திங்கள், 1 ஏப்ரல், 2013

திருகுர்ஆன் மற்றும் ஹதிஸ்களின் வழியில் சுப்ஹான மவ்லித்..


அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்,

இன்று சிலர் ஸுப்ஹான மவ்லிது என்ற புத்தகத்தை வைத்துக் கொண்டு, ஸுப்ஹான மவ்லிது தவறு என்று விமர்ச்சனம் செய்து கொண்டு உள்ளார்கள், உண்மையில் எவர்கள் அவ்வாறு வெளியிடுகிறார்களோ குர் ஆன், ஹதிஸ்களில் ஞானம் இல்லாமல் வெளியிட்டு உள்ளார்கள், இதிலும் விமர்ச்சிபவர்கள் உண்மையான விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டு மற்றும் தெரிந்து கொண்டு மக்கள் இடையே தவறாக விமர்ச்சனம் செய்து உள்ளார்கள், இன்சா அல்லாஹ் ஸுப்ஹான மவ்லித்தில் இடம் பெற்றிருக்கும் வார்த்தைகள் குர் ஆன், ஹதிஸ் மற்றும் ஆதரபூர்வமான நூல்களில் இருந்து தான் தொகுக்கப்பட்டுள்ளது தான் என புரிந்து கொள்வீர்கள்.

விமர்ச்சிபவர்கள் வைக்கும் விமர்ச்சனம்:

பாவங்களை நபிகள் நாயகம் மன்னிக்க முடியுமா
كَفِّرُوْا عَنِّيْ ذُنُوْبِيْ
وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!
என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!
‘யா நபி (நபியே!)’ என்று அழைத்துப் பாடப்படும் முதல் பாடலின் சில வரிகள் இவை.
يَا مَنْ تَمَادَى وَاجْتَرَمْ
تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ
குற்றமும் பாவமும் செய்து விட்டவனே!
மன்னிப்புக் கேள்! குற்றத்தை ஒப்புக்கொள். அருளை எதிர்பார்.
சரணடைந்து விடு! (இத்தனையையும் ஹரமில் (மதீனாவில் தங்கியுள்ளவர்களிடம் கேள்!’
சல்லூ அலாகைரில் இபாத்’ என்ற பாடலின் சில வரிகள் இல்லை.
وَاعْطِفْ عَلَيَّ بِعَفْوٍ مِنْكَ يَشْمَلُنِيْ
உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.

நமது பதில்:

وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلاَّ لِيُطَاعَ بِإِذْنِ اللّهِ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُواْ أَنفُسَهُمْ جَآؤُوكَ فَاسْتَغْفَرُواْ اللّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُواْ اللّهَ تَوَّابًا رَّحِيمًا

அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள். (4:64)

(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். திருக்குர்ஆன் 3:31)

விமர்ச்சிபவர்கள் வைக்கும் விமர்ச்சனம்:

நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?
اَلسَّلاَمُ عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
‘நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்’
وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا
لَدَيْهِ بُرْءُ السَّقَامِ
‘நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் அவரிடமே (நபியிடமே உள்ளது’
وَمَرِيْضًا اَنْتَ عَائِدُهُ
قَدْ اَتَاهُ اللّهُ بِالْفَرَجِ
‘(நபியே நீங்கள் எந்த நோயாளியை விசாரிக்கச் சென்றாலும் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் வழங்கி விடுவான்!’ என்றெல்லாம் ஸுப்ஹான மவ்லிதில் கூறப்பட்டுள்ளது..


நமது பதில்:

ஈஸா (அலை) அவர்கள் நோய்களை குணப்படுதுவர்கள். (அல்குர்ஆன் : 3. 49)

