய்மையானவர்களைத் தவிர மற்றெவரும் தொடமாட்டார்’ என்றுஎழுதியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூபக்ருபின் முஹம்மதுபின் அம்ரு பின்ஹஜ்மு (ரலி). மேற்காணும் ஆயத்தில் இதனைத் தொடமாட்டார்கள் எனும் வாசகம்இருக்கிறது. இதனை என்று சொல்லப்பட்டிருப்பது ‘பாதுகாக்கப்பட்ட ஏட்டை’என்பதுதான் பொருள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் திருக்குர்ஆன்விரிவுரையாளர்களும் கூறுகிறார்கள். அடுத்து நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் ‘குர்ஆனைப்பரிசுத்தமானவரின்றி மற்றெவரும் தொடமாட்டார்’ என்று எழுதியிருப்பதால்நபி (ஸல்) அவர்களே பாதுகாக்கப்பட்ட ஏட்டை என்று பொருட்கொள்ளாது குர்ஆனைஎன்று தானே பொருள் கொண்டிருக்கிறார்கள் எனலாம். அப்படி என்றால் அவர்கள்தொடவேண்டாம் என்று கூறாது ‘தொடமாட்டார்’ என்றுதானேசொல்லியிருக்கிறார்கள். அவ்வாறிருக்க தொடமாட்டார் என்னும் வார்த்தைக்குதொட வேண்டாம் என்று பொருட்கொள்வது எங்கனம் பொருந்தும்?

பதில்

நீங்கள் சுட்டிக்காட்டிய செய்தி பலவீனமானதாகும் என்று நாம் நம்முடைய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளோம்.
2) நான் ஸஅது பின் அவக்காஸ்(ரலி) அவர்கள் முன், குரானை படித்து கொண்டுஇருந்தேன், அப்போது நான் சொரிந்து கொண்டேன். அது சமயம் என்னை பார்த்துஸஅது(ரலி) அவர்கள் ,உனது ஆண்குறியை தொட்டிருக்கலாம், அவ்வாறு தானே? என்றுகேட்க அதற்கு நான் (முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)) ஆம்என்றேன். நீ எழுந்து உளு செய் என்றனர். நான் எழுந்து உளு செய்து விட்டு,அதன் பின்னர் திரும்பினேன் என் முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(மாலிக் மூஅத்தா(ரஹ்), பைஹகி(ரஹ்))இது சரியான தொடராகும், இதை சரியான தொடர் என்று தக்ரிப் என்ற நூலில் இமாம்நவவி(ரஹ்) அவர்களும், அதன் விளக்க உரை நூலில் இமாம் அஸ்ஸுயத்தி(ரஹ்)அவர்களும் சரியானது என முடிவு செய்து இருக்கின்றனர்.

பதில்
நீங்கள் குறிப்பிட்ட செய்தி முஅத்தா மா­க் என்ற புத்தகத்தில் 82 வது செயதியாக இடம் பெற்றுள்ளது. என்றாலும் இந்த செய்தி நபி ஸல் அவர்கள் சம்மந்தப்பட்டது அல்ல. ஸஹாபிகளின் கருத்துதான்.
மேலும் ஆன் குறியை தொட்டாள் ஒளு நீங்குமா என்றால் அதுவும் நீங்காது. எனவே இந்த செய்தியை ஆதாரத்திற்காக எடுத்துக் கொள்ள முடியாது.

வாதம்
3) உமர்(ரலி) இஸ்லாத்தை ஏற்கும் முன் தன்சகோதரிடம் நீ படித்த அந்த திரு குரானை கொடு என்று கேட்க அதற்கு உமர்(ரலி)அவர்களை நோக்கி அவர் சகோதரி நீங்கள் தூய்மையாகதவரை நீங்கள் இத்திருகுரானைதொடமுடியாது,குளித்துவிட்டு வாருங்கள் என சகோதரி கூற பிறகு உமர்(ரலி)அவர்கள் குளித்ததற்கு பின் அவருக்கு திருமறையின் பாகங்கள்கொடுக்கப்பட்டன.இதிலிருந்து திருமறை திருகுரான் ஒரு சில பாகங்கள் கொடுக்கும் போதே உமர்(ரலி) அவர்களின் சகோதரி உமர்(ரலி) தூய்மையாகும் வரை தரவில்லை..எனவே ஒரு முஸ்லிம் யாருக்கவது ஒரு சிறு பகுதி திருகுரானின் ஒரு சிலவசனத்தை கொடுத்தாலும் அவர் குளிப்பு கடமை ஆகாதவராய் வேண்டும் என்பதுசகபாக்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.

பதில்
நீங்கள் குறிப்பிடும் செய்தி தாரகுத்னீ 435, பைஹகீ 417 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்செய்தி ஆதாரப்பூர்வமானதா என்பதை இதைப் பதிவு செய்த இமாம் தாரகுத்னீ அவர்களே அச்செய்தியின் கீழ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
(இதில் இடம்பெறும்) அல் காஸிம் பின் உஸ்மான் என்பவர் பலம் வாய்ந்தவர் இல்லை.
மேலும் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இடம்பெறவில்லை. உமர் (ரரி) அவர்களின் சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இந்த செய்தியை மையாமாக வைத்து எடுத்து வைத்த மற்ற உங்களுடைய வாதங்களும் வீழ்ந்துவிடுகின்றன.

அல்லாவும் திருமறையில் இணைவத்து வணங்குபவர்களை பற்றிஈமான் கொண்டவர்களே! நிச்சியமாக இணைவைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே(அல்குரான் 9:28)
என்று அல்லா நமக்கு அவர்களை பற்றி அறிவிக்கின்றான்.அப்படி அல்லா அவ்வாறு கூறும் போது அவர்களுக்கு எப்படி இத்திரு வேததத்தைகொடுக்க முடியும். எனவே தூய்மையானவர்களைத் தவிர யாரும் இக்குரானை தொட வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
சுத்தம்(உளூவு) இல்லாதவர்கள் குரானை தொட வேண்டாம். தொடக்கூடாது எனநிச்சியமாக நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு கடிதம் எழுதினார்கள். எனஅபூபக்ரு பின் முகம்மது பின் ஹஜ்ம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(தப்ரானி(ரஹ்))
3.யமன் தேசவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள்,அக்கடித்தில் சுத்தமில்லாதவரை தவிர,(மற்றெவரும்), குரானை தொடமாட்டார்கள்.(தொடக்கூடாது) என்று இருந்தது என அம்ருபின் ஹஜ்ம்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்(தப்ரானி(ரஹ்))
4)அம்ர் இப்னு ஹஸ்கி(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எழுதியகடிதத்தில் தூய்மையானவர்களை தவிர வேறெவரும் திருகுரானை தொடவேண்டாம் எனஎழுதி இருந்தார்கள் என அப்துல்லா இப்னு அபீபக்கர்(ரலி) எனஅறிவிக்கிறார்கள்(நஸயீ(ரஹ்),இப்னுஹிப்பான்(ரஹ்))மேற்கூறப்பட்டுள்ள ஹதிஸ் முர்ஸல் வகையை சார்ந்தது என்றும், அதில் வரும்அறிவிப்பாளர்களில் சுலைமான் பின் அர்க்கம் எனபவர் பலவினமானவர் என்பதால்இந்த ஹதிஸ் ஏற்க முடியாது எனவே குரானை உளுவின்றி தொடலாம் என்கின்றனர். தெளிவான விளக்கம்:
மேற்குறிப்பிட்டுள்ள ஹதிஸ்களில் சுலைமன் பின் அர்க்கம் அவர்கள் இடம்பெறுகிறார்கள், ஆனால் அதே ஹதிஸ் சுலைமான் பின் அர்க்கம் வழியே அறிவிக்கமால் அல்கவ்லானி எனறழக்கப்படும் சுலைமான் பின் தாவுது அவர்கள்அம்ரு பின் ஹஜ்ம்(ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படுள்ளது. அதையும்தொடலாம் சகோதரர்கள் பார்க்க வேண்டும்.
ஹதிஸ் தொடர்:
நபி(ஸல்)—>அம்ரு பின் ஹஜ்ம்(ரலி)—>சுலைமான் பின்தாவுது(ரஹ்)—>அபுல் ஹஸன் முகம்மது பின் அஹ்மது அல் ஜஃபரானி(ரஹ்)(ஃபவாயீத்அபீஷீஐபு)
மேலும் அஹ்மது பின் ஹன்பல்(ரஹ்) அவர்களிடம் இந்த ஹதிஸ் கேட்கப்பட்டது, அதற்குஅவர்கள் இந்த ஹதிஸ் சரியாக இருக்குமேன் நான் ஆதரவு வைக்கிறேன் என்பதாகக்கூற, பகவி(ரஹ்) கூறியாதாகவும்,சுலைமான் பின் தாவுது(ரஹ்) அறிவிக்கிறார்கள்.
சுலைமான் பின் தாவுது(ரஹ்) பற்றி ஹதிஸ்கலை வல்லுனர்கள்:
சுலைமான் பின் தாவுது ஹதிஸ் கலை வல்லுனர்களிடத்தில் மிகநம்பிக்கைகுரியவர், எனவே இந்த ஹதிஸ் ஆதரபூர்வமானது, ஏற்கதக்கதாகும்.லிஅல்பானி(ரஹ்)
மேலும் அந்த ஹதிஸ் பற்றி இன்னும் பல இமாம்கள் அறிவித்துள்ளார்கள்.
1.யமன் தேசவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள்,அக்கடித்தில் சுத்தமில்லாதவரை தவிர,(மற்றெவரும்), குரானை தொடமாட்டார்கள்.(தொடக்கூடாது) என்று இருந்தது அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.
ஹதிஸ் நூல்கள்:
1.முஃஜமுஸ்ஸகீர்(ரஹ்) பக்கம் 239
2.தப்ரானி(ரஹ்) அவர்கள் அல்கபரில் பாகம் 3லில் 194/2
3.பைஹகீ(ரஹ்) 1/88
4.இப்னு அஸாகிர்(ரஹ்) 13ம் பாகம் 214/2
அப்துல்லா பின் உமர்(ரலி)வழியாக வரும் ஹதிஸ்களில் சயிது பின் முகம்மதுவழியில் இதே வாசகம் கொண்டு நபி(ஸல்) அவர்கள் வரை அறிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த ஹதிஸ் ஸாலிமிடம்(ரலி) செவியுற்றதாக அவர் தனது தந்தை கூறியதாகஇடம் பெற்றுள்ளது.இந்த ஹதிஸ் இமாம் அஹ்மது அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார்கள் என இமாம் அஸ்ரம்(ரஹ்) கூறுகிறார்கள்.
2. நபி(ஸல்) அவர்கள் எமன் நாட்டிற்கு என்னை அனுப்பிய போது நீர்சுத்தமானவராக அன்றி, குரானை தொட வேண்டாம் எனக் கூறினார்கள் எனமதருல்வுர்ராக் ஹஸ்ஸான் பின் பிலால்(ரலி) அறிவிக்கிறார்கள்.(ஹாகிம்(ரஹ்))இமாம் ஹாகிம்(ரஹ்) அவர்கள் இந்த ஹதிஸ் சரியான தொடர் எனக் கூற, இமாம் தஹபி(ரஹ்) அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார்கள்,