ஜுஅய்த் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்கள் சாயிப் இப்னு யஸீத்(ரலி) அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர்களாக, (அந்த வயதிலும்) திடகாத்திரமானவர்களாக (கூன் விழாமல்) முதுகு நிமிர்ந்தவர்களாக கண்டேன். அவர்கள், 'எனக்குக் கேள்விப்புலன் மற்றும் பார்வைப் புலனின் நலம் அல்லாஹ்வின் தூதரின் பிரார்த்தனையால் தான் வழங்கப்பட்டுள்ள என்பதை நான் அறிந்திருக்கிறேன். என் தாயின் சகோதரி என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியின் மகன் நோயுற்றிருக்கிறார். இவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்யுங்கள்' என்று கூறினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் எனக்காக பிரார்த்திதார்கள்" என்று கூறினார்கள். (இமாம் புஹாரி(ரஹ்)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள் இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு 'உம்முடைய மேலங்கியை விரியும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து)விட்டுப் பின்னர், 'அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக!" என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.(இமாம் புஹாரி(ரஹ்))

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யாரேனும் ஒரு) மனிதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளேமா காயேமா ஏற்பட்டால், தமது ஆட்காட்டி விரலைப்
பூமியில் வைத்து (மண்ணைத் தொட்டு) விட்டு அதை உயர்த்தி, "அல்லாஹ்வின் பெயரால்!எங்களில் சிலரது உமிழ்நீரோடு எமது இந்தப் பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள்
இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் நோயுற்றிருப்பவரைக் குணப்படுத்தும்'' என்று கூறுவார்கள்.இமாம் முஸ்லிம்(ரஹ்)

உஸ்மான் இப்னு ஹுனைப்(ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஒரு தடவை, கண்பார்வையற்ற ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, யாரசூலல்லாஹ்! என்னைக் குணப்படுத்தும்படியாக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்!! என வேண்டிக் கொண்டார். அதற்கு நபியவர்கள், நீ விரும்பினால் உனக்காக பின்னர் துஆச் செய்கின்றேன். அது உனக்கு சிறந்ததாக அமையும். அல்லது இப்போதே விரும்பினால் அதை செய்கிறேன் என்று கூறினார்கள். இப்போதே துஆச் செய்யுங்கள்!! என அவர் வேண்டிக் கொண்டார்.
நபியவர்கள் எழுந்து, அம்மனிதரை உழுச் செய்யுமாறு ஏவினார்கள். பூரணமாக உழு செய்தபின், இரண்டு ரஅகத்துகள் தொழச் சொன்னார்கள். அதன்பின் இவ்வாறு பிரார்த்தியுங்கள் என்று கீழ்க்காணும் துஆவை கற்றுக் கொடுத்தார்கள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் நபிமார்களுக்கெல்லாம் அருளான முஹம்மத் (ஸல்) அவர்களின் பொருட்டினால் உன்னை முன்னோக்கிக் கேட்கிறேன். முஹம்மதே! நிச்சயமாக நான் எனது குறித்த தேவை நிறைவேற்றப்படுவதற்காக தங்களைக் கொண்டு எனது இரட்சகனிடம் முன்னோக்கியுள்ளேன். யாஅல்லாஹ்! எனது விடயத்தில் அவரை பரிந்துரைக்கச் செய்வாயாக!!இமாம் நஸயி(ரஹ்), இமாம் பைஹகீ(ரஹ்), இமாம் தபரானீ(ரஹ்), இமாம் திர்மிதீ(ரஹ்), இமாம் ஹாகிம்(ரஹ்)


இன்னும் பல ஹதிஸ்கள் உள்ளது, அதை எல்லாம் இப்போதைக்கு பதிக்க முடியாது, ஏனென்றால் அது எல்லாம் குர்ஆனுக்கு முரணாக உள்ளது என்று கட்டுகதைகளை அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களிடம் சொல்லி அந்த ஸஹிஹ்வான ஹதிஸையும் தூக்கி எறிந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் பதிக்க விருப்பமில்லை,

மறுப்பவர்கள் வைக்கும் விமர்ச்சனம்:

உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா?
بَسَطْتُّ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ
اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ
مُسْتَشْفِعًا نَزِيْلَ هَذَالْحَرَمِ
فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ
فَاَنْجِدُوالْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ
وَاَطْفِئُوْا بِالْبَسْطِ وَهْجَ الْحُرَقِ
وَاَبْرِدُوْا بِاللُّطْفِ حَرَّ الْكَبِدِ
எனது வறுமை, கவலை காரணமாகக் கையேந்துகிறேன்.
உங்களின் அளப்பரிய அருளையும், வள்ளல் தன்மையையும் நான் நம்பியுள்ளேன்.
இந்த ஹரமில் (மதீனாவில் தங்கியிருக்கும் உங்களின் பரிந்துரையை வேண்டுகிறேன்.
என்னை நிரந்தரமான உதவி கொண்டு கவனித்து விடுங்கள்!
மூழ்குவதற்கு முன் இந்த ஏழையைக் காப்பாற்றி விடுங்கள்!
உங்கள் தாராளத் தன்மையால் எரியும் வெப்பத்தை அணைத்து விடுங்கள்!
உங்கள் இரக்கத்தால் ஈரலின் வெப்பத்தைக் குளிரச்செய்யுங்கள்!
اِنَّا بِهِ نَسْتَجِيْر
فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ
எல்லாத் துன்பங்களையும் நீக்கிட அவரிடம் நாம் அடைக்கலம் தேடுகிறோம்.

இந்த வரியில் உள்ள மற்றொரு தவறாகும்.
ضَاقَتْ بِيَ الاَسْبَابُ
فَجِئْتُ هَذَا الْبَابَ
اُقَبِّلُ الاَعْتَابَ
اَبْغِيْ رِضاَ الاَحْبَابَ
وَالسَّادَةِ الاَخْيَارِ
அல்லாஹு ஃகாலிகுனா என்று துவங்கும் பாடல் வரிகள் இவை!
இதன் பொருள் வருமாறு:
வாழ்க்கைச் சாதனங்கள் எனக்குச் சுருங்கிவிட்டன. எனவே இந்த வாசலுக்கு வந்துவிட்டேன்.

இவை யாவும் ஸுப்ஹான மவ்லிதில் காணப்படும் நச்சுக் கருத்துக்கள்!

நமது பதில்:

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தி தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்இயும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது.
(மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இழுந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!" என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) 'கனாத்' எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்))

நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு பிறகு உமர்(ரலி) அவர்களின் காலத்திலும் நபி(ஸல்) அவர்கள்:

உமர்(ரலி) அவர்களின் வாழ்கை வரலாறு:

மக்களே.., உங்களது ஆட்சியாளரின் கவனக் குறைவு காரணமாக இந்த தண்டனை இறங்கியிருக்கின்றதா அல்லது மக்களின் பாவங்களின் காரமணாக இந்த வேதனையை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோமா என்பது தெரியவில்லை. பாவத்தைச் சுமக்கின்றவர்கள் அனைவரும் இறைவனிடம் பிராயச்சித்தம் தேடிக் கொள்ளுங்கள், இந்த கடுமையான சூழ்நிலையிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்படி இறைவனிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

பிலால் பின் ஹாரிஸ்(ரலி) என்ற பனூ மஸ்னி கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு ஆட்டை அறுத்தார், அறுத்த அந்த ஆட்டில் எலும்பைத் தவிர வேறொன்றுமில்லை என்ற அளவுக்கு அங்கே பஞ்சம் தலைவிரித்தாடியது. அன்றைய இரவில் அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டார். அந்தக் கனவில்..,

உமரிடம்(ரலி) சென்று எனது இந்தச் செய்தியைத் தெரிவித்து விடுங்கள். மார்க்கத்தில் அவரை உறுதியாக இருக்கின்றார். இந்த சோதனையை விட்டும் விலகிக் கொள்வதற்கு மேலும் மார்க்கத்தில் உறுதியாக இருக்கும்படி அவரிடம் கூறுங்கள் என்று அந்தக் கனவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்த இந்த செய்தியை உமர் (ரலி) அவர்களிடம் பிலால் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் தெரிவித்து விடுகின்றார்கள். இந்தச் செய்தியின் மூலமாக கிடைக்கின்ற படிப்பினை என்ன என்பதனை உமர் (ரலி) அவர்களால் சரியாக ஊகித்துக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை தன்னிடம் ஏதேனும் பொடுபோக்குத் தனங்கள் இருப்பதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்தச் செய்தி தெரிவிக்கின்றதோ என்றும் கருதலானார்கள். இறையச்சத்தின் காரணமாக அவரது உடல் நடுங்கிற்று. பள்ளிவாசலுக்குச் சென்ற உமர் (ரலி) அவர்கள், தன்னிடம் ஏதேனும் குறைகள் காணப்படுகின்றனவா என்று மக்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார்கள். உங்களிடம் எந்த பலவீனங்களும் காணப்படுவதாக எங்களால் அறிய முடியவில்லை என்று மக்கள் கூறலனார்கள்.