பதில்
நீங்கள் குறிப்பிடும் இந்த செய்தி : முஅத்தா 419 இடம் பெற்றுள்ளது. இது பற்றி விமர்சனம் கீழே கொடுக்கப்படுகிறது.
இதே செய்தி அபூதாவூத் அவர்களின் அல்மாரஸீல் என்ற நூரிலும், தாரகுத்னீயிலும், தப்ரானீ மற்றும் பல நூற்களிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெறும் இச்செய்தி முழுமையான அறிவிப்பாளர் வரிசை கொண்ட செய்தி அல்ல! இதில் சில அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். இச்செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பவர் தாபியீ ஆவார். இவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல! இவ்வாறிருக்க அவர் நபி (ஸல்) அவர்கள், அம்ர் பின் ஹஸ்ம் (ரரி)க்கு எழுதிய கடிதத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்க முடியாது. அவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஒன்றோ அல்லது பல அறிவிப்பாளர்களோ விடுபட்டிருக்க வேண்டும். எனவே இவ்வகை செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் விடுபட்டவர்களில் பொய்யர்கள், பலவீனர்கள் இருக்கக் கூடும் என்பதால் இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு தாபியீ, நபி (ஸல்) அவர்கள் தொடர்புடைய செய்தியை அறிவித்தால் அச்செய்திக்கு முர்ஸல் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுவர். எனவே தான் இமாம் அபூதாவூத் அவர்கள் தமது மராஸீல் (முர்ஸலான செய்திகள்) என்ற நூரில் இச்செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். எனவே இச்செய்தியை ஆதாரமாகக் கொண்டு சட்டம் கூற முடியாது.
இதே செய்தி சில நூற்களில் கூடுதலாக இரண்டு அறிவிப்பாளர்கள் இடம் பெற்று தொடர்பு முழுமை பெற்ற அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப் பட்டுள்ளது. எனினும் இச்செய்தியும் பலவீனமானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் வாரிசுரிமைச் சட்டம், சில வழிமுறைகள், இழப்பீடு சட்டங்கள் எழுதப்பட்டிருந்தன. அத்துடன் ‘தூய்மையானவர்களைத் தவிர குர்ஆனைத் தொடக் கூடாது’ என்றும் எழுதப் பட்டிருந்தது.
அறிவிப்பவர் : அம்ர் பின் ஹஸ்ம் (ரரி), நூல் : ஷுஅபுல் ஈமான் (பைஹகீ)
இதே செய்தி தாரமீ, தாரகுத்னீ ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. அனைத்து நூற்களிலும் சுலைமான் பின் தாவூத் அல்கவ்லானீ என்பவர் இடம் பெறுகின்றார்.
ஸுஹ்ரியிடமிருந்து இவரும், இவரிடமிருந்து யஹ்யா பின் ஹம்சாவும் அறிவிக்கும் இந்த சுலைமான் பின் தாவூத் என்பவரைப் பற்றி யஹ்யா பின் முயீனிடம் கேட்கப்பட்ட போது, ‘இவர் ஒரு பொருட்டாகவே கருதப்பட மாட்டார்’ என்று கூறினார்கள்.
(நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்: 4, பக்கம்: 110)
(தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்ற முர்ஸலான) இச்செய்தி முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் அது ஆதாரப்பூர்வமானது அல்ல. (நூல்: அல்மராஸீல், பாகம் 1, பக்கம் 122)
எனவே அம்ர் பின் ஹஸ்ம் (ரரி) வழியாக அறிவிக்கப் படுவதில் முர்ஸல் என்ற தரத்தில் அறிவிக்கப் படுவதே சரியானதாகும். இச்செய்தியை ஆதாரமாகக் கொண்டு குர்ஆனை தூய்மையின்றி தொடக்கூடாது என்று வாதிட முடியாது.
தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரரி), நூல் : தப்ரானீ ஸகீர் லி கபீர், தாரகுத்னீ
இச்செய்தியும் ஆதாரப்பூர்வமானது இல்லை. இதில் சுலைமான் பின் மூஸா என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.
சுலைமான் பின் மூஸா என்பவர் ஹதீஸ் துறையில் பலமானவர் இல்லை என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் 1, பக்கம் 49)
இவரிடத்தில் பல மறுக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன என்று இமாம் புகாரி குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் 1, பக்கம் 35)
சுலைமான் பின் மூஸா என்பவரைப் பற்றி குறை கூறப்பட்டுள்ளது என்று அலீ இப்னுல் மதீனீ குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவுல் உகைலீ, பாகம் 2, பக்கம் 140)
சுலைமான் பின் மூஸா என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப் பட்டவர் இவரிடமிருந்து நான் எதையும் அறிவிக்க மாட்டேன். இவர் அறிவித்த பெரும்பான்மையான செய்திகள் மறுக்கப் படவேண்டியவையாகும் என்று புகாரி இமாம் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: இலலுத் திர்மிதீ, பாகம் 1, பக்கம் 257)
மேலும் இதே செய்தியில் அப்துல் மாரிக் பின் அப்துல் அஜீஸ் என்ற இப்னு ஜுரைஜ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் ‘இன்னாரிடமிருந்து நான் கேட்டேன்’, ‘எனக்கு அறிவித்தார்’ என்பது போன்ற தெளிவான வாசகங்களைக் கொண்டு அறிவித்தால் மட்டுமே அவரின் அறிவிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.
இப்னு ஜுரைஜ், ‘எனக்கு இவர் அறிவித்தார்’ என்று கூறினால் அவர் அடுத்தவரிடம் கேட்டதாகும். அவர் சொன்னார் என்று கூறினார் அது மதிப்பற்றதாகும் என்று யஹ்யா பின் ஸயீத் குறிப்பிடுகின்றார்.
இப்னு ஜுரைஜ் என்பவர், ‘எனக்கு இவர் அறிவித்தார்’ என்றோ அல்லது ‘நான் செவியுற்றேன்’ என்றோ கூறினால் அது ஆதாரத்திற்கு ஏற்றதாகும் என்று தஹ்லீ குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 6, பக்கம் 359)
குறிப்பிட்ட இந்தச் செய்தியில் இப்னு ஜுரைஜ் அவர்கள் தமக்கு அடுத்த அறிவிப்பாளரிடமிருந்து, எனக்கு அறிவித்தார், நான் செவியுற்றேன் என்ற தெளிவான வாசகங்கள் இல்லாமல் ‘அன்’ என்ற வார்த்தையைக் கொண்டு அறிவிப்பதால் இச்செய்தி மேலும் பலவீனமடைகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்….. ‘நீ தூய்மையாக இருந்தாலே தவிர குர்ஆனைத் தொடாதே!’
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரரி), நூல் : தப்ரானீ (கபீர்)
இச்செய்தியில் இஸ்மாயில் பின் ராபிவு என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமானவர்.
இஸ்மாயில் பின் ராபிவு ஹதீஸில் விடப்பட வேண்டியவர் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்1, பக்கம் 16)
இஸ்மாயில் பின் ராபிவு என்பவரைப் பற்றி அஹ்மத் பின் ஹன்பல் அவர்களிடம் கேட்டேன். பலவீனமானவர் என்றார்கள்.
இஸ்மாயீல் பின் ராபிவு என்பவர் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று யஹ்யா பின் முயீன் அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
(நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 2, பக்கம் 162)
அஹ்மத், யஹ்யா மற்றும் பெரும் கூட்டத்தினர் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். தாரகுத்னீ மற்றும் சிலர், இவர் ஹதீஸில் விடப்பட வேண்டியவர் என்று கூறியுள்ளார்கள். இவருடைய அனைத்துச் செய்திகளிலும் ஆட்சேபணை உள்ளது என்று இப்னு அதீ குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம் 1, பக்கம் 384)