பின்னர், மக்கள் ஒன்று சேர்ந்து.., உமரே.., இந்தக் கேள்வியை எங்களை நோக்கி வீசக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கான அவசியம் என்ன வந்து விட்டது உங்களுக்கு என்றார்கள். அதன் பின்னர் பிலால் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களை அழைத்த உமர் (ரலி) அவர்கள், அந்த கனவை மக்களுக்கு விளக்கப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்கள். பிலால் (ரலி) அவர்கள் அந்தக் கனவைக் கூறி முடித்தவுடன், அங்கிருந்த நபித் தோழர் ஒருவர் எழுந்திருந்து, அமீருல் முஃமினீன் அவர்களே.., இந்தச் செய்தியில் உங்களுக்கு எதிராக எதுவும் காணப்படவில்லை. நம்மைச் சுற்றி இருக்கின்ற இந்த பஞ்சம் நம்மை விட்டு அகல்வதற்காக இஸ்திஸ்கா என்ற மழைத் தொழுகையைத் தொழும்படித் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம்மை அறிவுறுத்தி இருக்கின்றார்கள் என்று விளக்கமளித்தார்.

அதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள் ஒருநாளை நிர்ணயித்து, அந்த நாளில் மழைத் தொழுகை தொழப்படும் என்று அறிவிப்புக் கொடுத்தார்கள். அன்றைய நாளில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் சிறப்பான மழைத் தொழுகையை தொழ வேண்டும் என்ற உத்தரவையே உமர் (ரலி) அவர்கள் வழங்கினார்கள். மதீனாவில் முஸ்லிம்கள் மழைத் தொழுகைக்கான ஒன்று கூடினார்கள். அன்று நடந்த தொழுகையில் உரையாற்றிய உமர் (ரலி) அவர்கள் :

நாம் பாவங்கள் செய்தவர்களாகி விட்டோம். நம்முடைய பாவங்களுக்கு பிராயச்சித்தமாக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். யா அல்லாஹ்..! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம்.., உன்னிடமே உதவி கோருகின்றோம். யா அல்லாஹ் எங்களது பாவங்களை மன்னிப்பாயாக.., எங்கள் மீது கருணை காட்டுவாயாக, எங்கள் மீது இரக்கம் காட்டுவாயாக..!

இவ்வாறாக மழைத் தொழுகை நடத்தி முடிக்கப்பட்டதன் பின், ஒரு வார காலத்திற்குள் மதீனாவின் வான் பரப்பில் மேகங்கள் சூழத் துவங்கின. கன மழை பொழிந்தது. இதன் பின்னர், உமர் (ரலி) அவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துமுகமாக சிறப்புத் தொழுகையையும் நடத்தினார்கள். மழைக்குப் பின்னர் நிலைமைகள் முற்றிலும் மாறியது, பஞ்சம் நீங்கியது. மிகவும் கடுமையானதொரு சூழ்நிலையில் உமர் (ரலி) அவர்கள் மிகவும் சமர்த்தியமான முறையில் உமர் (ரலி) அவர்கள் ஆட்சியை நிர்வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


ஹஸரத் பிலால்(ரலி) அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுடன் நீண்ட காலம் இருந்தார்கள். இஸ்லாமிய சட்டங்களை நேரடியாகவே நாகயம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டவர்கள் என நாம் அறிவோம். ஆகவே நாகயம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களை அழைத்தல் அவர்கள் மூலம் தவஸ்ஸுல் தேடுதல் ஷிர்க் என்றிருந்திருந்தால் நிச்சயமாக ஹஸரத் பிலால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அறிந்திருந்து செய்திரந்தால் நிச்சயமாக ஏனைய சஹாபாக்கள் அவரை இதை விட்டும் தடுத்திருப்பார்கள். இதுவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மூலம் தவஸ்ஸுல் தேடுவது ஆகும் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரமாகும்.