வாதம்

மாதவிடாய் ஏற்பட்டவர்களும்,குளிப்பு கடமையானவர்களும் குரானை எதனையும்ஓதலாகாது:
மாதவிடாய் ஏற்பட்டவர்களும்,குளிப்பு கடமையானவர்களும் குரானை எதனையும்ஓதலாகாது என நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள் என் இப்னு உமர்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்),அபுதாவுத்(ரஹ்),இப்னுமஜா(ரஹ்))
நபித்தோழர்கள்,தாபின்கள் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரில் அநேகரின்கூற்றும்,ஸூப்யான்அஸ் ஸவ்ரீ(ரஹ்),இப்னுல் முபாரக்(ரஹ்), ஷாஃபீ(ரஹ்),அஹமத்(ரஹ்),இஸ்ஹாக்(ரஹ்)ஆகியோரின் கருத்தும் இதுவாகும்.
ஒரு வசனத்தின் ஒரு பகுதி அல்லதுஒருஎழுத்து தவிர மாதவிடாய்காரிகளும்,குளிப்பு கடமையானவர்களும் ஓதக்கூடாதுஎன்கின்றனர், ஆயினும் தஸ்பிஹ்,தஹ்லில் போன்றவற்றிற்கு அனுமதி உண்டுஎன்கின்றனர்.மேலும் இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களின் மஸாயில்கள் என்ற நூலில் 5 ம்பக்கத்தில் அவரின் நெருங்கிய நண்பர் அஸ்ஸூயூத்தி(ரஹ்) அவர்கள் இமாம்அஹமது(ரஹ்), அவர்களிடம் உளுவின்றி ஒருவர் ஓதலாமா? என்று கேட்டேன். அதற்குஅவர்கள் ஆம் என்றார்கள், ஆயினும் உளூ இல்லாமல் குரானை தொட்டு ஓதக்கூடாதுஎன்றனர்.

பதில்
நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதியில் 121 வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. எனினும் இந்த செய்தியை பதிவு செய்த திர்மிதி அவர்களே பலவீனம் என்று சொல்­யுள்ளாôகள்.
மேலும் நீங்கள் அந்த செய்தியின் கீழ் இடம் பெற்றிருக்கும் அறிஞர்களின் கருத்தை மொழிபெயர்த் நீங்கள் அதற்கும் கீழாக இடம் பெற்றிருக்கும் இமாம் திர்மிதியன் விமர்சனத்தை ஏன் மொழிபெயர்க்கவில்லை?
இப்படி மறைத்துதான் உங்கள் வாதத்தை நீங்கள் நிலைநாட்ட வேண்டுமா?

வாதம்
நபி(ஸல்) அவர்கள் குளிப்பு கடமையாகமிலிருக்கும் போது மட்டும் தான்திருகுரானை ஒதுவார்கள்:
குளிப்புகடமையாகாமலிருக்கும் போது எல்லா நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு குரானை ஓதி காட்டுவார்கள் என அலி(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்),நஸயி(ரஹ்))
நபித்தோழர்கள்,தாபின்கள் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரில் அநேகரின்கூற்றும்,ஸூப்யான் அஸ் ஸவ்ரீ(ரஹ்),இப்னுல் முபாரக்(ரஹ்), ஷாஃபீஅஹமத்(ரஹ்),இஸ்ஹாக்ஆகியோரின் கருத்தும் இதுவாகும்

பதில்

நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதியில் 136 வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் ஸலமா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மீது சில ஆட்சேபனைகள் உள்ளன.

மேலும் இந்த செய்தி ஆயிஷா ர­ அவர்கள் அறிவிக்கும் நபி ஸல் அவர்கள் எல்லா நிலையிலும் இறைவனை நினைவு கூர்வார்கள் என்ற செய்திக்கும் குர்ஆனில் அவர்கள் இருந்த நிலையிலும் படித்த நிலையிலும் இறைவனை நினைவு கூர்வார்கள் என்ற செய்திக்கும் இது முரணாக இருக்கிறது. செய்தியை சொன்ன நீங்கள்தான் இந்த முரண்பாட்டை நீக்க வேண்டும்.



வாதம்



குளிப்பு கடமையானவர் உளு செய்யாமல் அல்லது குளிப்பு கடமை நிறைவேற்றாமல் உறங்க சென்றால்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எந்த இல்லத்தில் உருவப்படமோ, நாயோ இருக்கின்றதோ அல்லது குளிப்பு கடமையானவர்கள் இருக்கின்றார்களோ அங்கு வானவர்கள் நுழையமாட்டார்கள் என அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(அபூதாவுத்(ரஹ்),நஸயி(ரஹ்),தாரமி(ரஹ்),அஹ்மத்(ரஹ்))



பதில்

நீங்கள் குறிப்பிடம் செய்தி நஸயீ 261 ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின்அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அப்தில்லாஹ் பின் நுஜய்யி என்பவர் மீதும் அவருடைய தந்தை மீதும் இமாம்கள் விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த செய்தியை வைத்து ஆதாரம் எடுக்க முடியாது. மேலும் இதை மையமாக வைத்து எழுப்பப்படும் வாதங்களும் நிற்காது.



ஆதாரப்பூர்வமான செய்திகள் கிடைத்தால் கொண்டு வாருங்கள். பலவீனமான செய்திகளை காட்டி சட்டம் சொல்லாதீர்கள்.

நமது பதில்

அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பராக்காத்துஹூ

//நீங்கள் குறிப்பிட்ட செய்தி முஅத்தா மா­க் என்ற புத்தகத்தில் 82 வது செயதியாக இடம் பெற்றுள்ளது. என்றாலும் இந்த செய்தி நபி ஸல் அவர்கள் சம்மந்தப்பட்டது அல்ல. ஸஹாபிகளின் கருத்துதான்.

மேலும் ஆன் குறியை தொட்டாள் ஒளு நீங்குமா என்றால் அதுவும் நீங்காது. எனவே இந்த செய்தியை ஆதாரத்திற்காக எடுத்துக் கொள்ள முடியாது.

//

உங்கள் அறிவுக்கு ஒத்து வரவில்லை என்று சகாபாக்கள் கருத்து தான் சொல்லி அலட்சியமாக விட்டு விட முடியாது, அது போல் பல கருத்துகள் நான் எடுத்து வைக்க முடியும். உதரணத்திற்கு வருவோம், ஆண் உறுப்பை தொட்டால் உளூ முறியுமா அல்லது முறியாதா என்று இரு வேறு கருத்துகள் உள்ளன, ஆனால் ஒன்றை மறைத்து ஒன்றை வெளியிடுவதாக என்னை குறை சொன்னீர்கள்,ஆனால் தாங்களும் அதே போல் தான் செய்து உள்ளீர்கள்,

மர்வான்(ரஹ்) அவர்கள் மதினாவின் ஆளுநராக இருந்த போது ஒருவரின் கை அவர் மறைவுறுப்பில் பட்டுவிட்டால், அதற்காக உளூ செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்கள், அப்போது நான் அதை மறைத்து மறைவுறுப்பைத் தொட்டால் உளூச் செய்தாக வேண்டும் என்று (சட்டம்) இல்லை என்று கூறினேன்,உடனே மர்வான்(ரஹ்) அவர்கள் எதனெல்லாம் உளு செய்ய வேண்டும் என்று அல்லாவின் தூதர்(ஸல்) அவர்கள் விவரிக்கும் போது மறைவு உறுப்பை தொட்டுவிட்டாலும் உளூ செய்ய வேண்டும் என்று தாம் செவியுற்றதாக புஸ்ரா பின் த் ஸஃப்வான்(ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள் என்று கூறினார்கள்.

உர்வா(ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்: இது பற்றி மர்வான்(ரஹ்) அவர்களிடம் நான் தொடர்ந்து விவாத்தித்து வந்தேன், அப்போது மர்வான்(ரஹ்) அவர்கள் தம் காவலாளிக்களுள் ஒருவரை அழைத்து அவரை புஸ்ரா(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள், அவர் மர்வான்(ரஹ்) அவர்களுக்கு புஸ்ரா(ரலி) அவர்கள் அறிவித்த செய்திப்பற்றி புஸ்ரா(ரலி) அவர்களிடமே விசாரித்தார்.அப்போது புஸ்ரா(ரலி) அவர்கள் மர்வான்(ரஹ்) அவர்களுக்கு அறிவித்த அதே செய்தியை அவரிடம் சொல்லி அனுப்பி வைத்தார்கள். என உர்வா பின் அஸ்ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்

இமாம் நஸயி(ரஹ்) 163,164. இமாம் திர்மதி(ரஹ்) 77,இமாம் அபூதாவுத்(ரஹ்) 154, இமாம் அஹ்மத்(ரஹ்)(26030) , இமாம் மாலிக்(ரஹ்) மூவத்தா 89, இமாம் இப்னு மாஜா(ரஹ்) 472, இமாம் தாரமி(ரஹ்) 718,719,இமாம் ஹாகிம்(ரஹ்), இமாம் இப்னு குஸைமா(ரஹ்) 33.போன்ற இமாம்கள் ஸஹிஹ்வானது என றிவிப்பு செய்கிறார்கள்.

இமாம் புகாரி(ரஹ்) அவர்களும் மேற்கெண்ட செய்தி ஆதராபூர்வமானது எனவும் அறிவிக்கிறார்கள்,

உங்களில் ஒருவர் மறைவுறுப்பை தொட்டு விட்டால் அவர் உளூ செய்யட்டும் என இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,இமாம் மாலிக்(ரஹ்) மூவத்தா 90,91,92,93


அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்களுடன் நான் பயணத்தில் இருந்தேன், அப்போது அவர்கள் சூரியன் உதியமாகி பின் உளூச் செய்து விட்டு, பின்பு தொழுத்தை பார்த்தேன், இந்த தொழுகை தான் சற்று முன் தொழுதீர்களே! என்றேன். சுப்ஹு தொழுகைக்காக நான் உளூ செய்து விட்டு, என் மறைவுறுப்பை தொட்டேன், எனவே மீண்டும் உளு செய்தேன். மீண்டும் தொழுதேன் என்று பதில்கூறினார்கள், இதை ஸாலிம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இமாம் மாலிக்(ரஹ்) மூவத்தா 90,91,92,93



என் தந்தை அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்கள் குளித்து விட்டு பின்பு உளு செய்வதை பார்த்தேன், தந்தை அவர்களே! குளித்ததே உளூவிற்கு பகரமாகி விடும் என்று நான் கேட்டேன். (அதற்கு) ஆம் பகரமாகிவிடும் தான் என்றும் , நான் மறைவுறுப்பை சில சமயம் தொட்டிருக்க கூடும், எனவே தான் உளு செய்தேன் என(பதில்) கூறினார்கள், இதை ஸாலிம்(ரலி) அவர்கள் கூறினார்கள்.இமாம் மாலிக்(ரஹ்) மூவத்தா 90,91,92,93.

மேலுள்ள செய்தியில் இப்னு உமர்(ரலி) அவர்களின் சொந்த கூற்றாகவே அமைந்தது என வெளிப்படையாக மனதில் தோன்றலாம், ஆனால் அவர்கள் எப்படி நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை பின்பற்றினார்கள் என்று ஒரு சிறு விளக்கம் கொடுத்தால் தங்களுக்கு புரியும்.

இப்னு உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை நேசித்த விதம்:

முஜாஹித் (ரலி) அறிவிக்கிறார்கள்:

நாங்கள் ஒரு பிரயாணத்தின் போது இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் பிரயாண வழியில் ஓரிடத்தில் சற்று விலகிச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் ஏன் இவ்வாறு இவ்விடத்தில் சற்று விலகிச் செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நபி (ஸல்) அவர்களை அவர்களின் பிரயாணத்தின் போது இவ்விடத்தில் இவ்வாறு சற்று விலகிச் சென்றதை நான் நேரில் பார்த்தேன். ஆகையால் நானும் அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்றே இவ்விடத்தில் சற்று விலகிச் செல்கிறேன் என்றார்கள். ( இமாம் அஹ்மத்(ரஹ்))

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் இவ்வழியாகப் பிரயாணம் செய்யும் போது, இவ்விடத்தில் தமது வானத்தை நிறுத்தி கீழே இறங்கி, தமது சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கழிப்பிடத்திற்குச் சென்றார்கள். அதை நினைவில் கொண்டவர்களாக இன்று உமர்(ரலி) அவர்களும் அதே இடத்தில் தாமும் இறங்கி, அவர்களைப் போன்றே தாமும் தமது சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக விரும்பி, கழிப்பிடம் செல்வதற்காக இவ்விடத்தில் இறங்கியுள்ளார்கள் என்றார். ( இமாம் அஹ்மத்(ரஹ்))

இப்னு உமர்(ரலி) அவர்கள் மக்காவுக்கும், மதீனாவுககுமிடையில் ஓரிடத்திலுள்ள மரத்தின் அருகே வந்த போது, அம்மரத்தடியில் இறங்கி சிறிது நேரம் படுத்துத்தூங்கி எழுந்துவிட்டு,நபி(ஸல்) அவர்கள் இவ்விடத்தில், இம்மரத்தடியில் சிறிது நேரம் படுத்தெழுந்ததை நேரில் கண்ட எமது நபியைப் போன்றே, படுத்தெழுந்திருக்க வேண்டும் என விரும்பியே இவ்வாறு படுத்தெழுந்திருக்கிறேன் என்றார்கள்(இமாம் பஜ்ஜார்(ரஹ்)

இது போன்று அபுபக்கர்(ரலி),உமர்(ரலி),உஸ்மான்(ரலி),அலி(ரலி),இப்னு மஸ்வூத்(ரலி),இப்னு அப்பாஸ்(ரலி), அன்ஸ்(ரலி) இன்னும் பல ஒவ்வோரு சகாபியும்(ரலி) நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை போட்டி போட்டு அமல் செய்தார்கள், சுன்னத் என்று அலட்சியம் படுத்தவில்லை.

அதனால் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி வெளிப்படையாக தெரிந்தாலும்,ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்கள் சொல்லாத,செய்யாத எதையும் சுயமாக செய்யமாட்டார்கள், மேலும் அதை அவர்கள் நபி(ஸல்) அவர்கள் நேசித்த விதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம், அதே போல் ஸஅது பின் அவக்காஸ்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத எதையும் அறிவித்திருக்க மாட்டார்கள், ஸஅது பின் அவக்காஸ்(ரலி) அவர்கள் கட்டளையிடும் போது முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி) அவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்க வில்லை, ஏனென்றால் முஸ் அப் பின் ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவித்தார்கள் என அவர்கள் அறிந்திருந்தார்கள், உங்களைப் போல் அவர்கள் விதாண்டவதம் பண்ணவில்லை.



//நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதியில் 121 வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. எனினும் இந்த செய்தியை பதிவு செய்த திர்மிதி அவர்களே பலவீனம் என்று சொல்­யுள்ளாôகள்.

மேலும் நீங்கள் அந்த செய்தியின் கீழ் இடம் பெற்றிருக்கும் அறிஞர்களின் கருத்தை மொழிபெயர்த் நீங்கள் அதற்கும் கீழாக இடம் பெற்றிருக்கும் இமாம் திர்மிதியன் விமர்சனத்தை ஏன் மொழிபெயர்க்கவில்லை?

இப்படி மறைத்துதான் உங்கள் வாதத்தை நீங்கள் நிலைநாட்ட வேண்டுமா?//



சகோதரர் அவர்கள் இமாம் திர்மதி(ரஹ்) எந்த இடத்தில் பலவினாமானது ஹதிஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டும்,

இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் இஸ்மாயில் பின் அய்யாஷ்(ரஹ்) என்பவரைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார்கள், ஆனால் இஸ்மாயில் பின் அய்யாஷ் அறிவிக்கும் ஹதிஸ் அனைத்தும் இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் ஸஹிஹ்வான ஹதிஸ்களும்,ஹசன் தரத்திலும், அதே போல் இமாம் அஹ்மது(ரஹ்),இமாம் அபுதாவுத்(ரஹ்) அவர்களும் இவர் அறிவிக்கும் ஹசன் தரத்திலும் பதிவு செய்துள்ளார்கள்,இமாம் திர்மதி(ரஹ்) அவர்களின் ஹதிஸ் விளக்க உரையில் இமாம் ஹைதமி(ரஹ்) அவர்களும் இஸ்மாயில் பின் அய்யாஷ் அவர்களை பலமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.இஸ்மாயில் பின் அய்யாஷ் அவர்களை சிலர் விமர்ச்சனம் செய்தாலும், சிலர் இவர் நம்பிக்கையானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளாரே என ஒரு கேள்வி கேட்கிறீர்கள் என வைத்து கொள்வோம், சகோதரர் வழியிலேயே வருவோம், ஆண் உறுப்பை தொட்டால் உளு முறியாது என்று கூறினீர்கள்., சகோதரர் மறுப்பு தெரிவிக்கும் அதே ஹதிஸை இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் இமாம் புகாரி(ரஹ்) அவர்களிடம் கேட்கும் பொழுது, அந்த ஹதிஸ் சரியானது என்று அறிவிப்பு செய்கிறார்கள், இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் சரியானது என அறிவிப்பு செய்த பிறகு சகோதரர் ஏன் ஆண் உறுப்பை தொட்டால் உளு முறியாது என என்னை நோக்கி விமார்சனம் செய்தீர்கள், இவர்களுக்கு வேணுகிற பொழுது இமாம் புகாரி(ரஹ்) எடுத்து கொள்ள வேண்டும், வேண்டாம் என்கிற போது விட்டு விட வேண்டும்,இது போல் சில ஹதிஸ்களை இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் வழியாக ளயீப் என்று அறிவிப்பு செய்துள்ளீர்கள்(நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் சரியான தொடரில் என பதித்து இருந்தும், நீங்கள் ஏன் பலகினமானது தள்ளுபடி செய்தீர்கள்).

//நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதியில் 136 வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் ஸலமா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மீது சில ஆட்சேபனைகள் உள்ளன.//

இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸலமா(ரஹ்) அவர்கள் நம்பகமானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள், இவரைப் பற்றி சில இமாம்கள் ஆட்சேபனைகள் உள்ளன மட்டும் பதித்துவிட்டு, இமாம் திர்மதி(ரஹ்) அவர்களின் ஹதிஸின் விளக்கத்தை மறைத்தது ஏன்?

(என்னை நோக்கி கேள்வி கேட்டது போல், நான் உங்களை தற்போது கேட்கிறேன்),

உங்கள் பதில் முன்பு

(நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதியில் 121 வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. எனினும் இந்த செய்தியை பதிவு செய்த திர்மிதி அவர்களே பலவீனம் என்று சொல்­யுள்ளாôகள்.

மேலும் நீங்கள் அந்த செய்தியின் கீழ் இடம் பெற்றிருக்கும் அறிஞர்களின் கருத்தை மொழிபெயர்த் நீங்கள் அதற்கும் கீழாக இடம் பெற்றிருக்கும் இமாம் திர்மிதியன் விமர்சனத்தை ஏன் மொழிபெயர்க்கவில்லை?