உமர் இப்னு கத்தாப் அவர்களது காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்ட போது, அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்கள் மூலம் மழை தேடிப் பிரார்த்தித்துள்ளார்கள். யாஅல்லாஹ்! நாங்கள் உனது நபியின் பொருட்டினால் தண்ணீர் வேண்டிய போதெல்லாம் நீ எமக்கு மழையைத் தருவித்தாய். இப்போது அந்த நபியினது பெரிய தந்தையின் பொருட்டினால் கேட்கின்றோம். எமக்கு மழையை அருள்வாயாக|| இப்பிரார்த்தனையின் பின் அவர்கள் மீது அல்லாஹ்வினால் மழை பொழியப்பட்டது.
மேலும்
அனஸ்(ரலி) அறிவித்தார். மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் பொழுது உமர்(ரலி), அப்பாஸ்(ரலி) மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். 'இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய். (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!' என்று உமர்(ரலி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.(இமாம் புஹாரி(ரஹ்))


'மதினா மக்கள் கடும் வரட்சியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் தங்களின் கஷ்டங்களை அன்னை ஆயிஷா(ரலி) நாயகியிடம் முறையிட்டார்கள்: அதைக் கேட்ட அவர் நாகயம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் கப்ரைப் பார்த்தவர்களாக இடையில் ஏதும் தடையில்லாது வானத்தைப் பாருங்கள் (அவர்களை அல்லாஹ்விடம் ஷபாஅத் செய்வதற்காக கொண்டு செல்லுங்கள்)அவர்களும் அப்படியே செய்தார்கள் இந்த தவஸ்ஸுலின் முடிவாக வானத்தில் மழை பெய்யத் தொடங்கியது. புற்கள் முலைத்தன. ஒட்டங்கள் அதை உண்டன. ஆதனால் கொழுப்புக்கள் அதிகரித்து அவைகள் குண்டாகின. இதனால் அந்த ஆண்டு 'தெளிந்த ஆண்டு' என பெயர் சூட்டப்பட்டது. (இமாம் தாரமி(ரஹ்))

ஆனால் பொய்யர்கள் நபி(ஸல்) அவர்களின் முஹப்பத்தை முழுவதுமாக நமது இதயத்திலிருந்து எடுக்க வேண்டும் என்பதற்காக கொஞ்ம் கொஞ்மாக விசகருத்துகளை நமது மனதில் விதைத்து கொண்டு இருக்கிறார்கள் எனபது தான் உண்மை.


விமர்ச்சிப்பவர்கள் வைக்கும் விமர்ச்சனம்:

مَازَالَ نُوْرُ مُحَمَّدٍ مُتَنَقِّلاً
فِى الطَّيِّبِيْنَ الطَّاهِرِيْنَ ذَوِى الْعُلاَ
حَتَّى لِعَبْدِ اللّهِ جَاءَ مُطَهَّرًا
وَبِوَجْهِ آمِنَةٍ بَدَا مُتَهَلِّلاً
ஆதரிக்க முடியாத இந்தப் பாடல்களைத் தான் வணக்கம் என்று நாம் செய்து வருகிறோம்.
وَضَعَتْهُ آمِنَةٌ وَلَمْ يَشْعُرْ بِهَا
اَحَدٌ عَنْ عُيُوْنِ الْحُسَّدِ
பொறாமைக்காரர்களின் கண்களை விட்டும் மறைப்பதற்காக ஆமினா அவர்கள் யாருமே அறியாத வகையில் நபியவர் களைப் பெற்றெடுத்தார்கள் என்பது இந்த வரியின் பொருள்
ஸுப்ஹான மவ்லூதில் இடம்பெறும் கொசுறுக் கவிதை இது. முஹம்மது(ஸல்) அவர்களின் ஜோதி உள்ளும் புறமும் தூயவர்களான உயர்ந்தவர்களிடையே மாறிமாறி இடம்பெற்று வந்து முடிவில் அப்துல்லாஹ்விடம் வந்து சேர்ந்தது. அதன் பின் ஆமினாவின் முகத்தில் பிரகாசமாய் வந்தடைந்தது.
என்பது இதன் பொருள்.