இப்படி மறைத்துதான் உங்கள் வாதத்தை நீங்கள் நிலைநாட்ட வேண்டுமா?)


தாங்கள் மிகவும் நல்லவர் போல் பதிலளிக்கிறீர்கள்(பசுத்தோல் போர்த்திய புலி). இமாம் திர்மதி(ரஹ்) இந்த ஹதிஸை, ஹசன் தரத்திலும் பதிக்கவில்லை,ஸஹிஹ்வான தரத்திலும் பதிக்கவில்லை, ஹசன் ஸஹிஹ் என்று இரண்டு தரத்திலும் சேர்த்தே பதித்துள்ளார்கள், இதனால் இந்த ஹதிஸிற்கு இன்னும் கூடுதல் வலு சேர்கிறது, அதனால் ஒரு ஹதிஸை பலவினப்படுத்த அந்த இமாம் இப்படி சொன்னார்கள், இந்த இமாம் இப்படி சொன்னார்கள் என்று சொல்லி ஒரு பலமான ஹதிஸை , பலகினமானது ஆக்கி விடாதீர்கள்,இது ஒன்றும் விளையாட்டு அல்ல, இது மார்க்கம்,உங்கள் கொள்கைக்கு ஒத்து வரவில்லை என்றால் ஹதிஸை பலகினமாக்க முற்படுவதா? எனக்கும் உங்களைப் போல் பல ஹதிஸ்கள் பதிக்க முடியும், அதையெல்லாம் பலகினமாக்க எனக்கு விருப்பமில்லை, ஏனென்றால் என்னை அல்லா கடுமையாக பிடிப்பான். ஒரு இமாம் பலமான அறிவித்த ஹதிஸை, மற்றொரு இமாம் பலகினமானதாக அமைந்த ஹதிஸ்களும் உள்ளன், அதே போல் ஒரு இமாம் பலகினாமாக அமைந்த ஹதிஸ்கள் மற்றொரு இமாம் பலமானதாக அமைந்த ஹதிஸ்களும் உள்ளன.ஹதிஸ் என்பது ஒவ்வொரு இமாமின் கருத்து கணிப்பு என்பதை அறிந்து கொள்ளுங்கள், அப்படி மறுப்பு தெரிவிப்பீர்கள் ஆனால், நெஞ்சில் கை கட்டுவதையும், விரல் அசைப்பதையும் முதலில் நிறுத்துங்கள், ஏனென்றால் பல இமாம்கள் அந்த ஹதிஸை பலகினமானது என்று அறிவித்துள்ளார்கள்,

//மேலும் இந்த செய்தி ஆயிஷா ர­ அவர்கள் அறிவிக்கும் நபி ஸல் அவர்கள் எல்லா நிலையிலும் இறைவனை நினைவு கூர்வார்கள் என்ற செய்திக்கும் குர்ஆனில் அவர்கள் இருந்த நிலையிலும் படித்த நிலையிலும் இறைவனை நினைவு கூர்வார்கள் என்ற செய்திக்கும் இது முரணாக இருக்கிறது. செய்தியை சொன்ன நீங்கள்தான் இந்த முரண்பாட்டை நீக்க வேண்டும்.//

ஹதிஸின் ஒரு பகுதியை மட்டும் படித்துவிட்டு மறுபகுதியை விட்டால் அப்படி தான் இருக்கும், இதற்கு ஹதிஸ்களின் அறிவு இல்லாத ஒரு காரணமாகும்,

நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாவை திக்ரு செய்பவர்களாக இருந்தார்கள் என ஆயிசா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்( இமாம் முஸ்லிம்(ரஹ்) 608).

சகோதரர், திக்ரு என்றால் குர் ஆன் ஓதுவது தான் சரியான அர்த்தம் என்பதை எங்கிருந்து ஆதாரம் எடுத்தீர்கள், திக்ரு என்றால் அல்லாவைப் பற்றி நினைவு கூர்வது என்று அர்த்தம், அல்லாவை நினைவு கூர்வது தொழுகையும் ஒரு பகுதியாகும், அந்த சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் அல்லாவை அதிகமாக நினைவு கூறுவார்கள், அதை தற்போது உதரணமாக எடுத்து கொள்வோம். சகோதரர் அவர்கள் அவர்கள் எல்லா நிலையிலையும் அல்லாவை நினைவு கொள்வதாக வைத்து கொள்வோம், சகோதரராகிய உங்களுக்கு திடீரென்று குளிப்பு கடமையாகி விட்டது, அந்த சமயத்தில், பள்ளியில் இகாமத் சொல்லப்படுகிறது, சகோதரர் அவர்கள் நபி(ஸல்) எல்லா நிலையிலையும் அல்லாவை திக்ரு செய்வார்கள் என்று ஆயிசா(ரலி) அவர்கள் அறிவித்த செய்தியை படித்து விட்டு , சகோதரர் அவர்கள், அந்த தொழுகை செல்லலமா?, செல்வீர்களா? . நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று ஒரு ஆதாரம் உங்களால் காட்ட முடியுமா?. அல்லாவை திக்ரு செய்வது குர் ஆன மட்டும் தான் என்று ஆதாரம் என்று எங்கு எடுத்தீர்கள்.

சிறு நீர் கழித்து கொண்டு இருக்கும் போது நபி(ஸல்) அவர்களுக்கு, முஜாஹிர் பின் குன்ஃபுது(ரலி) அவர்கள் ஸலாம் சொன்னார்கள், அதற்கு நபியவர்கள் மறுமொழி கூறவில்லை, பிறகு உளு செய்து விட்டு மறு மொழி கூறினார்கள்.

தூய்மையான நிலையில் தவிர (வேறு எந்த நிலைகளிலும்) அல்லாவை திக்ர் செய்வதை நான் வெறுக்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஹாஜிர் பின் குன்புத்(ரலி) அறிவிக்கிறார்கள்,

இமாம் அபுதாவுத்(ரஹ்)(16),இமாம் இப்னுமஜா(ரஹ்)(344),இமாம் நஸயி(ரஹ்) (38),இமாம் முஸ்னத் அஹ்மது(ரஹ்)(18259,19833), இமாம் தாரமீ(ரஹ்) (2527) இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்),இமாம் பைஹகி(ரஹ்),இமாம் ஹாகிம்(ரஹ்).

சிறு நீர் மலம் கழிக்கும் போது உளுவின்றி ஸலாம் கூறுவதும் அதற்கு பதிலளிப்பது கூடாது, அதே போன்றே தஸ்பிஹ் கூறுவதும் , தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் கூறுவதும், பாங்கிற்கு பதில் கூறுவதும், பொதுவாக துஆ, திக்ர் எதுவும் செய்யவும் கூடாது(அல் மின் ஹாஜ்)

ஏன் நபி(ஸல்) அவர்கள் ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை? அதற்கு

இமாம் ஸிந்தி(ரஹ்) அவர்களின் விளக்கம்:


ஸலாம் கூறுவதற்கு உளு தேவையில்லை என்றாலும், ஸலாம் என்பது அல்லாவின் பெயர்களும் ஒன்றாக இருப்பதால் தூய்மை அடைந்த நிலையில் பதில் சொன்னார்கள்.


ஸலாத்திற்கு பதில் கூறும் போது நபி(ஸல்) அவர்கள் தூய்மையை இந்த அளவு எதிர் பார்த்தார்கள் என்றால், அல்லாவை திக்ர் செய்யும் போது எந்த அளவுக்கு தூய்மை எதிர் பார்த்திருப்பார்கள் என்பதை சகோதரர் சுயமாக சிந்திக்க வேண்டும், சும்மா கப்சா விடக்கூடாது. தனக்கு எல்லாம் தெரிந்தவர் போல்..

நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாவை திக்ரு செய்பவர்களாக இருந்தார்கள் என ஆயிசா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்( இமாம் முஸ்லிம்(ரஹ்) 608,இமாம் அபுதாவுத்(ரஹ்)).

இதிலிருந்து நபி(ஸல்) எல்லா நிலையிலும் அல்லாவை நினைவு கூறுவார்கள்,ஆனால் அது தூய்மையான நிலையில் அல்லாவை நினைவு கூறுவார்கள் என்று மறு நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள் நேரடியாக தாங்களகவே அறிவிக்கிறார்கள், அதனால் நபி(ஸல்) அவர்கள் தூய்மையான நிலையில் அல்லாவை திக்ர் செய்திருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

ஹதிஸ்களை முழுமையாக படிக்கமால் அறைகுறையுமாக படித்துவிட்டு உளருவதும், ஹதிஸ்களை ஆராய்வதில் ஞானம் இல்லாமல் இருப்பது தான் இதற்கு காரணம், இனி மேலாவது முறையாக படித்துவிட்டு முறையாக பதிலளியுங்கள்.