நமது பதில்:

வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.( திருக்குர்ஆன் 5:15)

இதில் பேரொளி என்பது நபி(ஸல்) அவர்கள் தான் என்பதை திர்குர் ஆன் விரிவுரையாளர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு ஸாரியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் என்னை என் தாய் பெற்றெடுக்கும் போது ஒரு பேரொளி என்னுடைய தாயின் உடலிறிந்து வெளிப்பட்டு அது சிரியாவின் கோட்டை வரை சென்றது(இமாம் பைஹகி(ரஹ்),இமாம் ஹைதமி(ரஹ்),இமாம் அஹமது(ரஹ்), இமாம் ஹாகிம்(ரஹ்)..)

அல்லாஹ், ஆதம்(அலை) அவர்களை படைக்கும்போது, எனக்கு என்னுடைய வழித்தோன்றல்களை அறிவித்து கொடுத்தான், அந்த நேரத்தில் ஆதம்(அலை) அவர்கள் ஒருவர் மற்றவர்களைவிட மேன்மையாக இருந்தார்கள், இறுதியில் அவர் என்னை பிரகாசமாக ஒளிர்வதைப் பார்த்தார்கள், அப்போது ஆதம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் இது யார் என்று கேட்டார்கள், அப்போது அல்லாஹ் இவர்தான் உனது முதல் சந்ததியான அஹமது இறுதியில் வரக்கூடியவர்கள் ஆவார்கள், மேலும் மறுமையில் இவர் தான்  பரிந்துரை செய்வதில் முதலாவது மனிதர் ஆவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் பைஹகி(ரஹ்)

என் ஒளியை வலிமையாக்குவாயாக என நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,(இமாம் முஸ்லிம்(ரஹ்)

அப்துல்லாஹ்(ரலி) அவர்களின் இரண்டு கண்களின் இடையில் இருந்த  ஒளி, ஆமினா(ரலி) அவர்களிடம் வந்தடைந்தது என  உம்மு காதால்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்( ஹதிஸின் சுருக்கம் இமாம் இப்னு கதீர்(ரஹ்)

இதிலிருந்து சுப்ஹான மவ்லிதில் பாடப்பட்ட கவிதை மேலுள்ள ஹதிஸ்களின் நூல்களிலிருந்து பெறப்பெட்டவையாகும்.

விமர்ச்சிப்பவர்கள் வைக்கும் விமர்ச்சனம்:

அபத்தங்கள்
اَقْسَمْتُ فِى نَصْرِيْ بِكُمْ عَلَيْكُمُ
இந்த வரி ஸுப்ஹான மவ்லூதில் யாமுஸ்தபா’ என்று துவங்கும் பாடலில் இடம் பெற்றுள்ளது.

‘நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உங்கள் மீதே நான் சத்தியம் செய்கிறேன்’ என்பது இந்த வரியின் பொருள்.

நமது பதில்:

 (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.( திருக்குர்ஆன் 15:72)

இதில் அல்லாஹ் தெளிவாக நமக்கு விளக்கி கொடுக்கின்றான்,

குர் ஆனிலிருந்து பெறப்பட்ட வார்த்தைத்தான் ஸுப்ஹான் மவ்லிதில் இடம் பெற்றுள்ளது தவிர..சுயமாக யாரும் கூறவில்லை, திரு குர் ஆன் வசனம் கூட தெரியாமல் ஸுப்ஹான மவ்லித்தில் தவறு இருக்கிறது என்று கூறுவது தவறு. குர் ஆனுக்கும், ஹதிஸிற்கும்  மாற்றமாக யாரும் கூறவில்லை

விமர்ச்சிபவர்கள் வைக்கும் விமர்ச்சனம்:

وَاَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ
‘உண்மையாகவே நீங்கள் அனைத்துப் படைப்பினங்களுக்கும் இரட்சகராக இருக்கிறீர்கள் என்ற வரியும்,
لَهُ جَزِيْلُ الْهِبَاتِ
مِنْهَا نَعِيْمُ الدَّوَامِ
அவர்களுக்கு ஏராளமான அருட்கொடை வழங்குதல் உள்ளது. நிரந்தரமான அருட்கொடையும் அவற்றில் ஒன்றாகும்’ என்ற வரியும்

நமது பதில்:

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.( திருக்குர்ஆன் 21:107)

இந்த குர் ஆன் வசனம் தெரியாமல் இருந்து கொண்டு ஸுப்ஹான மவ்லித்தில் தவறு என்று கூறுவது மிக்ப் பெரும் தவறு.

விமர்ச்சிபவர்கள் வைக்கும் விமர்ச்சனம்:

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ
சிரமங்களை(கவலைகள்,துன்பங்கள்) நீக்குவதன் மூலம் என் உயிருக்கு நீங்கள் சுகமளியுங்கள் என்ற வரியும்.

நமது பதில்:

(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.(திரு குர் ஆன் 9:128)

நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.(திருகுர்ஆன் 21:84))

நபி(ஸல்) அவர்கள் நமக்காக பிரார்த்தனையும் செய்கின்றார்கள், நமது கவலைகள், துன்பங்கள், கஷ்டங்கள் சிரமங்கள் அனைத்தையும் போக்குகின்றார்கள், அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்கின்றார்கள், அல்லாஹ் உடைய இந்த வசனத்தை எல்லாம் அவர்கள் ஓதி உள்ளார்களா? இல்லை தெரிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்குகிறார்களா?

மேலும்

மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, 'நமக்கு ஏற்பட்டுள்ள கவலையிலிருந்து(துன்பங்களிலிருந்து) நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)' என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, 'நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். 'நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்' என்று சொல்வார்கள்.
உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம்(அலை) அவர்களிடம்) செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் - அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, 'நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.
உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) 'உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும் அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், 'குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை' என்று சொல்வேன்.
என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.இமாம் புஹாரி(ரஹ்),இமாம் முஸ்லிம்(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்),இமாம் அபுதாவுத்(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்),இமாம் நஸயி(ரஹ்)....))

விமர்ச்சிபவர்கள் வைக்கும் விமர்ச்சனம்:

مَا لِيْ سِوَى حُبِّيْ لَدَيْكَ وَسِيْلَةٌ
فَامْنُنْ عَلَيَّ بِفَضْلِ جُوْدِكَ اَسْعِدِ
உங்கள் நேசத்தைத் தவிர என்னிடம் எந்தச் சமாதானமும் இல்லை. எனவே உங்கள் அதிகப்படியான வள்ளல் தன்மையில் எனக்கு வழங்குங்கள் என்னைப் பாக்கியவானாக ஆக்குங்கள் என்ற வரியும்.


நமது பதில்:

(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 3:31)

'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்),இமாம் முஸ்லிம்(ரஹ்)

மனைவி மக்களையும் பெற்றோரையும், மக்கள் அனைவரையும் விட அதிகமாகஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பது கடமை ,அவ்வாறு அல்லாஹ்வின் தூதரை இந்த அளவு நேசிக்காதவரிடம் இறைநம்பிக்கை இல்லை என்று கூறலாம்..

ஒருவருக்கு தம் குடும்பத்தார்,தமது செல்வம்,ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை எந்த அடியாரும் அல்லது எந்த மனிதரும்,இறை நம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்கள் இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் முஸ்லிம்(ரஹ்)

இன்சா அல்லாஹ் மற்ற விமர்ச்சனங்களுக்கு விரைவில்...

1 கருத்து:

  1. தாங்கள் கூறிய அனைத்தும் சரிதான். ஆனால் ரசூல்(ஸல்) அவர்கள் ஹயாத்துடன் இருக்கும்பாேதுநேரடியாக அவர்கள்கேட்டார்கள். நாம் அவர்களை பின் பற்றி சுன்னத்தான காரியங்ளை செய்தால் மறுமையில் நமக்கு அவர்களுடைய சிபாரிசு கிடைக்கும்.தவிர சலவாத்தை தவிர நீங்கள்செய்யும் இந்த மவ்லிது அவர்களை சென்று அடையாது.

    பதிலளிநீக்கு