//நீங்கள் குறிப்பிடம் செய்தி நஸயீ 261 ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின்அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அப்தில்லாஹ் பின் நுஜய்யி என்பவர் மீதும் அவருடைய தந்தை மீதும் இமாம்கள் விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த செய்தியை வைத்து ஆதாரம் எடுக்க முடியாது. மேலும் இதை மையமாக வைத்து எழுப்பப்படும் வாதங்களும் நிற்காது//

கருத்துகள் பதிக்கும் போது அப்படியே ஒரு சுவர் கட்டி நிறுத்துவிட்டேன்.வாதங்கள் எதுவும் நிற்காது ,இங்கும் சகோதரர் உண்மை மறைத்திருக்கிறார்கள், தன்னுடைய கொள்கை கூட்டம் மானத்தை காக்க பித்தலாட்டத்தை கையாண்டு உள்ளார். பதித்திருக்கும் ஹதிஸ் சில இமாம்கள் இவரைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார்காள், அதை நான் மறுக்கவில்லை, நான் ஏற்கனவே இது போன்ற கருத்துக்கு முன்பு பதிலளித்து உள்ளேன், ஒரு இமாம் பலகினமானத்தில் அமைந்த ஹதிஸை மற்றொரு இமாம் பலமான தரத்தில் பதித்திருப்பார்கள், அதே போல் ஒரு இமாம் பலமான தரத்தில் அமைந்த ஹதிஸ் மற்றொரு இமாம் பலகினமான தரத்தில் பதித்திருப்பார்கள், அது அவர்களின் ஹதிஸ்கலை ஆராய்வு.

அப்துல்லா பின் நுஜய்யி(ரஹ்) அவர்களைப் பற்றி பார்ப்போம்.

இந்த ஹதிஸை பதிவு செய்த இமாம் நஸயி(ரஹ்) அவர்களே இவரை பலமானவர் , நம்பகமானவர் பட்டியலில் இணைத்து உள்ளார்கள்.

அதே போல் இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) நம்பகமானவர் பட்டியலில் இணைத்து உள்ளார்கள்.



1.யமன் தேசவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள்,அக்கடித்தில் சுத்தமில்லாதவரை தவிர,(மற்றெவரும்), குரானை தொடமாட்டார்கள்.(தொடக்கூடாது) என்று இருந்தது அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.

ஹதிஸ் நூல்கள்:

1.முஃஜமுஸ்ஸகீர்(ரஹ்) பக்கம் 239

2.தப்ரானி(ரஹ்) அவர்கள் அல்கபரில் பாகம் 3-ல் 194/2

3.பைஹகீ(ரஹ்) 1/88

4.இப்னு அஸாகிர்(ரஹ்) 13ம் பாகம் 214/2

அப்துல்லா பின் உமர்(ரலி)வழியாக வரும் ஹதிஸ்களில் சயிது பின் முகம்மதுவழியில் இதே வாசகம் கொண்டு நபி(ஸல்) அவர்கள் வரை அறிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த ஹதிஸ் ஸாலிமிடம்(ரலி) செவியுற்றதாக அவர் தனது தந்தை கூறியதாகஇடம் பெற்றுள்ளது.இந்த ஹதிஸ் இமாம் அஹ்மது அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார்கள் என இமாம் அஸ்ரம்(ரஹ்) கூறுகிறார்கள்.



2. நபி(ஸல்) அவர்கள் எமன் நாட்டிற்கு என்னை அனுப்பிய போது நீர்சுத்தமானவராக அன்றி, குரானை தொட வேண்டாம் எனக் கூறினார்கள் எனமதருல்வுர்ராக் ஹஸ்ஸான் பின் பிலால்(ரலி) அறிவிக்கிறார்கள்.(ஹாகிம்(ரஹ்))இமாம் ஹாகிம்(ரஹ்) அவர்கள் இந்த ஹதிஸ் சரியான தொடர் எனக் கூற, இமாம் தஹபி(ரஹ்) அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார்கள்,

மேல் உள்ள ஹதிஸ் நான் ஏற்கனவே சரியான தொடரில் பதித்துவிட்டேன், அதனால் உங்கள் அறிவுக்கு இவை ஒத்து வரவில்லை என்பதால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது, ஒர் ஹதிஸை தனக்கு தகுந்தோற் போல் மாற்றும் உங்கள் கொள்கைக்கு இது ஒன்று புதியதல்ல?. நான் ஆதாரபூர்வமாக பதித்து விட்டேன், எனக்கு நான் பதித்த ஆதாரம் போதுமானதாகும். இதுவும் ஆதரபூர்வாமான ஹதிஸ் தான், நீங்கள் சொல்லும் இமாம்களின் கருத்து கணிப்பு எடுக்க வேண்டும் என்று எந்த ஒரு நபி(ஸல்) மொழி ஆதாரம் எதுவும் கிடையாது, ஆதாரபூர்வமான ஹதிஸ் யார் சொன்னாலும் ஏற்று கொள்ளலாம், நானும் ஆதாரபூர்வம்மாகத் தான் பதிவு செய்துள்ளேன், இட்டுகட்டப்பட்டதை ஒன்று நான் பதிவு செய்யவில்லை.

//பதில்

நீங்கள் குறிப்பிடும் செய்தி தாரகுத்னீ 435, பைஹகீ 417 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தி ஆதாரப்பூர்வமானதா என்பதை இதைப் பதிவு செய்த இமாம் தாரகுத்னீ அவர்களே அச்செய்தியின் கீழ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

(இதில் இடம்பெறும்) அல் காஸிம் பின் உஸ்மான் என்பவர் பலம் வாய்ந்தவர் இல்லை.

மேலும் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இடம்பெறவில்லை. உமர் (ரரி) அவர்களின் சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இந்த செய்தியை மையாமாக வைத்து எடுத்து வைத்த மற்ற உங்களுடைய வாதங்களும் வீழ்ந்துவிடுகின்றன.//


இமாம் இப்னு ஜவ்ஸி அவர்கள் நேரடியாக அல் காசிம் பின் உஸ்மான்(ரஹ்) அவர்களை நேரடியாக பார்த்து அவர்( அல் காசிம் பின் உஸ்மான்(ரஹ்) )நம்பகமானவர் என ஸிவாத்துல் அல் ஸவா அறிவிப்பு செய்வதினால் இவருடைய ஹதிஸ்கள் ஏற்க தக்கதாகும்.

சகோதரர் அவருக்கு ஒரு வேண்டு கோள்,

நானும் நம்பகமானவர் பட்டியலில் உள்ளவர்கள் தான் பதித்துள்ளேன், இதற்கும் மேலும் விவாதம் பண்ணினால் அது விவாதம் அல்ல, அது விதாண்டவாதம் என்பது சந்தேகமில்லை,

12 கருத்துகள்:

  1. பெயரில்லா4 மே, 2011 அன்று PM 6:31

    அல்லாவும்
    அவனுடைய தூதருமான முகம்மது(ஸல்) அவர்கள் சொன்னத்தயும் முழுமையாக செயல்படவேண்டும்?????????wrong tamil. correct.

    பதிலளிநீக்கு
  2. ஒளு செய்துவிட்டு தொடுவதுதான் தூய்மை என்றால் - ஒளுவும், தொழுகையும் நபி (ஸல்) அவர்களின் 52வது வயதில்தான் கடமையாகிறது. அதாவது திருக்குர்ஆனின் வசனங்கள் நபி (ஸல்) அவர்களின் 40வயதாக இருக்கும்போது வஹியாக வரத்துவங்கியது. அவ்வாறு வஹியாக வரத்துவங்கி 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒளுவும், தொழுகையும் கடமையாகிறது. அப்படியெனில் குர்ஆன் வஹியாக வரத் துவங்கி 12 ஆண்டுகள் வரை
    நபித் தோழர்கள் அசுத்தமான நிலையிலேயே குர்ஆனை பதிவு செய்துள்ளார்கள் என்ற பொருள் வருகிறது. மேற்கண்டவாறு விளங்கினால் அந்த வசனம் சொல்லும் கருத்துக்கு அர்த்தமில்லாமல் போகிறது.

    'இனி தொடமாட்டார்கள்' என்ற கருத்தில் அந்த வசனம் வந்திருக்கிறது என்று எவராவது சொன்னால், இந்த வசனம் இறங்கிய பிறகாவது நபித்தோழர்கள் ஒளு செய்துவிட்டு வந்துதான் வஹியை - குர்ஆனை பதிவு செய்தார்கள். நபி (ஸல்) இப்படித்தான் இந்த வசனத்தை விளக்கினார்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். [எந்த ஹதீஸ் நூலிலும் இதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை]

    பதிலளிநீக்கு
  3. அதனை' என்பதற்கு குர்ஆன் என்று பொருள் கொண்டால் - குர்ஆன் தொடக்கூடிய வடிவத்தில் இறங்கியிருக்க வேண்டும். குர்ஆன் தொட்டு உணரக் கூடிய நூல் வடிவத்தில் இறங்கவில்லை. மாறாக ஓதி அறியக்கூடிய 'வஹி' யாகத்தான் இறக்கியருளப்பட்டது. அதற்கு ஆதாரமாக அருள்மறை குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் உள்ளன.

    'இறைவனின் கட்டளைப்படி ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 - ஸூரத்துல் பகராவின் 97வது வசனம், அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷூஃராவின் 192வது வசனம்).
    '(நபியே!) நாம் உம்மை ஓதி காட்டச் செய்வோம் பிறகு நீர் மறக்கமாட்டீர்' (அல்-குர்ஆன் அத்தியாயம் 87 ஸூரத்துல் அஃலாவின் 6வது வசனம்)
    மேற்படி வசனங்கள் குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் வஹியாக அறவிக்கப்பட்டதேத் தவிர ஏடாக வரவில்லை என்பதை அறிவிக்கிறது.
    'எழுதப்பட்ட வேதத்தை நாம் உம்மீது இறக்கியிருந்தால் அதை தமது கரங்களால் தொட்டுப் பார்த்து இது வெறும் சூனியமேத் தவிர வேறில்லை என்று கூறியிருப்பார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்-ஆம் 7வது வசனம்)

    இந்த வசனத்தின் மூலம் குர்ஆன் ஒரு எழுதப்பட்ட ஏடாக வரவில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    ஓசையும் - உச்சரிப்பாகவும் மட்டும்தான் குர்ஆன் வஹியாக அருளப்பட்டது. ஓசையையும், உச்சரிப்பையும் - யாராலும் தொட முடியாது. அப்படியானால் 'அதனை' என்று தொடக் கூடிய வடிவத்தில் இருக்கும் ஒன்றைத்தான் இறைவன் கூறியிருக்க முடியும். குர்ஆன் தொடக் கூடிய வடிவத்தில் இறைவனிடமிருந்து இறங்கவில்லை என்பதால் 'அதனை' என்பது குர்ஆனை குறிக்காது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
    தூய்மையானவர்கள் என்றால் யார்?.

    இஸ்லாமிய மொழி வழக்கில் அதாவது குர்ஆன் - ஸூன்னா வழியில் தூய்மை என்பது பல அர்த்தங்களில் வந்துள்ளது.
    உள்ளத்தூய்மை, ஒளு, மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டிலிருந்து தூய்மை அடைதல், தீய காரியங்களிலிருந்து விலகி நிற்றல் என்று ஏராளமாக சொல்லலாம். இதில் எதுவும் நாம் மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு பொருந்தாது. ஏனெனில் 'அதனை' என்று குர்ஆன் அல்லாத ஒன்றை இறைவன் சொல்வதால் இந்த அர்த்தங்கள் அங்கு பொருந்தாது.
    இப்போது இந்த வசனத்தின் வரலாற்றுப் பின்னனியை அணுகினால் முடிவான விடை கிடைத்துவிடும்.

    இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவ பிரச்சாரம் செய்தபோது எதிரிகளால் பல 'சொல்' தாக்குதலுக்கு உள்ளானார்கள். அதில் ஒன்று 'ஷைத்தான்கள் இவருக்கு கற்றுக் கொடுப்பதைதான், இவர் மக்களுக்கு ஓதிக் காட்டுகிறார்' என்பதாகும்.
    மேற்படி 'சொல்' தாக்குதலை மறுத்து இரண்டு வசனங்கள் இறங்கின.
    'இதை ஷைத்தான்கள் இறக்கிவைக்கவில்லை. அது அவர்களுக்கு தகுதியானதுமல்ல. அதற்கு அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷுஃராவின் 210 மற்றும் 211ஆம் வசனங்கள்)

    'இது கண்ணியமிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட (லவ்ஹூல்- மஹ்ஃபூல்) என்னும் ஏட்டில் அது இருக்கிறது. தூய்மையானவர்(மலக்கு)களைத் தவிர வேறு யாரும் அதனை (லவ்ஹூல்- மஹ்ஃபூல் என்ற மூல ஏட்டை) தொடமாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வஆகியா 77 முதல் 79வது வசனம் வரை)

    மக்காவில் உள்ள இறை நிராகரிப்பாளர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பாக நீங்கள் கூறுவது போல் ஷைத்தான்கள் இதனை இறக்கவில்லை. அதை இறக்கக் கூடிய சக்தி அவர்களுக்குக் கிடையாது. பாதுகாக்கப்பட்ட மூல ஏட்டிடம் ஷைத்தான்கள் நெருங்க முடியாது. பாவம் என்றால் என்னவென்றே அறியாத 'தூய்மையான மலக்குகளைத் தவிர வேறு எவரும் 'அதனைத் தொடமாட்டார்கள்' என்று இறைவன் தெளிவாக அறிவித்து
    விட்டான். இப்னு அப்பாஸ் (ரலி) ஸயீத் பின் ஜூபைர் (ரலி), அனஸ் (ரலி) போன்ற நபித்தோழர்கள் அனைவரும் மேற்கண்ட விளக்கத்தையே கொடுகத்துள்ளார்கள். (இப்னு கஸீர் விளக்கவுரை).
    அருள்மறை குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பதாலும்,
    நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் அனைத்தும் பலகீனமாக இருப்பதாலும்,
    'தூய்மையானவர்களைத் தவிர' என்பது மனிதர்களை குறிக்கவில்லை என்பதாலும்,
    அருள்மறை குர்ஆனை எந்த சந்தர்ப்பத்திலும், எந்நிலையிலும் தொடலாம், ஓதலாம். அதைத் தடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. ஓசையும் உச்சரிப்புமாக இறங்கிய குர்ஆன் பிற்கால மக்களுக்காக எழுத்து வடிவமாக பதிவு செய்து, பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எழுத்து வடிவத்தைப் படிக்கும்போது ஓசையும், உச்சரிப்பும் அதேவிதத்தில் வருவதால் எல்லா புத்தகங்களைப் போன்றதுதான் என்று சமமாக பார்க்க முடியாது. குர்ஆனில் இருக்கும் பொருளின் காரணத்தால் - குர்ஆனுக்கு கண்ணியம் அவசியமாகிறது என்பதை விளங்கலாம்.

    குர்ஆனை மக்கள் தொடும் விஷயத்தில், ஓதும் விஷயத்தில் ஒளு வேண்டும், தூய்மை வேண்டும் என்று நாமாகப் பல தடைகளைப் விதித்திருப்பதால்தான் மக்கள் குர்ஆனிலிருந்து விலகி நிற்கின்றனர். குர்ஆனிலிருந்து மக்களை விடுபடச் செய்யும் இந்த போக்கு அநீதி என்றே முடிவு செய்ய முடிகிறது.
    www.facebook.com/valifarsangam

    பதிலளிநீக்கு
  5. வருத்தபடாத வாலிபரே!

    குர்ஆன், ஹதிஸ் என்று உங்களைப் போன்ற சகோதரர்கள் வெறும் வாயால் மட்டும் கூறுகிறார்களே தவிர, ஆதாரபூர்வமாக நாம் எடுத்து காட்டியும் அதனை மறுக்கிறார்கள், இவர்கள் குர்ஆனும் பின்பற்றவில்லை, ஹதிஸும் பின்பற்றவில்லை, நான் எத்தனை ஹதிஸ் நபி(ஸல்) அவர்கள் உளுவுடன் தான் குர் ஆனை தொட வேண்டும் எனக் கூறியுள்ளதாக எத்தனை ஆதாரபூர்வமாக தொகுத்துள்ளேன், ஆனால் அதை மறுத்து நீங்கள் உங்கள் மன இச்சையான சைத்தானின் குணத்தை போல் உங்களது சுய கருத்தை பதிவு செய்துள்ளீர்கள், இது தான் உங்கள் கொள்கை என நிருபித்து உள்ளீர்கள். குர்ஆன், ஹதிஸ் என்று சொன்னால் போதாது அதனடிப்படையில் ஆதாரத்தை வைக்க வேண்டும், உங்கள் மன இச்சையை நீங்களே வைத்து கொள்ளுங்கள்.
    உங்களின் சுயகருத்தை நீங்களே வைத்து கொள்ளுங்கள், குர்ஆன், ஹதிஸ் மூலம் நேரடியாக மட்டும் உங்களுடன் விளக்கத்தை கொடுக்கவும். நான் நபி(ஸல்) அவர்கள் கூறினதாக தான் பதிவு செய்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள் பின்பற்றினீர்கள் என்றால் அவர்கள் சொன்னதை பின்பற்றுங்கள் இல்லை சைத்தானாகிய உங்கள் தலைவர்களை பின்பற்றுங்கள், அது உங்கள் இஷ்டம், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வது நபி(ஸல்) அவர்களின் உம்மத் மக்களின் குணங்கள்,

    பதிலளிநீக்கு
  6. ''தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள்.'' (அல்குர்ஆன் - 56 : 79) இந்த வசனத்தைத் தான் வலுவான ஆதாரமாக சிலர் காட்டுகிறார்கள் இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது குர்ஆனை உலு இல்லாதவர்களும் மாதவிடாய் பெண்களும் திருமறைக் குர்ஆனைத் தொடக்கூடாது என்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தினாலும், இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களையும், இது போல் அமைந்த மற்ற வசனங்களையும் நாம் ஆராய்கின்ற நேரத்தில் இவர்களின் வாதம் தவறானது என்பதை தெளிவாக அறியக்கிடைக்கிறது. மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்றுள்ள தூய்மையானவர்கள் யார் என்பதையும், அதைத் தொடமாட்டார்கள் என்பது எதைப்பற்றியது என்பதையும் அறிந்து கொள்வோம்.

    முதலாவது விஷயம் நபியவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருமறைக் குர்ஆன் புத்தக வடிவில் அவர்களுக்கு இறக்கப்படவில்லை. மாறாக ஒலி வடிவில்தான் இறக்கப்பட்டது. திருமறைக் குர்ஆன் இறங்கும் போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அதனை மனப்பாடம் செய்து கொள்வார்கள். ஒலி வடிவில் திருமறைக் குர்ஆன் இறக்கப்பட்டிருக்கும் போது அதனைத் தொடுதல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லாமல் போகிறது. புத்தக வடிவில் அல்லது தொடும் விதத்தில் அல்லாஹ் திருக்குர்ஆனை இறக்கியிருந்தால் மட்டுமே தொடுதல் என்ற ஆய்வுக்கு
    இங்கு தேவை ஏற்படும். ஆக தொடுதல் என்ற வாதம் நமது கையில் உள்ள குர்ஆனைப் பற்றியதல்ல என்பதை இதன் மூலம் நாம் விளங்க முடியும். இதற்கு முந்தைய வசனத்தை கவணிக்கும் போது இதனை நாம் தெளிவாக விளங்களாம். இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது. (அல்குர்ஆன் - 56 : 77. 79) 56 : 79 வசனத்திற்கு முன்புள்ள இரண்டு வசனங்களையும் பார்க்கும் போது ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

    அதாவது இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான். இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. மாறாக பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெரியவருகிறது. இதற்கு ஆதாரமாக மேலும் சில திருமறை வசனங்கள் அமைந்திருக்கின்றன. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது. (அல்குர்ஆன் - 80 : 11-16) இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப் பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ் வசனங்களிலும் 56 : 79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56 : 79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

    தூய்மையானவர்கள் என்று 56 : 79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் வானவர்கள் தாம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான். இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர். (அல்குர்ஆன் - 26 : 210 212) இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன் தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56 : 79 வது வசனமும் அமைந்துள்ளது. தொட மாட்டார்கள் என்பதற்கும் தொடக் கூடாது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம். தொடக் கூடாது என்றால் அது கட்டளையிடுகிறது என்பது பொருள். தொட மாட்டார்கள் என்றால் அது ஒரு செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறது என்று பொருள். மேற்கண்ட வசனத்தில் தொடக் கூடாது எனக் கூறப்படவில்லை. மாறாக தொட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. உளூ இல்லாதவர்களும், மாதவிடாய்ப் பெண்களும் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று தொடுவதற்கு தடைபோடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான்.

    பதிலளிநீக்கு
  7. ஆனால் மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே தருகிறது. மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56 : 79 வது வசனத்தில் சொல்லப்பட்ட தூய்மையானவர்கள் என்பது வானவர்கள் என்பதும், அதை என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும், ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது. காபிர்களுக்கே நபியவர்கள் திருமறை வசனத்தை எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.

    அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது: பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும். "வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64) அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் رضي الله عنه , நூல் : புகாரி 7, 2941

    இந்த ஹதீஸில் நபி صلى الله عليه وسلم அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள். ஆகவே திருமறைக் குர்ஆனை உழு இல்லாதவர்களும், மாதவிடாப் பெண்களும் தொடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    -----------------அல்லாஹ்வே மிக அறிந்தவன்.-----------------------

    பதிலளிநீக்கு
  8. இதற்கான பதில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது:

    மாதவிடாய் ஏற்பட்டவர்களும்,குளிப்பு கடமையானவர்களும் குரானை எதனையும்ஓதலாகாது:


    மாதவிடாய் ஏற்பட்டவர்களும்,குளிப்பு கடமையானவர்களும் குரானை எதனையும்ஓதலாகாது என நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள் என் இப்னுஉமர்(ரலி)அவர்கள்அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்),அபுதாவுத்(ரஹ்),இப்னுமஜா(ரஹ்))

    நபித்தோழர்கள்,தாபின்கள் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரில் அநேகரின்கூற்றும்,ஸூப்யான்அஸ் ஸவ்ரீ(ரஹ்),இப்னுல் முபாரக்(ரஹ்), ஷாஃபீ(ரஹ்),அஹமத்(ரஹ்),இஸ்ஹாக்(ரஹ்)ஆகியோரின் கருத்தும் இதுவாகும்.


    ஒரு வசனத்தின் ஒரு பகுதி அல்லதுஒருஎழுத்து தவிர மாதவிடாய்காரிகளும்,குளிப்பு கடமையானவர்களும் ஓதக்கூடாதுஎன்கின்றனர், ஆயினும் தஸ்பிஹ்,தஹ்லில் போன்றவற்றிற்கு அனுமதி உண்டுஎன்கின்றனர்.மேலும் இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களின் மஸாயில்கள் என்ற நூலில் 5 ம்பக்கத்தில் அவரின் நெருங்கிய நண்பர் அஸ்ஸூயூத்தி(ரஹ்) அவர்கள் இமாம்அஹமது(ரஹ்), அவர்களிடம் உளுவின்றி ஒருவர் ஓதலாமா? என்று கேட்டேன். அதற்குஅவர்கள் ஆம் என்றார்கள், ஆயினும் உளூ இல்லாமல் குரானை தொட்டு ஓதக்கூடாதுஎன்றனர்.

    நபி(ஸல்) அவர்கள் மாதவிடாய் உள்ளவர்கள் தொடக் கூடாது தெள்ள தெளிவாக கூறியிருக்கும் போது மாதவிடாய் உள்ளவர்கள் தொடலாம் என நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக கூறும் நீங்கள் ஹதிஸ் பின்பற்றுகிறோம் என வாய் சாவடல் விடுவது உங்களின் அறியாமை அல்லது கொள்கை வெறியை உறுதி படுத்துகிறது, நபி(ஸல்) அவர்கள் மாற்றமாக பத்வா கொடுத்தவர்கள் நீங்களும் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்கள் போன்றவர்கள் ஹதிஸ் பின்பற்றுகிறோம் என்று சொல்வது வெறும் வாயளவில் தான் என நிருபித்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  9. ///மாதவிடாய் ஏற்பட்டவர்களும்,குளிப்பு கடமையானவர்களும் குரானை எதனையும்ஓதலாகாது என நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள் என இப்னுஉமர்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள் (திர்மதி(ரஹ்),அபுதாவுத்(ரஹ்),இப்னுமஜா(ரஹ்))///
    மேலே இட்டுள்ள ஹதீசுக்கு உங்கள் தளத்திலேயே பதில் உள்ளதே நீங்கள் கவனிக்க வில்லையா
    ///பதில்
    நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதியில் 121 வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. எனினும் இந்த செய்தியை பதிவு செய்த திர்மிதி அவர்களே பலவீனம் என்று சொல்­யுள்ளாôகள்.
    மேலும் நீங்கள் அந்த செய்தியின் கீழ் இடம் பெற்றிருக்கும் அறிஞர்களின் கருத்தை மொழிபெயர்த் நீங்கள் அதற்கும் கீழாக இடம் பெற்றிருக்கும் இமாம் திர்மிதியன் விமர்சனத்தை ஏன் மொழிபெயர்க்கவில்லை?
    இப்படி மறைத்துதான் உங்கள் வாதத்தை நீங்கள் நிலைநாட்ட வேண்டுமா?///

    பதிலளிநீக்கு
  10. பதில் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.

    சகோதரர் அவர்கள் இமாம் திர்மதி(ரஹ்) எந்த இடத்தில் பலவினாமானது ஹதிஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டும்,

    இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் இஸ்மாயில் பின் அய்யாஷ்(ரஹ்) என்பவரைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார்கள், ஆனால் இஸ்மாயில் பின் அய்யாஷ் அறிவிக்கும் ஹதிஸ் அனைத்தும் இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் ஸஹிஹ்வான ஹதிஸ்களும்,ஹசன் தரத்திலும், அதே போல் இமாம் அஹ்மது(ரஹ்),இமாம் அபுதாவுத்(ரஹ்) அவர்களும் இவர் அறிவிக்கும் ஹசன் தரத்திலும் பதிவு செய்துள்ளார்கள்,இமாம் திர்மதி(ரஹ்) அவர்களின் ஹதிஸ் விளக்க உரையில் இமாம் ஹைதமி(ரஹ்) அவர்களும் இஸ்மாயில் பின் அய்யாஷ் அவர்களை பலமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.இஸ்மாயில் பின் அய்யாஷ் அவர்களை சிலர் விமர்ச்சனம் செய்தாலும், சிலர் இவர் நம்பிக்கையானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

    இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளாரே என ஒரு கேள்வி கேட்கிறீர்கள் என வைத்து கொள்வோம், சகோதரர் வழியிலேயே வருவோம், ஆண் உறுப்பை தொட்டால் உளு முறியாது என்று கூறினீர்கள்., சகோதரர் மறுப்பு தெரிவிக்கும் அதே ஹதிஸை இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் இமாம் புகாரி(ரஹ்) அவர்களிடம் கேட்கும் பொழுது, அந்த ஹதிஸ் சரியானது என்று அறிவிப்பு செய்கிறார்கள், இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் சரியானது என அறிவிப்பு செய்த பிறகு சகோதரர் ஏன் ஆண் உறுப்பை தொட்டால் உளு முறியாது என என்னை நோக்கி விமார்சனம் செய்தீர்கள், இவர்களுக்கு வேணுகிற பொழுது இமாம் புகாரி(ரஹ்) எடுத்து கொள்ள வேண்டும், வேண்டாம் என்கிற போது விட்டு விட வேண்டும்,இது போல் சில ஹதிஸ்களை இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் வழியாக ளயீப் என்று அறிவிப்பு செய்துள்ளீர்கள்(நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் சரியான தொடரில் என பதித்து இருந்தும், நீங்கள் ஏன் பலகினமானது தள்ளுபடி செய்தீர்கள்).

    பதிலளிநீக்கு
  11. அற்புதமான ஆய்விற்கு பாராட்டுக்கள் மேலும் அதிக கட்டுரைகளை பதியவும்.
    அல்லாஹ் உங்களின் இம்மை மறுமை வாழ்வில் அருள் புரிவானாக.

    மறுப்பு எழுதுபவர்கள் குர் ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் எழுதவும், தான் எல்லாம் அறிந்தவன் என்கிற பெயரில் குழப்பம் விளைவிக்கவேண்டாம்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல விளக்கம் சொன்னீங்க.
    சரியா பொரக்காதவனுடைய வார்த்தைக்கெல்லாம் பயப்புடாதீங்க.
    அந்த பொறம்போக்கு பயல்வோளுக்கு வேற வேலையே இல்ல.
    தொடருங்க பாஸ்.

    பதிலளிநீக்கு